KL Rahul: விராட் கோலியின் 9 வருட சாதனை முறியடிப்பு... முதலிடத்துக்கு முன்னேறிய கே.எல்.ராகுல்!

9 months ago 9
ARTICLE AD BOX

இந்திய அணி 2025-ஐ பார்டர் கவாஸ்கர் டெஸ்ட் தொடர் தோல்வியுடன் தொடங்கினாலும், உடனடியாக அதிலிருந்து மீண்டெழுந்து தற்போது ஐ.சி.சி சாம்பியன்ஸ் டிராபி கைப்பற்றி அசத்தியிருக்கிறது. அதுவும் ஒரு சில வீரரின் செயல்பாட்டால் என்றில்லாமல், ஆடிய அனைத்து வீரர்களின் பங்களிப்புகளால் இந்தியா சாம்பியனாகியிருக்கிறது. இதில், சைலன்ட்டாக சம்பவம் செய்ததென்றால் அது கே.எல்.ராகுல்தான்.

கே.எல்.ராகுல்கே.எல்.ராகுல்

கே.எல்.ராகுல்

காரணம், சாம்பியன்ஸ் ட்ராபிக்கு முந்தைய இங்கிலாந்துக்கெதிரான தொடரில் பேட்டிங்கில் அக்சர் படேலை இவருக்கு முன்பாக இறக்கி, ஆறாவது, ஏழாவது இடத்தில் இவர் களமிறக்கப்பட்டார். அணியின் இந்த முடிவு கடும் விமர்சனத்துக்குள்ளானது. ஆனால், இந்த முடிவுதான் சாம்பியன்ஸ் டிராபியை இந்தியா கைப்பற்றியதில் முக்கிய பங்கு வகித்தது.

மிடில் ஆர்டரில் நங்கூரம் போல நின்று பதட்டமில்லாமல் நிதானமாக ஆடிய கே.எல்.ராகுல், ஆஸ்திரேலியாவுக்கெதிரான அரையிறுதி மற்றும் நியூசிலாந்துக்கெதிரான இறுதிப்போட்டியில் சேஸிங்கில் கடைசிவரை களத்தில் நின்று அணியின் வெற்றிக்கு உதவினார்.

Rahul Dravid: ஊன்றுகோலுடன் களத்துக்கு வந்த டிராவிட்... இணையத்தில் வைரலாகும் வீடியோ - நடந்தது என்ன?

கே.எல்.ராகுல் இந்தத் தொடரில் மொத்தமாக 4 போட்டிகளில் 140 ஆவரேஜுடன் 140 ரன்களை எடுத்துள்ளார். இதன்மூலம், விராட் கோலியின் 9 வருட சாதனையை கே.எல்.ராகுல் முறியடித்திருக்கிறார். அதாவது, ஐ.சி.சி தொடரில் அதிக ஆவரேஜுடன் ரன்கள் குவித்த இந்திய வீரர்கள் பட்டியலில் விராட் கோலியை பின்னுக்குத் தள்ளி கே.எல்.ராகுல் முதலிடம் பிடித்திருக்கிறார்.

விராட் கோலி - கே.எல்.ராகுல்விராட் கோலி - கே.எல்.ராகுல்

இதற்கு முன்னர், 2016 டி20 உலகக் கோப்பைத் தொடரில் கோலி 5 ஆட்டங்களில் 136.5 ஆவரேஜுடன் 273 ரன்கள் குவித்ததே, ஐ.சி.சி தொடரில் இந்தியரின் அதிகபட்ச ஆவரேஜாக இருந்தது. தற்போது மூன்றாவது இடத்தில் முகமது கைஃப் (2002 சாம்பியன்ஸ் டிராபி 130 ஆவரேஜ்), நான்காவது இடத்தில் கோலி (2017 சாம்பியன்ஸ் டிராபி 129 ஆவரேஜ்), ஐந்தாவது இடத்தில சவுரவ் கங்குலி (2000 சாம்பியன்ஸ் ட்ராபி 116 ஆவரேஜ்) ஆகியோர் இருக்கின்றனர்.

இந்தியா உருவாக்கிய பொற்கால அணி இதுதானா?

Vikatan WhatsApp Channel

இணைந்திருங்கள் விகடனோடு வாட்ஸ்அப்பிலும்... CLICK BELOW LINK

https://bit.ly/VikatanWAChannel

Read Entire Article