Joanna Child: `Age is just a number' - 64 வயதில் சர்வதேச கிரிக்கெட்டில் போர்ச்சுகல் பெண்மணி!

8 months ago 8
ARTICLE AD BOX

பெரும்பாலும் எந்த விளையாட்டாக இருந்தாலும், அதில் எத்தகைய ஜாம்பவானாக இருந்தாலும் 40 வயதுகளில் அனைவரும் தங்களின் ஓய்வை நோக்கிச் செல்வர். ஆனால், போர்ச்சுகல் நாட்டைச் சேர்ந்த ஜோனா சைல்ட் (Joanna Child) என்ற பெண்மணி தனது 64-வது வயதில் முதன்முறையாக சர்வதேச கிரிக்கெட்டில் அறிமுகமாகி, உலக அளவில் அதிக வயதில் சர்வதேச டி20 கிரிக்கெட்டில் அறிமுகமான இரண்டாவது நபர் என்ற சாதனைப் படைத்திருக்கிறார்.

 ஜோனா சைல்ட் ஜோனா சைல்ட்

ஜோனா சைல்ட் அறிமுகமான, நார்வே அணிக்கெதிரான 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரை போர்ச்சுகல் அணி 2 - 1 என வென்றிருக்கிறது. இந்தத் தொடரில், முதல் போட்டியில் மட்டுமே ஜோனா சைல்ட்டுக்கு பேட்டிங் செய்யும் வாய்ப்பு கிடைத்தது. அந்தப் போட்டியில், 2 ரன்கள் மட்டுமே அடித்தார்.

அதேபோல், இரண்டாவது போட்டியில் மட்டுமே இவருக்கு பவுலிங் செய்யும் வாய்ப்பு கிடைத்தது. அந்தப் போட்டியில் 4 பந்துகள் மட்டுமே வீசி விக்கெட் எதுவுமின்றி 11 ரன்களை இவர் விட்டுக்கொடுத்தார். போர்ச்சுகல் அணியின் வெற்றிக்கு தனிப்பட்ட முறையில் இவரின் பங்களிப்பு பெரிதாக இல்லையென்றாலும், போர்ச்சுகல் அணி முதல் போட்டியை 16 ரன்கள் வித்தியாசத்திலும், மூன்றாவது போட்டியை 9 விக்கெட் வித்தியாசத்திலும் வென்று தொடரைக் காப்பாற்றியது.

64-YEAR OLD JOANNA CHILD MADE HER T20I DEBUT FOR PORTUGAL. pic.twitter.com/lF3AZIvzdq

— Mufaddal Vohra (@mufaddal_vohra) April 11, 2025

ஜோனா சைல்ட் குறித்து பேசிய போர்ச்சுகல் அணியின் கேப்டன் சாரா ஃபூ-ரைலண்ட், "நாட்டிலுள்ள பல கிரிக்கெட் வீரர்களுக்கு ஜோனா சைல்ட் ஓர் உத்வேகம்" என்று புகழாரம் சூட்டினார்.

கிரிக்கெட் வரலாற்றில் அதிக வயதில் அறிமுகமானவராக UK ஆட்சிக்குட்பட்ட ஜிப்ரால்டர் நாட்டைச் சேர்ந்த சாலி பார்டன் (கடந்த ஆண்டு 66 வயதில் அறிமுகமானார்) இருக்கிறார்.

RCB vs DC: "இது என் ஊரு; என்னோட கிரவுண்டு" - வெற்றி பின் ஆட்டநாயகன் கே.எல். ராகுல் பேசியது என்ன?
Read Entire Article