ARTICLE AD BOX
'டெல்லி வெற்றி!'
பெங்களூருவின் சின்னசாமி மைதானத்தில் நடப்பு சீசனின் ஆகச்சிறந்த இன்னிங்ஸ்களில் ஒன்றை ஆடியிருக்கிறார் கே.எல்.ராகுல். பவர்ப்ளேயிலேயே 3 விக்கெட்டுகளை இழந்து டெல்லி அணி தடுமாறிய நிலையிலிருந்து அந்த அணியை மீட்டு 53 பந்துகளில் 93 ரன்களை எடுத்து வெல்ல வைத்திருக்கிறார்.
கே.எல்.ராகுல்'கே.எல்.ராகுல் சூறையாட்டம்!'
வென்ற பிறகு, 'இது என் ஊரு, என் க்ரவுண்டு!' எனக்கூறும் வகையில் ஆக்ரோஷமாக கொண்டாட்டத்திலும் ஈடுப்பட்டிருந்தார். கே.எல்.ராகுலின் ஆக்ரோஷத்துக்குக் காரணம் என்ன? எப்படி அவர் மாஸ்டர் க்ளாஸ் ஆட்டங்களை ஆடுகிறார்?
'கே.எல்.ராகுல் - ஆர்சிபி - பின்னணி!'
கே.எல்.ராகுல் பெங்களூரு பையன். ஒரு காலத்தில் ஆர்சிபி அணிக்காகவும் ஆடியிருக்கிறார். சிறப்பாக வேறு ஆடியிருக்கிறார். ஆனாலும் ஆர்சிபி அணி அவரை தக்கவைக்கவில்லை. வெளியே சென்றவர், பஞ்சாப் அணிக்கும் லக்னோ அணிக்கும் கேப்டனாக இருந்தார். கடைசியாக நடந்த மெகா ஏலத்துக்கு முன்பாக லக்னோ அணியிலிருந்து கே.எல்.ராகுல் வெளியே வந்தார்.
கே.எல்.ராகுல்மெகா ஏலத்தில் பெயரைப் பதிவு செய்தார். ஏலத்தில் எந்த அணி வேண்டுமானாலும் வாங்கலாம் எனும் யதார்த்தம் ராகுலுக்குப் புரிந்திருந்தது. ஆனாலும் அவருக்கு பெங்களூரு அணிக்காக ஆடவே விருப்பம். சொந்த ஊர்ப்பாசம்தான். மெகா ஏலத்துக்கு முன்பாக அந்த ஆசையை வெளிப்படையாகவே பேட்டிகளில் பேசியிருந்தார்.
கே.எல்.ராகுல்பெங்களூரு அணிக்கும் ராகுலின் தேவை இருந்தது. ஏனெனில், டூப்ளெஸ்சிஸூக்குப் பிறகு ஒரு கேப்டன் தேவைப்பட்டார். நல்ல விக்கெட் கீப்பர் தேவைப்பட்டார். அதற்கான சரியான தேர்வாக ராகுல் இருப்பார் என எதிர்பார்க்கப்பட்டது. பெங்களூரு அணியின் ரசிகர்களும் அதையே எதிர்பார்த்தனர். ஆனால், பெங்களூரு அணி ஏலத்தில் ட்விஸ்ட் கொடுத்தது.
கையில் கோடிகளை வைத்திருந்தும் ரூ.10 கோடிக்கு மேல் கே.எல்.ராகுலுக்கு பெங்களூரு முயலவில்லை, பின் வாங்கியது. ரூ.14 கோடிக்கு டெல்லி அணி வாங்கிவிட்டது. கே.எல்.ராகுல் மாதிரியான ஒரு வீரரை 14 கோடிக்கு அணிக்குள் கொண்டு வருவது பெரிய விஷயம். அது டெல்லிக்கு நடந்திருந்தது. கே.எல்.ராகுலின் இன்றைய ஆக்ரோஷத்துக்கு இந்த ஏலப் பின்னணிதான் மிக முக்கிய காரணம். போட்டி முடிந்த பிறகுமே.
கே.எல்.ராகுல்'இது என் ஊர். என் மைதானம். நான் இங்கேதான் பிறந்து வளர்ந்தேன். இந்த மைதானத்தைப் பற்றி என்னைவிட யாருக்கும் தெரியாது.' என மைக்கின் வழி சில குத்துகளையும் விட்டார்.
'டெல்லி அணியும் ராகுலும்!'
கே.எல்.ராகுலுக்கு டெல்லி அணி புதிய திறப்பை ஏற்படுத்திக் கொடுத்தது. அதாவது, அவருக்கு கேப்டன் பொறுப்பைக் கொடுக்கவில்லை. மாறாக அக்சருக்குக் கேப்டன் பொறுப்பைக் கொடுத்தார்கள். அதுவே அவருக்கு பெரிய விடுதலை. ஏனெனில், கேப்டனாக இருக்கும்போது ராகுல் எல்லா சுமையையும் தன் மீதே ஏற்றிக்கொள்வார். அளவுக்கு மீறி பொறுப்பாக இருப்பார். இதனாலயே அவரின் பேட்டிங் பாதிக்கப்பட்டு வந்தது. இதைச் சரியாகக் கண்டறிந்து கே.எல்.ராகுலுக்கு கேப்டன்சியை வழங்காமல் தவிர்த்தது டெல்லி அணி.
