Klaasen: "2027 உலகக் கோப்பை வரை விளையாடத் திட்டம்; ஆனால்..." - ஓய்வு குறித்து க்ளாசென் பளீச்

6 months ago 7
ARTICLE AD BOX

சமகால கிரிக்கெட் உலகில் அதிரடி வீரர்களில் ஒருவராக அறியப்படும் தென்னாப்பிரிக்காவின் ஹென்றிச் க்ளாசென் (Heinrich Klassen) கடந்த வாரம் (ஜூன் 2) திடீரென சர்வதேசப் போட்டிகளிலிருந்து ஓய்வுபெறுவதாக அறிவித்தார்.

33 வயதே ஆகும் ஹென்றிச் க்ளாசென், இன்னும் நான்கைந்து ஆண்டுகள் விளையாடுவார் என்று கிரிக்கெட் ரசிகர்கள் எதிர்பார்த்துக்கொண்டிருந்த வேளையில், "குடும்பத்துடன் நேரம் செலவழிக்கப் போகிறேன்" என்று ஓய்வை அறிவித்து பலரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கினார்.

ஹென்றிச் க்ளாசென் - Heinrich Klaasenஹென்றிச் க்ளாசென் - Heinrich Klaasen

இந்த நிலையில், தனது ஓய்வு குறித்து மிகவும் வெளிப்படையாக க்ளாசென் பகிர்ந்திருக்கிறார்.

விஸ்டன் (Wisden) கூற்றின்படி க்ளாசென், "என்னுடைய ஆட்டம் பற்றியும், அணியின் வெற்றி, தோல்வி குறித்தும் நான் பெரிதாகக் கண்டுகொள்ளவில்லை என்பதை நீண்ட காலத்திற்கு முன்பே உணர்ந்தேன். அதுதான் என்னுடைய தவறான இடம்.

சாம்பியன்ஸ் டிராபிக்கு முன் ரோப் வால்டரிடம் (தென்னாப்பிரிக்கா பயிற்சியாளர் 2023 ஜனவரி - 2025 ஏப்ரல்), 'என்ன நடந்துகொண்டிருக்கிறது; அது எனக்குச் சரியாகப் படவில்லை' என்று என் மனதில் இருப்பதைக் கூறினேன்.

Heinrich Klassen : 'குடும்பத்துடன் நேரம் செலவழிக்கப் போகிறேன்!' - ஓய்வை அறிவித்த க்ளாசென்

இருவரும் நன்றாகப் பேசினோம். 2027 ஒருநாள் உலகக் கோப்பை உட்பட அனைத்தையும் குறித்துத் திட்டமிட்டோம்.

இருப்பினும், பயிற்சியாளரின் பதவிக்காலம் முடிந்ததும், தென்னாப்பிரிக்க அணியில் மத்திய ஒப்பந்த பேச்சுவார்த்தைகள் திட்டமிட்டபடி என்னுடனான நடக்கவில்லை. அது எனது இந்த முடிவை மிகவும் எளிதாக்கியது.

இப்போது நான் ஆறேழு மாதங்கள் வீட்டில் எனது குடும்பத்துடன் நான் செலவிட முடியும். எனது குடும்பத்துக்கும் அது தேவை. எனக்கும் கொஞ்சம் ஓய்வு தேவை" என்று கூறியிருக்கிறார்.

ரோப் வால்டர்ரோப் வால்டர்

ஒரு பயிற்சியாளராக தென்னாப்பிரிக்கா அணியை 2023 ஒருநாள் உலகக் கோப்பை அரையிறுதிப் போட்டி, 2024 டி20 உலகக் கோப்பை இறுதிப் போட்டி, 2025 சாம்பியன்ஸ் டிராபி அரையிறுதிப் போட்டி என ஐ.சி.சி-யின் மூன்று மேஜர் தொடர்களில் சிறப்பாகக் கொண்டுசென்ற ரோப் வால்டர் தற்போது நியூசிலாந்து அணிக்கு மூன்று ஃபார்மெட்டுகளிலும் பயிற்சியாளராகப் பொறுப்பேற்றிருக்கிறார்.

2027 ஒருநாள் உலகக் கோப்பை உட்பட 2028 லாஸ் ஏஞ்சல்ஸ் ஒலிம்பிக் வரை நியூசிலாந்து அணிக்கு இவர் பயிற்சியளிப்பார் என்பது குறிப்பிடத்தக்கது.

South Africa: 'நியூயார்க்ல இருந்து தப்பிச்சா போதும்ணு இருக்கு!' - க்ளாசென் கேலி!

சினிமா விகடனின் பிரத்யேக Whatsapp க்ரூப்

https://chat.whatsapp.com/JSk78H7siYK4aL2qO1RglR

சினிமா தொடர்பான எக்ஸ்க்ளூசிவ் அப்டேட், அசத்தல் பேட்டிகள், டி.வி அப்டேட்கள் என எதையும் மிஸ் செய்யாமல் தெரிந்து கொள்ள...

உங்கள் வாட்ஸ் அப் மூலமே இணைந்திருங்கள் சினிமா விகடனுடன்...

https://chat.whatsapp.com/JSk78H7siYK4aL2qO1RglR

Read Entire Article