ARTICLE AD BOX
விஜய்யின் கடைசி திரைப்படமான 'ஜன நாயகன்' பட இசை வெளியீட்டு விழா இன்று பிரமாண்டமான முறையில் மலேசியாவிலுள்ள புக்கிட் ஜலீல் ஸ்டேடியத்தில் நடைபெற்று வருகிறது.
அ. வினோத் இயக்கியிருக்கும் இப்படத்தில் பூஜா ஹெக்டே, பாபி டியோல், மமிதா பைஜூ, பிரியாமணி, பிரகாஷ் ராஜ் ஆகியோர் முக்கியக் கதாபாத்திரங்களில் நடித்திருக்கிறார்கள்.
#Thalapathy69 #Jananayaganபடக்குழுவினர் பலரும் நேற்றைய தினம் விமானம் மூலம் மலேசியா புறப்பட்டனர். இந்த நிகழ்வுக்கு கருப்பு நிறக் கோட் சூட் அணிந்திருக்கிறார் விஜய்.
மேடையில் நாசர் பேசுகையில், "அமைதியும் பணிவையும் தவிர கூர்மையான ஆயுதம் எதுவும் கிடையாது. அதுதான் உங்களின் அடையாளம்.
படுத்த படுக்கையாக இருந்த என்னுடைய மகனை எழுந்து நடக்க வைத்தது நீங்கள்தான். இதை பொது வெளியில் அடிக்கடி சொல்ல வேண்டாம் எனச் சொல்லியிருக்கிறீர்கள்.
நாசர்அதை சொல்ல வேண்டியது என்னுடைய கடமை. இந்த மேடை மட்டுமல்ல, இனி பல மேடைகளிலும் அதை சொல்லுவேன்.
நீங்கள் படத்தில் மீண்டும் நடிக்க வேண்டும். இது எங்களுடைய வேண்டுகோள்!" என்றார்.

11 hours ago
2







English (US) ·