ARTICLE AD BOX
18 வது ஐ.பி.எல் சீசனின் முதல் போட்டி நடந்து முடிந்திருக்கிறது. கொல்கத்தா அணியை அதன் சொந்த மைதானத்தில் வைத்தே பெங்களூரு அணி வீழ்த்தியிருக்கிறது. பெங்களூரு சார்பில் கோலியும் சால்ட்டும் மிரட்டலான இன்னிங்ஸை ஆடியிருந்தனர். கேப்டனாக தன்னுடைய முதல் போட்டியையே வெற்றியுடன் தொடங்கியிருக்கிறார் ரஜத் பட்டிதர். போட்டிக்குப் பிறகு ரஜத் பட்டிதர் நெகிழ்ச்சியாகவும் பேசியிருந்தார்.
KKR vs RCB : `ஆளே மாறிட்டீங்களே RCB' - ஈடன் கார்டனில் கோலி & கோ செய்த OG சம்பவம்
Rajat Patidarரஜத் பட்டிதர் பேசியதாவது, "கேப்டனாக முதல் போட்டி என்பதால் கொஞ்சம் அழுத்தம் இருந்தது. ஆனால், இது எனக்கு நல்ல நாளாக அமைந்துவிட்டது. இப்படியான வெற்றிகளைப் பெற்றால் மகிழ்ச்சியாகத்தான் இருக்கும். எங்களுக்கு ரஸலின் விக்கெட் தேவைப்பட்டது. அதனால்தான் சுயாஷ் சர்மா ரன்களைக் கொடுத்திருந்தாலும் மீண்டும் அழைத்து வந்தேன். அவர் எங்களின் சிறந்த பௌலர். க்ரூணால் பாண்ட்யாவுக்கும் சுயாஷூக்கும்தான் எல்லா பாராட்டும் செல்லவேண்டும்.
13 ஓவர்களில் கொல்கத்தா 130 ரன்களை எடுத்திருந்தது. அந்த சமயத்தில் விக்கெட் எடுக்கும் உத்வேகத்துடன் வீசியிருந்தனர். கேப்டனாக விராட் கோலி போன்ற வீரர்களிடமிருந்து நிறைய கற்றுக்கொள்ள கிடைத்திருக்கும் வாய்ப்பாகத்தான் இதைப் பார்க்கிறேன்.' என்றார்.
KKR vs RCB: ஸ்டம்ப் எகிறியும் சுனில் நரைன் `நாட் அவுட்' ஏன்? - காரணம் இதுதான்
9 months ago
8







English (US) ·