ARTICLE AD BOX
லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் மற்றும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் ஆகிய அணிகளுக்கிடையேயான ஐபிஎல் போட்டி கொல்கத்தா ஈடன் கார்டன்ஸ் மைதானத்தில் நடந்தது. இந்த போட்டியில் லக்னோ அணி 4 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இந்த போட்டியில் டாஸ் வென்ற கொல்கத்தா அணியின் கேப்டன் அஜங்கியா ரஹானே பந்துவீச்சை தேர்வு செய்தார்.
முதலில் பேட்டிங் செய்ய வந்த லக்னோ அணியின் ஓபனிங் பேட்ஸ்மேன்களாக எய்டன் மார்க்ரம் மற்றும் மிட்செல் மார்ஷ் ஆகியோர் களம் இறங்கி இருந்தனர். முதல் ஓவரில் மூன்று ரன்கள் மட்டுமே எடுத்து இருந்த எய்டன் மார்க்ரம் அடுத்தடுத்த ஓவர்களில் அதிரடியாக விளையாடத் தொடங்கினார்.
Tossஇரண்டாவது ஓவரில் ஒரு பவுண்டரி, நான்காவது ஓவரில் இரண்டு பவுண்டரி, ஒரு சிக்ஸ் என அதிரடியாக விளையாடினார். இதனால் பவர்பிளே முடிவில் லக்னோ அணி 59 ரன்கள் எடுத்து இருந்தது. 7வது ஓவரில் சுனில் நரைன் வீசிய பந்தை அடுத்தடுத்து சிக்ஸ், பவுண்டரி என விளாசினார் மிட்செல் மார்ஷ்.
11வது ஓவரில் ஹர்ஷித் ராணா வீசிய பந்தில் எய்டன் மார்க்ரம் போல்ட் ஆனார். அவர் இரண்டு சிக்ஸ், நான்கு பவுண்டரி என 28 பந்துகளில் 47 ரன்கள் எடுத்து இருந்தார். அதன் பிறகு இந்த சீசனில் தனது சிறப்பான பேட்டிங் திறமையால் பவுலர்களை அலரவிட்ட நிக்கோலஸ் பூரன் பேட்டிங் செய்ய களம் இறங்கினார். அவர் மிட்செல் மார்ஷ் உடன் பார்ட்னர்ஷிப் அமைத்து லக்னோ அணியின் ரன் குவிப்பிற்கு உதவினார். 12 வது ஓவரில் இரண்டு பவுண்டரி, 15வது ஓவரில் இரண்டு சிக்ஸ் என சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். 15 ஓவர்கள் முடிவில் 1 விக்கெட் இழப்பிற்கு 170 ரன்கள் எடுத்து இருந்தது லக்னோ அணி.
தொடக்கத்தில் இருந்து பந்து வீசாமல் இருந்த ஆன்ட்ரே ரசல், 16வது ஓவரில் பந்து வீச வந்தார். அவர் பந்து வீச வந்த இரண்டாவது பந்தில் மிட்செல் மார்ஷ் கேட்ச் ஆனார். அவர் ஐந்து சிக்ஸ், ஆறு பவுண்டரி என 48 பந்துகளில் 81 ரன்கள் எடுத்து கேட்ச் ஆகி வெளியேறினார்.
Marshஅதன் பிறகு பேட்டிங் செய்ய களம் இறங்கிய அப்துல் சமத் சற்று நிதானமாக விளையாடினார். 17-வது ஓவரில் நிக்கோலஸ் பூரன் தனது அரை சதத்தை பதிவு செய்தார். அவர் 21 பந்துகளில் 51 ரன்கள் எடுத்து இருந்தார். 18-வது ஓவரில் ரசல் வீசிய பந்துகளை நிக்கோலஸ் பூரன் அடுத்தடுத்து ஃபோர், சிக்ஸ், ஃபோர், சிக்ஸ் என விளாசினார். 18 வது ஓவரில் மட்டும் நிக்கோலஸ் பூரன் 24 ரன்கள் எடுத்து இருந்தார்.
19வது ஓவரில் அப்துல் சமத் போல்ட் ஆகி வெளியேற, டேவிட் மில்லர் பேட்டிங் செய்ய களம் இறங்கினார். கடைசி ஓவரில் ஒரு பவுண்டரியும் ஒரு ரன்னும் எடுத்தார் பூரன். இதனால் லக்னோ அணி 20 ஓவர்கள் முடிவில் 3 விக்கெட் இழந்து 238 ரன்கள் எடுத்தது.
239 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் பேட்டிங்கில் களம் இறங்கியது கொல்கத்தா அணி. அந்த அணியின் ஓபனிங் பேட்ஸ்மேன்களாக குவின்டன் டி காக் மற்றும் சுனில் நரைன் ஆகியோர் களம் இறங்கினர். முதல் ஓவரில் பந்து வீச வந்த ஆகாஷ் தீப் 5 வைடு பந்துகளை வீசினார். முதல் ஓவரில் சுனில் நரைன் சிக்ஸ் அடித்தார். இதனால் முதல் ஓவரில் கொல்கத்தா அணி 16 ரன்கள் எடுத்து இருந்தது.
