Jio Star : 'அடுத்த மூன்றாண்டுகளில் 83,000 கோடி முதலீடு!' - ஜியோ ஸ்டாரின் திட்டம் என்ன?

7 months ago 8
ARTICLE AD BOX

ஜியோஸ்டார் (JioStar) நிறுவனம் அடுத்த மூன்று ஆண்டுகளில் $10 பில்லியன் (சுமார் ரூ. 83,000 கோடி) அளவுக்கு உள்ளடக்க தயாரிப்பில் முதலீடு செய்யவுள்ளதாக அறிவித்துள்ளது.

இது, இந்தியாவில் யூடியூப் செய்திருக்கும் $2.53 பில்லியன் முதலீட்டைத் தாண்டி வரலாற்றுச் சாதனை என ஜியோ ஸ்டார் தரப்பில் கூறுகின்றனர்.

உதய் சங்கர் உதய் சங்கர்

இந்த தகவல் சமீபத்தில் நடைபெற்ற WAVES மாநாட்டில் வெளியானது. “இந்திய ஊடகத் துறையின் கடந்த 25 ஆண்டுகள் மற்றும் 2047 யை நோக்கிய பயணம்” என்ற தலைப்பில், ஜியோஸ்டார் துணைத் தலைவர் உதய் சங்கரும், மீடியா பார்ட்னர்ஸ் ஆசியாவின் நிர்வாக இயக்குநர் விவேக் கவுடோவும் கலந்துகொண்ட உரையாடலின் போது இந்த அறிவிப்பு வெளியாகியது.

இந்திய ஊடகத் துறையின் வளர்ச்சியில் திருப்புமுனை!

உதய் சங்கர் கூறியதாவது: “கடந்த ஒரு தசாப்தத்தில் இந்தியாவில் வீடியோவை பார்க்கும் பார்வையாளர்களின் எண்ணிக்கை வெகுவாக பரவியிருக்கிறது. இது உலகளவில் பாராட்டத்தக்க முன்னேற்றம். ஆனாலும், ஸ்ட்ரீமிங் துறை இன்னும் முழுமையாக வளரவில்லை.

700 மில்லியன் பேர் ஸ்ட்ரீமிங் பார்வையாளர்களாக இருந்தாலும்,  அவர்களின் விருப்பத்தை உணர்ந்து முழுமையாக நாம் இன்னும் உள்ளடக்கங்களை கொடுக்கவில்லை.

உதய் சங்கர் உதய் சங்கர்

ஜியோஸ்டார் 2024-ல் ரூ. 25,000 கோடி, 2025-ல் ரூ. 30,000 கோடி, மற்றும் 2026-ல் ரூ. 32,000-33,000 கோடி வரை முதலீடு செய்கிறது.

இந்திய பார்வையாளர்களின் பாரம்பரியம் மற்றும் உள்ளூர் ரசனைகளுக்கு ஏற்ப உள்ளடக்கங்களை உருவாக்குவதே ஜியோஸ்டார் முதலீட்டின் நோக்கம். இது இந்திய ஊடகத் துறையின் வளர்ச்சியில் திருப்புமுனையாகும்.' என்றார்.

Read Entire Article