ARTICLE AD BOX
மணிரத்னம் இயக்கத்தில் கமல், சிம்பு, த்ரிஷா, அசோக் செல்வன், அபிராமி, ஐஸ்வர்யா லக்ஷ்மி, ஜோஜு ஜார்ஜ் உள்ளிட்டோர் நடிப்பில் உருவாகியிருக்கும் திரைப்படம் 'தக் லைஃப்'
இப்படத்திற்கு ஏ.ஆர். ரஹ்மான் இசையமைத்திருக்கிறார். நாளை படம் (ஜூன் 5) திரையரங்குகளில் வெளியாக இருக்கிறது.
'தக் லைஃப்' இந்நிலையில் இன்று (ஜூன் 4)'தக் லைஃப்' படக்குழுவினர் செய்தியாளர்களைச் சந்தித்து பேசி வருகின்றனர். இதில் கலந்துகொண்டு பேசிய கமல், " இந்தப் படத்தில் பணிப்புரிந்தவர்கள் எல்லோரும் ஏற்கனவே நிறைய விஷயங்களைக் கற்றுக்கொண்டு வந்தவர்கள்தான்.
படை வீரர்கள் நிறைந்த படை இது!
படை வீரர்கள் நிறைந்த படை இது. நிறைய டெக்னீஷியன்ஸ் இந்தப் படத்தில் பணிப்புரிந்திருக்கிறார்கள். மணி சாருடன் பணிப்புரிந்தது எனக்கு குதுகலமாக இருந்தது" என்றிருக்கிறார்.
கமல்தொடர்ந்து பேசிய கமல் " எனக்கு உறுதுணையாக இருந்த தமிழ்நாட்டுக்கே நன்றி சொல்ல வேண்டும். உயிரே உறவே தமிழே என்று சொன்னதற்கான அர்த்தத்தை முழுமையாக உணர்கிறேன். பேச வேண்டிய விஷயங்கள் நிறைய இருக்கிறது. அது 'தக் லைஃப்' பற்றியது அல்ல. அதனைப் பிறகு பேசுவோம். அதற்கான நேரத்தை ஒதுக்கி தருவது என்னுடைய கடமை ஒரு தமிழனாக " என்று கூறியிருக்கிறார்.
சினிமா விகடனின் பிரத்யேக Whatsapp க்ரூப்
https://chat.whatsapp.com/JSk78H7siYK4aL2qO1RglR
சினிமா தொடர்பான எக்ஸ்க்ளூசிவ் அப்டேட், அசத்தல் பேட்டிகள், டி.வி அப்டேட்கள் என எதையும் மிஸ் செய்யாமல் தெரிந்து கொள்ள...
உங்கள் வாட்ஸ் அப் மூலமே இணைந்திருங்கள் சினிமா விகடனுடன்...

6 months ago
8





English (US) ·