3வது ஓவரில் ஆகாஷ் தீப் வீசிய பந்தில் குவின்டன் டி காக் எல்.பி. டபிள்யூ ஆனார். அதன் பிறகு பேட்டிங் செய்ய வந்த அஜங்கியா ரஹானே சுனில் நரைன் உடன் பார்ட்னர்ஷிப் அமைத்து சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். பவர்பிளே முடிவில் கொல்கத்தா அணி ஒரு விக்கெட்டை இழந்து 90 ரன்கள் எடுத்திருந்தது.
KKRஅதிரடியாக விளையாடி வந்த அஜங்கியா ரஹானே மற்றும் சுனில் நரைன் இருவரும் சேர்ந்து 19 பந்துகளிலேயே 50 ரன்கள் பார்ட்னர்ஷிப் எடுத்தனர். 7வது ஓவரில் டிவிக்னேஷ் ரதி வீசிய பந்தில் சுனில் நரைன் கேட்ச் ஆனார். சுனில் நரைன் 13 பந்துகளில் 30 ரன்கள் எடுத்திருந்தார். 10 ஓவர்கள் முடிவில் 2 விக்கெட்டை இழந்து
கொல்கத்தா அணி 129 ரன்கள் எடுத்து இருந்தது. 11வது ஓவரில் அஜங்கியா ரஹானே தனது அரை சதத்தை பதிவு செய்தார். அவர் 28 பந்துகளில் 51 ரன்கள் எடுத்து இருந்தார். சுனில் நரைன் விக்கெட்டுக்குப் பிறகு ஏழாவது ஓவரில் களம் இறங்கிய வெங்கடேஷ் ஐயர் தொடர்ந்து அதிரடியாக ஆடி வந்தார். 12 ஓவர்கள் முடிவில் 20 பந்துகளில் 36 ரன்களை பறக்கவிட்டிருந்தார் வெங்கடேஷ் ஐயர்.
13-வது ஓவரில் பந்து வீச வந்த ஷர்துல் தாகூர் வரிசையாக 5 வைடு பந்துகளை வீசினார். 13 வது ஓவரில் தாகூர் வீசிய பந்தில் அஜங்கியா ரஹானே கேட்ச் ஆனார். அவர் இரண்டு சிக்ஸ், எட்டு பவுண்டரிகள் என 35 பந்துகளில் 61 ரன்கள் எடுத்து இருந்தார். அதன் பிறகு பேட்டிங் செய்ய களம் இறங்கிய ரமன்தீப் சிங் ஒரு ரன் மட்டுமே எடுத்து, ரவி பிஷனாய் வீசிய பந்தில் கேட்ச் ஆனார். அதன் பிறகு பேட்டிங் செய்ய களம் இறங்கிய அங்கிரிஷ் ரகுவன்ஷி 5 ரன்கள் மட்டுமே எடுத்து கேட்ச் ஆனார். 15 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட் இழப்பிற்கு கொல்கத்தா அணி 173 ரன்கள் எடுத்து இருந்தது. 29 பந்துகளில் 45 ரன்கள் எடுத்து ஆகாஷ் தீப் வீசிய பந்தில் ஆட்டம் இழந்தார் வெங்கடேஷ்.
Ravi Bishnoi17 வது ஓவரில் ஷர்துல் தாகூர் வீசிய பந்தில் நான்கு பந்துகளில் 7 ரன்கள் அடித்து ரஸல் தனது விக்கெட்டை இழந்தார். 17 வது ஓவரில் இருந்து ரிங்கு சிங் அடித்து அடியே ஆக வேண்டும் என்ற நிலை இருந்தது. கடைசி இரண்டு ஓவரில் அதாவது 12 பந்துகளில் 38 ரன்கள் தேவை என்ற நிலை இருந்தது.
19 வது ஓவரில் முதல் இரண்டு பந்துகளை சிக்ஸர்களாக பறக்கவிட்டார் ரிங்கு சிங். கடைசி ஓவரில் 24 ரன்கள் கொல்கத்தா அணிக்கு தேவைப்பட்டது. ஆனால் ரிங்கு சிங் இரண்டு பவுண்டரி, ஒரு சிக்ஸ் அடித்து இருந்தும் கடைசி ஓவரில் கொல்கத்தா அணி 19 ரன்கள் மட்டுமே எடுத்து இருந்தது.
இதனால் லக்னோ அணி 4 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளது. கொல்கத்தாவின் சொந்த மைதானத்தில் வைத்து அந்த அணியை தோற்கடித்து வெற்றி பெற்றுள்ளது லக்னோ அணி.
IPL விதிகள் மீறல்; சம்பளத்தில் 25 சதவிகித அபராதம்; என்ன செய்தார் இஷாந்த்?
8 months ago
8







English (US) ·