Jasprit Bumrah: எங்க பையனைப் பற்றி உங்களுக்கு என்ன தெரியும்? - கடுப்பான பும்ராவின் மனைவி

8 months ago 8
ARTICLE AD BOX

இந்திய வேகப்பந்து வீச்சாளர் ஜஸ்பிரித் பும்ரா விளையாட்டு நிகழ்ச்சிகளைத் தொகுத்து வழங்கும் சஞ்சனா கணேசன் என்பவரைக் காதலித்து கடந்த 2021 ஆம் ஆண்டு திருமணம் செய்துக்கொண்டார்.

பும்ராவின் மனைவி சஞ்சனா கணேசன் பல தொலைக்காட்சி நிகழ்ச்சிகளையும் ஐபிஎல் தொடரின்போது கேகேஆர் அணிக்காக சில ரியாலிட்டி ஷோக்களையும் தொகுத்து வழங்கி இருக்கிறார். இவர்கள் இருவருக்கும் ஒன்றரை வயதில் அங்கத் என்ற மகன் இருக்கிறார்.

பும்ரா மகன் அங்கத் பும்ரா மகன் அங்கத்

தற்போது பும்ரா ஐபிஎல்-ல் விளையாடி வருகிறார். ஐபிஎல் போட்டியைக் காண பும்ராவின் மனைவி மற்றும் குழந்தை இருவரும் மைதானத்திற்கு சென்றிருந்தனர்.

போட்டியின் போது அங்கத் அமைதியாக ரியாக்சன் எதுவும் கொடுக்காமல் இருந்தது பேசுபொருளான நிலையில் பும்ரா மனைவி காட்டமாக பதிவு ஒன்றைப் பதிவிட்டிருக்கிறார்.

Jasprit Bumrah: மலிங்காவின் சாதனையை முறியடித்த பும்ரா - பயிற்சியாளர் குறித்து பேசியதென்ன?

அவர் வெளியிட்டிருக்கும் பதிவில், “என் மகன் அங்கத் பும்ரா ஒரு வைரல் செய்தியாக ஆக்கப்படுவதில் எங்களுக்கு துளியும் விருப்பமில்லை. ஆன்லைனில் உள்ளவர்கள் வெறும் 3 வினாடி வீடியோவை வைத்து அங்கத் யார்? அவர் எப்படிப்பட்டவர்? என தீர்மானிக்கின்றனர்.

பும்ரா மனைவியின் பதிவு பும்ரா மனைவியின் பதிவு

Trauma, Depression போன்றவற்றை ஒன்றரை வயதான ஒரு குழந்தையின் குணாதிசயங்களுடன் ஒப்பிட்டு பேசுவதை பார்க்கும்போது மிகவும் வருத்தமாக உள்ளது. எங்களின் மகனை பற்றியும், அவரின் வாழ்க்கையை பற்றியும் உங்களுக்கு ஒன்றும் தெரியாது” என்று பதிவிட்டிருக்கிறார்.

Umpire: ஐபிஎல் 2025; நடுவர்களின் சம்பளம் எவ்வளவு தெரியுமா?

Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group...

இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும் https://bit.ly/3OITqxs

வணக்கம்,

BIG BREAKINGS முதல்... அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.

ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்... https://bit.ly/3OITqxs

Read Entire Article