CSK : 'ருத்துராஜ் தொடரிலிருந்து விலகுகிறார்; தோனிதான் இனி கேப்டன்!' - ஸ்டீபன் ப்ளெம்மிங் | Breakingஒரு கேப்டனாக இல்லாமல் வெறுமென வீரராக ஆடும்போது, ராகுல் இன்னும் பரந்துபட்ட மனநிலையோடு சுதந்திரமாக ஆடுவதை பார்க்க முடிகிறது. பேட்டிங் சார்ந்து கருத்தியல் ரீதியாகவே நிறைய மாறியிருக்கிறார். பஞ்சாப் மற்றும் லக்னோ அணிகளின் கேப்டனாக இருந்த சமயத்தில், 'Strike Rate is Overrated.' என்று கூட ராகுல் பேசியிருக்கிறார். அந்தளவுக்கு ஒருவித பழைமைவாதத்துடனும் அறத்தோடும்தான் ராகுல் இருந்தார்.
கே.எல்.ராகுல் அதே ராகுல்தான் இப்போது, 'கிரிக்கெட் நிறையவே மாறிவிட்டது. எல்லாமே பேட்டர்கள் ஆட்டம்தான். அதிகமாக பவுண்டரிககளையும் சிக்சர்களையும் அடிக்க முடியும் அணிகளால்தான் போட்டியை வெல்லமுடியும். பவுண்டரிகளையும் சிக்சர்களையும் ஜாலியாக மகிழ்ந்து அடிக்கக்கூடியவன் நான். ஆனால், கடந்த சில ஆண்டுகளாக அதிக நேரம் பேட்டிங் ஆடி போட்டியைக் கடைசிவரை எடுத்துச் செல்லவேண்டும் என்பதில்தான் அதிக கவனம் செலுத்தினேன்.
நான் அதிலேயே தேங்கிவிட்டேன். பழையபடியே அதிரடியாக ஆடக்கூடிய ராகுலாக மாற வேண்டும் என இப்போது உணர்கிறேன்.' எனப் பேசியிருக்கிறார். கே.எல்.ராகுல் இப்படி பேசுவதெல்லாம் ஆச்சர்யம்.
'மாஸ்டர் க்ளாஸ் பேட்டிங்!'
சென்னைக்கு எதிரான போட்டியில் சேப்பாக்கத்திலும் பெங்களூருவுக்கு எதிரான போட்டியிலும் கே.எல்.ராகுல் சிறப்பாக ஆடியிருக்கிறார். வெறுமென ரன்கள் அடிப்பதை மட்டுமே வைத்து அப்படி சொல்லவில்லை. ஏனெனில், அவர் எல்லா சீசனிலும்தான் ரன் அடிக்கிறார். ஆனால், இந்த சீசனைப்போல அவர் வெற்றிகரமாக போட்டிகளை முடித்துக்கொடுக்கவில்லை. இதுதான் மிகப்பெரிய விஷயம்.
KL Rahulஇந்த கே.எல்.ராகுல் நினைத்த மாத்திரத்தில் நினைத்த இடத்தில் ஷாட்களை ஆடுகிறார். பெங்களூருவுக்கு எதிராக முதல் 29 பந்துகளில் 29 ரன்களை மட்டுமே எடுத்திருந்தார். அதன்பிறகு எடுத்த வேகம்தான் அட்டகாசம். மழை பெய்து DLS உள்ளே வர வாய்ப்பிருக்கிறது என்பதை அறிந்தவுடன், ஹேசல்வுட் வீசிய 15 வது ஓவரில் மட்டும் 22 ரன்களை ராகுல் அடித்திருந்தார். ஆரம்பக்கட்டத்திலேயே ராகுல் தன்னை இரு பரிமாண வீரராக மாற்றிக்கொண்டார். அவரால் பந்தை தேய்ந்துபோக செய்யும் டெஸ்ட் ஆட்டங்களையும் ஆட முடியும். 14 பந்துகளில் அரைசதத்தை அடிக்கும் டி20 ஆட்டத்தையும் அவரால் ஆட முடியும்.
CSK : 'ருத்துராஜ் தொடரிலிருந்து விலகுகிறார்; தோனிதான் இனி கேப்டன்!' - ஸ்டீபன் ப்ளெம்மிங் | Breaking
KL Rahulஆனால், ஐ.பி.எல் இல் பெரும்பாலான சமயங்களில் ராகுலின் இந்தத் திறன் சரியாக ஒருங்கிணைக்கப்பட்டு வெளிக்கொணரப்படவில்லை. அதற்கு கே.எல்.ராகுலுமே ஒரு காரணம். இந்த முறை டெல்லி அணி ராகுலை சரியாகக் கையாள்கிறது. அதற்கு பலனாக பேட்டிங் ஆர்டரில் எங்கே வேண்டுமானாலும் இறங்கி ராகுல் அசத்துகிறார். இது ஒரு வெற்றிக் கூட்டணி!

8 months ago
8







English (US) ·