ARTICLE AD BOX
இந்தியாவின் முதல் தர கிரிக்கெட்டில் இரண்டு ஆண்டுகளாக சிறப்பான பங்களிப்பைச் செலுத்தி வருபவர் கருண் நாயர். இரண்டு ரஞ்சி கோப்பை தொடர்களில் 1553 ரன்கள் சேர்த்து கலக்கினார். இதனை தொடர்ந்து இந்திய தேர்வுக் குழு அவரை இங்கிலாந்து தொடரில் இணைத்தது. ஆனால் எதிர்பாராத விதமாக அடுத்தடுத்த தொடர்களில் அவர் சேர்க்கப்படவில்லை.
கருண் நாயர்இங்கிலாந்துக்கு எதிரான 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் 8 இன்னிங்ஸ் விளையாடிய கருண் நாயர் 205 ரன்கள் மட்டுமே சேர்த்தார். இது தேர்வுக்குழுவின் எதிர்பார்ப்புகளை ஈடு செய்யவில்லை. அவரை மேற்கிந்திய தீவுகளுக்கு எதிரான தொடரில் சேர்க்காதது குறித்து கேட்கப்பட்டபோது, "அவரிடமிருந்து நாங்கள் அதிகம் எதிர்பார்த்தோம்" எனப் பதிலளித்தார் அஜித் அகர்கார்.
கடந்த ஞாயிற்றுக் கிழமை (அக்டோபர் 26) நடந்த கோவா அணிக்கு எதிரான ரஞ்சி கோப்பை போட்டியில் கருண் நாயர் கர்நாடகா அணிக்காக 174* ரன்கள் அடித்து மீண்டும் தனது திறனை நிரூபித்துள்ளார்.
கவுதம் கம்பீர், அஜித் அகர்கர் "நாட்டுக்காக விளையாடுவது மட்டுமே என் விருப்பம்" - Karun Nair
பின்னர் பேசிய அவர், இந்திய தேர்வுக்குழுவின் முடிவு தனக்கு ஏமாற்றமளித்ததாகப் பேசினார். "என்னுடைய கடந்த இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு, எனக்கு ஒரு தொடரை விட சிறப்பான விஷயங்கள் கிடைத்திருக்க வேண்டும் என நினைக்கிறேன்... தற்போது சிறப்பாக விளையாடி நிறைய ரன்கள் அடித்து மக்களின் கருத்துக்களில் இடம்பெற வேண்டும்." என்றார்.
தொழில்முறை கிரிக்கெட்டில் அவரது அடுத்த இலக்கு பற்றி கேட்கப்பட்டபோது, "அடுத்த இலக்கா... உண்மையைச் சொல்ல வேண்டுமென்றால் நாட்டுக்காக விளையாடுவது மட்டுமே என் விருப்பம். அதைச் செய்ய முடியவில்லை என்றால், நீங்கள் தொடர்ந்து முயற்சித்து வெற்றிகளைப் பெற வேண்டும்." என்றார்.
சுப்மன் கில்லுக்கு கொடுக்கும் 'அதீத' அங்கீகாரம் - சில கேள்விகள்
2 months ago
4







English (US) ·