Kalaipuli Thanu: தயாரிப்பாளர் தாணு பேரனின் திருமணம்; கலந்துகொண்டு வாழ்த்திய பிரபலங்கள்

6 months ago 8
ARTICLE AD BOX

திரைப்பட தயாரிப்பாளர் கலைப்புலி எஸ்.தாணுவின் பேரன் ஆதித்யனின் திருமணம் நேற்று (ஜூன் 5) நடைபெற்று இருக்கிறது. இந்தத் திருமணத்தில் அரசியல் தலைவர்கள், திரைப்பிரபலங்கள் கலந்துகொண்டிருக்கின்றனர்.  

கலைப்புலி எஸ்.தாணுவின் பேரன் ஆதித்யனுக்கும், டாக்டர் பிரீத்திகா என்பவருக்கும் இருவீட்டு பெற்றோர்களால் திருமணம் நிச்சயிக்கப்பட்டிருந்தது. இதையடுத்து அவர்களின் திருமணம் சென்னையில் நேற்று காலை நடைபெற்றிருக்கிறது.

இதில் தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன், டி.ராஜேந்தர், பிரபு, ராம்குமார், ரம்பா,  ஐசரி கணேஷ், ஷோபா கல்பாத்தி எஸ்.அகோரம், ஆகியோர் கலந்துகொண்டிருக்கிறனர். நேற்று மாலை 7 மணியளவில் அதே மண்டபத்தில் மணமக்கள் ஆதித்யன்- டாக்டர் பிரீத்திகாவின் வரவேற்பு நிகழ்ச்சி நடந்திருக்கிறது.

இந்த வரவேற்பு நிகழ்ச்சியில் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், அமைச்சர் சேகர்பாபு, பிரேமலதா ஆகியோர் நேரில் கலந்துகொண்டு மணமக்களை வாழ்த்திருக்கின்றனர். மேலும் சரத்குமார், சூர்யா, நாசர், எஸ்.ஜே.சூர்யா, கே.பாக்யராஜ், பிரசாந்த், தியாகராஜன், சாந்தனு, சிபிராஜ், உள்பட திரைப்பிரபலங்கள் பலரும் கலந்துகொண்டு மணமக்களை வாழ்த்தி இருகின்றனர். 

Read Entire Article