Jana Nayagan: "விஜய் சார் 'ஜன நாயகன்' செட்டில் சூப்பர் கூல்!" - மமிதா பைஜூ ஷேரிங்

6 months ago 7
ARTICLE AD BOX

விஜய்-க்கு 51-வது பிறந்தநாள் இன்று. விஜய்யின் கடைசி திரைப்படமான 'ஜனநாயகன்' படத்தின் முன்னோட்ட வீடியோ விஜய்யின் பிறந்தநாள் ஸ்பெஷலாக வெளியாகியிருக்கிறது.

'ஜனநாயகன்' படத்தில் தங்களுடைய காட்சிகளை விஜய்யும் பூஜா ஹெக்டேவும் முடித்துக் கொடுத்துவிட்டார்கள்.

Jana NayaganJana Nayagan

படத்தில் பூஜா ஹெக்டே, ப்ரியாமணி, மமிதா பைஜு ஆகியோரும் முக்கியக் கதாபாத்திரங்களில் நடித்து வருகிறார்கள்.

அ. வினோத் இயக்கும் இந்தப் படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார்.

சமீபத்திய பேட்டியில் நடிகை மமிதா பைஜு விஜய் பற்றிப் பேசிய விஷயம் இணையத்தில் வைரலாகி வருகிறது. அந்தப் பேட்டியில் அவர், "விஜய் சார் ரொம்பவே பன்சுவலாக இருப்பார்.

படப்பிடிப்புத் தளத்திற்கு அவருக்குச் சொல்லப்பட்ட நேரத்திற்கு முன்பே அவர் வந்துவிடுவார். விஜய் சார் சூப்பர் கூல்! எப்போதுமே அவர் அமைதியாகத்தான் இருப்பார்.

Kubera: "குபேரா படத்தில் ஹீரோ நான்தான்!" - சக்சஸ் மீட்டில் நாகர்ஜூனா
Mamitha Baiju - Jana NayaganMamitha Baiju - Jana Nayagan

முக்கியமாக, நாம் பேசும் விஷயங்களை அவர் கூர்ந்து கவனிப்பார். 'ஜனநாயகன்' செட்டில் என்ன நிகழ்ந்தாலும் விஜய் சார் அதைக் கூலாகக் கையாள்வார்.

நான் அவரிடம் பல விஷயங்களைப் பற்றிப் பேசுவேன். அவர் அதையெல்லாம் கவனித்து 'ஹ்ம்ம்' என்ற பதிலைக் கொடுப்பார்," எனக் கூறியிருக்கிறார்.

நடிகை மமிதா பைஜுவுக்கும் இன்றுதான் பிறந்தநாள். அவருக்கும் சினிமா பிரபலங்கள் பலர் பிறந்தநாள் வாழ்த்துகளைக் கூறி வருகின்றனர்.

'ஜனநாயகன்' திரைப்படம் அடுத்த ஆண்டு ஜனவரி 9-ம் தேதி திரையரங்குகளில் வெளியாகவிருக்கிறது.

Vijay: "விஜய் சாரின் கடைசி படம் 'தளபதி 69' அல்ல; ஏனென்றால்..." - நடிகர் இ.வி.கணேஷ் பாபு பகிர்வு

சினிமா விகடனின் பிரத்யேக Whatsapp க்ரூப்

https://chat.whatsapp.com/JSk78H7siYK4aL2qO1RglR

சினிமா தொடர்பான எக்ஸ்க்ளூசிவ் அப்டேட், அசத்தல் பேட்டிகள், டி.வி அப்டேட்கள் என எதையும் மிஸ் செய்யாமல் தெரிந்து கொள்ள...

உங்கள் வாட்ஸ் அப் மூலமே இணைந்திருங்கள் சினிமா விகடனுடன்...

https://chat.whatsapp.com/JSk78H7siYK4aL2qO1RglR

Read Entire Article