ARTICLE AD BOX
வெளிநாட்டிலிருந்து ஊருக்குத் திரும்பும் சக்தி (முகேன் ராவ்), ஒரு மாயப் பெட்டியில் அடைக்கப்பட்ட ‘ஜின்’னுடன் தன் வீட்டுக்கு வருகிறார்.
அது ஒரு அதிர்ஷ்டப் பேய் என்பது அவரது நம்பிக்கை. பால், பிஸ்கட்டால் மகிழும் அந்த ஜின்னை, செல்லப் பிராணி போலப் பராமரிக்கிறார்.
ஜின்னைத் தொட்டால், சக்திக்கு நல்லது நடக்கிறது; அதை அவர் ராசியாகக் கருதுகிறார். ஆனால், வீட்டில் திடீர் துயரங்களும் அமானுஷ்யங்களும் தோன்ற, ஜின் மீது குடும்பத்தாருக்குப் பயம் பரவுகிறது.
Jinn - The Pet Review | ஜின் விமர்சனம்ஒரு நாள், சக்தியின் காதல் மனைவி ப்ரியா (பவ்யா டிரிகா) ரத்தக் காயத்தில் கிடக்க, கொலை முயற்சிக்கு ஜின் காரணமென எல்லோரும் சந்தேகிக்கின்றனர்.
உண்மையில் என்ன நடந்தது, ஜின் குற்றவாளியா, அல்லது வேறு மர்மம் உள்ளதா என்பதைச் சொல்வதே இந்த ‘ஜின் தி பெட்’.
Manidhargal Review: அசத்தல் மேக்கிங்; ஆனால் அதீத எமோஷன்; மனதிற்கு நெருக்கமாகிறார்களா இந்த மனிதர்கள்?எமோஷன்களுக்குப் பொருந்தாத உடல்மொழியில் வலம் வருகிறார் முகேன் ராவ். ரீல்ஸ் மோடில் அவர் நடமாடுவது படத்திற்கு எந்தவித பலத்தையும் சேர்க்கவில்லை.
காதல், பாடல் என மற்றுமொரு வழக்கமான நாயகி பாத்திரத்தில் பவ்யா டிரிகா, பாஸ் மார்க் வாங்க முயல்கிறார்.
அபத்தமான காமெடிகளுக்கு நடுவே சொற்ப இடங்களில் மட்டுமே சிரிக்க வைக்க முயல்கிறார் பால சரவணன்; ஆனால், எழுத்தில் இல்லாத நகைச்சுவை பேச்சில் எப்படி வரும் என்ற கேள்வியும் எழவே செய்கிறது.
Jinn - The Pet Review | ஜின் விமர்சனம்பேயைப் பார்த்துப் பயப்படும் காட்சிகளிலும், ஆங்காங்கே சில நடிப்புக் காட்சிகளிலும் வினோதினி மற்றவர்களிடமிருந்து சற்று தனித்து நிற்கிறார்.
வடிவுக்கரசிக்கு நடிப்புக்கு வாய்ப்பளிக்காத கதாபாத்திர வடிவமைப்பு ஏமாற்றமளிக்கிறது. கூடவே ஆங்காங்கே இமான் அண்ணாச்சி செய்யும் பழங்கால காமெடிகளும் முகத்தைச் சுளிக்க வைக்கின்றன.
Lilo & Stitch Review: மழலை அன்புடன் சேரும் ஏலியன்! கோடைக் கால எண்டர்டெயினராக குழந்தைகளை ஈர்க்கிறதா?இசையமைப்பாளர் விவேக்-மெர்வின் இசையில் பாடல்கள் பெரிதாக ஈர்க்கவில்லை. பின்னணி இசை சில இடங்களில் சுவாரஸ்யமாக இருந்தாலும், படம் முழுவதும் சைலன்ஸ் இல்லாமல் டெசிபல் மீட்டரை எகிறச் செய்கிறது.
கமர்ஷியல் படத்திற்கு உரிய வண்ணமயமான ஒளிப்பதிவை வழங்கியிருக்கிறார் ஒளிப்பதிவாளர் அர்ஜுன் ராஜா.
