ARTICLE AD BOX
ஐபிஎல் 18-வது சீசன் நேற்று ( மார்ச் 22) கோலாகலமாகத் தொடங்கியது. நேற்று நடைபெற்ற முதல் போட்டியில் கோப்பையை வென்ற கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியும்(KKR), ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியும்(RCB) மோதின. இதில் கொல்கத்தா அணியை ஏழு விக்கெட்டுகள் வித்தியாசத்தில் ஆர்சிபி அணியை வீழ்த்தி வெற்றி பெற்றது. ஆர்சிபி அணியின் இந்த வெற்றிக்கு குர்னல் பாண்டியா முக்கிய பங்காற்றி இருந்தார்.
குர்னல் பாண்டியா இதனால் அவருக்கு ஆட்டநாயகன் விருது வழங்கப்பட்டது. இந்நிலையில் போட்டிக்கு பிறகு பேசிய குர்னல் பாண்டியா, "இன்றைய போட்டியில் அணியின் வெற்றிக்காக உதவியது மகிழ்ச்சியாக இருக்கிறது. ஆர்சிபி அணிக்காக விளையாடுவது அபாரமாக இருக்கின்றது. ஆட்டம் செல்லும் திசை நோக்கி நாமும் செல்ல வேண்டும். இவ்வளவு பெரிய ரசிகர்கள் கூட்டத்திற்கு முன்பு நாங்கள் விளையாடும் போது எங்களுடைய கவனத்தை நாங்கள் சுருக்கி கொண்டு பந்துவீச்சில் மட்டும்தான் முழு கவனத்தையும் வைத்திருக்க வேண்டும்.
Virat Kohli: ஐபிஎல் வரலாற்றில் கோலிக்கு மற்றொரு கிரீடம்... இன்னும் 5 டீம்தான் மிச்சமிருக்கு!தொடர்ந்து சிக்சர்களை அடிக்கும் வகையில் பேட்ஸ்மேன்கள் தங்களுடைய திறமையை வளர்த்து வருகிறார்கள். எனவே பவுலர்களும் அதற்கு ஏற்ற மாதிரி தங்களுடையத் திறனை வளர்த்துக் கொள்ள வேண்டும். இதனால் தான் நான் பந்துகளின் வேகத்தை அதிகப்படுத்தினேன். நான் ஆர்சிபி அணிக்குள் வந்த உடனே இந்த அணிக்கு எவ்வளவு பெரிய ரசிகர்கள் பட்டாளம் இருக்கிறது என்பதை நான் தெரிந்து கொண்டேன்.
குர்னல் பாண்டியா ரசிகர்கள் பெரும் அளவு எங்களுக்கு ஆதரவாக இருப்பார்கள். நான் பெங்களூருவில் சாதாரண உள்ளூர் கிரிக்கெட் போட்டியில் விளையாட வந்தாலே அங்கு இருக்கும் ரசிகர்கள் ஆர்சிபி, ஆர்சிபி என்று கத்துவார்கள். நான் இந்த அணிக்கு வந்து பத்து நாள்கள் தான் ஆகிறது. அதற்குள் எனக்கு இந்த அணி மிகவும் பிடித்துவிட்டது" என்று நெகிழ்ச்சியாகப் பேசியிருக்கிறார்.
KKR vs RCB : ``அந்த 2 பேராலதான் எல்லாம் நடந்துச்சு" - ரஜத் பட்டிதர் நெகிழ்ச்சிVikatan WhatsApp Channel
இணைந்திருங்கள் விகடனோடு வாட்ஸ்அப்பிலும்... CLICK BELOW LINK
https://bit.ly/VikatanWAChannel


9 months ago
8







English (US) ·