ARTICLE AD BOX
விஜய்க்கு 51-வது பிறந்தநாள் இன்று. விஜய்யின் கடைசித் திரைப்படமான 'ஜன நாயகன்' படத்தின் முன்னோட்ட வீடியோ விஜய்யின் பிறந்தநாள் ஸ்பெஷலாக வெளியாகியிருக்கிறது.
Jana Nayagan - Vijay அ. வினோத் இயக்கும் இப்படத்தில் பூஜா ஹெக்டே, மமிதா பைஜு, ப்ரியாமணி, பாபி தியோல் ஆகியோரும் முக்கியக் கதாபாத்திரங்களில் நடித்து வருகின்றனர்.
நடிகை மமிதா பைஜுவுக்கும் இன்றுதான் பிறந்தநாள். அவருக்கும் சினிமா பிரபலங்கள் பலர் பிறந்தநாள் வாழ்த்துகளைக் கூறி வருகின்றனர்.
Vijay: ``ஜனநாயகன்ல நடிக்கிறேன்; விஜய் சார் ரகசியமாக பண்ற வேலை அது'' - பாபா பாஸ்கர்விஜய் பற்றி சமீபத்திய பேட்டி ஒன்றில் மமிதா பைஜு, "விஜய் சார் ரொம்பவே பண்பாக இருப்பார். படப்பிடிப்புத் தளத்திற்கு அவருக்குச் சொல்லப்பட்ட நேரத்திற்கு முன்பே அவர் வந்துவிடுவார். விஜய் சார் சூப்பர் கூல்! எப்போதுமே அவர் அமைதியாகத்தான் இருப்பார்" எனக் கூறியிருந்தார்.
தற்போது சமீபத்திய நிகழ்வு ஒன்றிலும் விஜய் பற்றிப் பேசியிருக்கிறார். அந்தக் காணொளியும் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.
அந்த நிகழ்வில் அவர், "நான் விஜய் சாரிடம், 'இதுதான் உங்களுக்குக் கடைசி திரைப்படமா? அப்படித்தான் எல்லோரும் சொல்லிக் கொண்டிருக்கிறார்கள்' எனக் கேட்டேன்.
Jana Nayagan: "விஜய் சார் 'ஜன நாயகன்' செட்டில் சூப்பர் கூல்!" - மமிதா பைஜூ ஷேரிங்
Mamitha Baiju About Vijayஅதற்கு அவர், 'தெரியவில்லை. தேர்தல் முடிவுகளைப் பொறுத்துத்தான் அது தெரியும்' என்றார். கடைசிக் கட்டப் படப்பிடிப்புகளில் நாங்கள் அனைவரும் எமோஷனலாகிவிட்டோம்.
விஜய் சாரின் கடைசி நாள் படப்பிடிப்பு முடிந்ததும், அவருடன் புகைப்படம் எடுக்கும்போது நானும், சுற்றி இருந்த அனைவரும் எமோஷனலாகிவிட்டோம். அப்போது விஜய் சாரும் எமோஷனலாகிவிட்டார்" எனக் கூறினார்.
"இந்திய சினிமாவின் முகத்தை மாற்றிய ஒரு ஐகானின் கொண்டாட்டம்" - ஜன நாயகன் குறித்து தயாரிப்பாளர்சினிமா விகடனின் பிரத்யேக Whatsapp க்ரூப்
https://chat.whatsapp.com/JSk78H7siYK4aL2qO1RglR
சினிமா தொடர்பான எக்ஸ்க்ளூசிவ் அப்டேட், அசத்தல் பேட்டிகள், டி.வி அப்டேட்கள் என எதையும் மிஸ் செய்யாமல் தெரிந்து கொள்ள...
உங்கள் வாட்ஸ் அப் மூலமே இணைந்திருங்கள் சினிமா விகடனுடன்...

6 months ago
7





English (US) ·