Jinn - The Pet Review | ஜின் விமர்சனம்படத்தொகுப்பாளர் தீபக்குக்கு ஒரு கத்திரி மட்டும் போதாது என்பது போல எக்கச்சக்க காட்சிகள் உள்ளன.
ஒரு காட்சிக்கும் மற்றொரு காட்சிக்கும் தொடர்பு இல்லாத திரைக்கதையை இணைக்கப் போராடியிருக்கிறார்.
ஜின் பெட்டிக்குள் இருந்து வரும் கை, ஜின் உருவம் ஆகியவை சுமாரான கிராஃபிக்ஸில் வந்து போகின்றன.
Narivetta Review: உணர்வுபூர்வமான வேடத்தில் டொவினோ தாமஸ்; காவல் அதிகாரியாக சேரன்; இந்த வேட்டை எப்படி?ஆரம்பக் காட்சி பயமுறுத்தும் வகையில் சிறப்பாகவே தொடங்குகிறது. ஆனால், அதன் தாக்கத்தை அடுத்தடுத்த காட்சிகளுக்கு எடுத்துச் செல்லாமல் விட்டிருக்கிறார் இயக்குநர் டி.ஆர்.பாலா.
பெண்களைப் பாலியல் ரீதியாக அவமானப்படுத்தும் நகைச்சுவைகள் தேவையற்றவை. காதல் காட்சிகளுக்கு எந்த மெனக்கெடலும் இல்லாத எழுத்து மேலோங்குகிறது.
Jinn - The Pet Review | ஜின் விமர்சனம்பின்னர், ஒரு பாடல், ஒரு சண்டை, ஒரு காமெடி என, பெட்டிக்குள் அடைக்கப்பட்ட ஜின்னைப் போலப் படமும் ஒரு டெம்ப்ளேட்டுக்குள் சிக்கிக் கொள்கிறது.
AI மூலம் வரும் பின்கதை நன்றாக இருந்தாலும், அதை இந்தக் கதையுடன் இணைத்த விதம் ‘அடங்கப்பா!’ என்று சொல்ல வைக்கிறது.
Ace Review: மலேசியாவில் ரகளை செய்யும் விஜய் சேதுபதி - யோகி பாபு; இந்த ஆட்டம் எப்படி?யூடியூப் காணொளி போலத் தனித்தனியாகத் தொங்கும் நிகழ்வுகள், சுவாரஸ்யமான திரைமொழியாக மாறவில்லை.
ஜின் பேசும் விதம், அதன் குறும்புகள் ஆகியவற்றை மெருகேற்றி, முழுமையான குழந்தைகளுக்கான படமாகவே கொடுத்திருக்கலாம். ஆனால், இரட்டை அர்த்த வசனங்கள், பாடல்கள் எனச் சேர்த்து அந்த வாய்ப்பையும் வீணடித்துவிட்டனர்.
Jinn - The Pet Review | ஜின் விமர்சனம்மொத்தத்தில், ‘ஜின் தி பெட்’ அதிர்ஷ்டத்தை நம்புவதைவிட, திரைக்கதை மற்றும் ஸ்டேஜிங்கில் கவனம் செலுத்த வேண்டும் என்ற விழிப்புணர்வை ஏற்படுத்தி திரையரங்கை விட்டு வெளியேற்றுகிறது.
ராஜபுத்திரன் விமர்சனம்: அப்பா - மகன் பாசக்கதைதான்; ஆனால் இது ஏமாற்றமளிக்கும் டெம்ப்ளேட் சினிமா!சினிமா விகடனின் பிரத்யேக Whatsapp க்ரூப்
https://chat.whatsapp.com/JSk78H7siYK4aL2qO1RglR
சினிமா தொடர்பான எக்ஸ்க்ளூசிவ் அப்டேட், அசத்தல் பேட்டிகள், டி.வி அப்டேட்கள் என எதையும் மிஸ் செய்யாமல் தெரிந்து கொள்ள...
உங்கள் வாட்ஸ் அப் மூலமே இணைந்திருங்கள் சினிமா விகடனுடன்...

7 months ago
8





English (US) ·