Jonita Gandhi: "சமூக வலைதளங்களில் பாலியல் ரீதியான தொல்லைகள் நிறைய நடக்கின்றன" - பாடகி ஜொனிதா காந்தி

6 months ago 7
ARTICLE AD BOX

பஞ்சாப் குடும்பத்தில் பிறந்து கனடாவில் படித்து வளர்ந்து, இப்போது இந்திய அளவில் பிரபல பாடகியாக இருப்பவர் ஜொனிதா காந்தி.

ஏ.ஆர்.ரஹ்மான் இசைக் கச்சேரியில் சிவாஜி படத்தில் இடம்பெற்ற 'அதிரடிக்காரன்' பாடலை மின்சாரம் பாய பாடி தமிழ் ரசிகர்களைத் திரும்பிப் பார்க்க வைத்தவர். தமிழ், உருது, தெலுங்கு, இந்தி எனப் பல மொழிகளில் பாடல்கள் பாடியிருக்கிறார். ஏன் பஞ்சாபி, மராத்தி, குஜராத்தி, பெங்காலி மொழிகளிலில்கூட பாடல்கள் பாடி கவனம் ஈர்த்து வருபவர்.

ஜொனிதா காந்தி
25 ஆசிரியர்கள் பணி நீக்கம்; பாலியல் புகார்களில் அதிரடி காட்டும் பள்ளிக் கல்வித்துறை!

ஒகே கண்மணியின் 'மெண்டல் மனதில்', சர்க்கார் படத்தின் 'OMG பொண்ணு', காப்பான் 'ஹெ அமிகோ', பீஸ்ட் 'அரபிக் குத்து', வாரிசு 'ஜிமிக்குப் பொண்ணு', டாக்டரின் 'மெலுகு டாலு நீ' எனப் பல வெரைட்டியான பாடல்கள் மூலம் தமிழில் கவனம் ஈர்த்து வருகிறார்.

சமீபத்தில் ஜொனிதா காந்தி, தன் சமூக வலைதளப் பதிவில் இதுகுறித்துப் பேசியிருக்கும் அவர், "சமூக வலைதளங்களில் பெண்களுக்கு நிறைய பாலியல் தொல்லைகள் நடக்கின்றன. நான் இன்ஸ்டாகிராமில் கொஞ்சம் ஆக்டிவாக இருப்பேன். தினமும் எனக்கு நிறைய மெசேஜ்கள் வந்த வண்ணமிருக்கும், அதையெல்லாம் பெரிதாக நான் பார்க்க மாட்டேன்.

ஆனால், இன்ஸ்டாகிராமில் எனக்கு நண்பர்களாக இருப்பவர்கள் சிலர் என்னை சில பதிவுகளில் மென்சன் செய்வார்கள். அதைப் பார்த்தால் அவ்வளவு ஆபாசமாக இருக்கும். இப்படி பல பாலியல் தொல்லைகள் சமூக வலைதளங்களில் நடக்கிறது" என்று பேசியிருக்கிறார்.

ஜொனிதா காந்தி
பாலியல் புகார்கள்: `5 ஆண்டுகள் திரைத்துறையில் பணியாற்ற தடை' - தென்னிந்திய நடிகர்கள் சங்கம் தீர்மானம்

கனடாவில் தனக்கு நேர்ந்த இனப் பாகுபாடு குறித்துப் பேசியவர், "நான் இந்தியாவில் பிறந்து, கனடாவில் படித்து வளர்ந்தேன். கனடாவில் நிறைய இனப் பாகுபாடு தொல்லைகளைச் சந்தித்திருக்கிறேன். என் முடி, முகம் என தோற்றத்தை வைத்தும் என்னை நிறைய கிண்டல் செய்திருக்கிறார்கள். பார்ப்பதற்கு காட்ஸில்லாவைப் போல இருப்பதாக நக்கல் செய்வார்கள்.

பஞ்சாப்பில் நான் பள்ளியில் படிக்கும்போதுகூட என் தோற்றத்தை வைத்துக் கிண்டல் செய்வார்கள். என் தோற்றத்தைப் பற்றி நானே தாழ்வாக நினைத்துக் கொள்வேன். இப்போதும் கூட அதே தாழ்வு மனப்பான்மை எனக்கு அவ்வப்போது ஏற்படும். ஆனால் நம்மை நாம் நேசித்தால்தான், பிறர் நம்மை நேசிப்பார்கள் என்பதைப் புரிந்துகொண்டேன்." என்று மனம் திறந்து பேசியிருக்கிறார் ஜொனிதா காந்தி.

சினிமா விகடனின் பிரத்யேக Whatsapp க்ரூப்

https://chat.whatsapp.com/KzgH8aPb2MI9PVttY53JpX

சினிமா தொடர்பான எக்ஸ்க்ளூசிவ் அப்டேட், அசத்தல் பேட்டிகள், டி.வி அப்டேட்கள் என எதையும் மிஸ் செய்யாமல் தெரிந்து கொள்ள...

உங்கள் வாட்ஸ் அப் மூலமே இணைந்திருங்கள் சினிமா விகடனுடன்...

https://chat.whatsapp.com/KzgH8aPb2MI9PVttY53JpX

Read Entire Article