ARTICLE AD BOX
விஜய்யின் கடைசி திரைப்படமான 'ஜன நாயகன்' பட இசை வெளியீட்டு விழா இன்று பிரமாண்டமான முறையில் மலேசியாவிலுள்ள புக்கிட் ஜலீல் ஸ்டேடியத்தில் நடைபெற்று வருகிறது.
அ. வினோத் இயக்கியிருக்கும் இப்படத்தில் பூஜா ஹெக்டே, பாபி டியோல், மமிதா பைஜூ, பிரியாமணி, பிரகாஷ் ராஜ் ஆகியோர் முக்கியக் கதாபாத்திரங்களில் நடித்திருக்கிறார்கள்.
#Thalapathy69 #Jananayaganபடக்குழுவினர் பலரும் நேற்றைய தினம் விமானம் மூலம் மலேசியா புறப்பட்டனர். இந்த நிகழ்வுக்கு கருப்பு நிறக் கோட் சூட் அணிந்திருக்கிறார் விஜய்.
இயக்குநர் நெல்சன் மேடையில் பேசுகையில், "ஆடியோ லாஞ்சுக்கு அழைச்சுட்டு வந்தாங்க. ஆனா, இங்க பார்த்தால் அர்ஜெண்டினா ஃபுட்பால் மேட்ச் மாதிரி இருக்கு. மலேசியாவுக்கு வந்தும் சாரைப் பார்க்க முடியல.
இப்போகூட ஸ்டேஜ்ல அவரைப் பார்த்தா அவர் சிங்கப்பூர்ல இருக்கிற மாதிரி இருக்கு (நீளமான ராம்ப் வால் மேடையை சுட்டிக் காட்டி நகைச்சுவையாக பேசுகையில்...) . விஜய் சார்கூட இன்னொரு படம் பண்ணனும்னு ஆசை இருக்கு!" என்றார்.

12 hours ago
2







English (US) ·