Kohli: ``விராட் கோலி ஓய்வு முடிவுக்கு காரணம் இதுதான்..'' - ரவி சாஸ்திரி ஓபன் டாக்

7 months ago 8
ARTICLE AD BOX

விராட் கோலி சர்வதேசப் போட்டிகளில் இருந்து ஓய்வுப் பெற்றது குறித்து ரவி சாஸ்திரி பேசியிருக்கிறார்.

"ஓய்வு அறிவிப்பை வெளியிடுவதற்கு ஒரு வாரம் முன்பே நானும், விராட் கோலியும் பேசினோம். அவரது மனநிலை அப்பொழுது தெளிவாக இருந்தது.

விராட் கோலி

'கிரிக்கெட்டிற்காக அனைத்தையும் கொடுத்துவிட்டேன்' என்று ஓய்வு முடிவில் அவர் உறுதியாக இருந்தார். ஓய்வை அறிவித்தத்தில் அவருக்கு எந்த வருத்தமும் இல்லை.

அவரிடம் ஒரு சில கேள்விகளை மட்டும் எழுப்பினேன். ஆனால் அதற்கும் அவர் தெளிவான விளக்கம் அளித்தார். அப்போதுதான் எனக்கு இதுதான் சரியான நேரம் என்று தோன்றியது.

Kohli: ஓய்வு அறிவிப்பிற்குப் பிறகு ஆசிரமத்தில் வழிபாடு... வைரலாகும் படங்கள் | Photo Album

அவர் ஒரு விஷயத்தைச் செய்ய நினைத்தால், 100 சதவிகிதம் தனது அர்ப்பணிப்பைக் கொடுக்க நினைக்கிறார். அதை அத்தனை எளிதாக மீண்டும் நாம் செய்துவிட முடியாது.

நிறைய சாதனைகளைப் படைத்திருக்கிறார். கடந்த 10 ஆண்டுகளில் எந்த கிரிக்கெட் வீரருக்கும் இல்லாத அளவிலான ரசிகர் கூட்டம் விராட் கோலிக்கு இருக்கிறது.

ரவி சாஸ்திரிரவி சாஸ்திரி

ஆஸ்திரேலியா, தென்னாப்பிரிக்கா போன்ற நாடுகளில் இவர் ஆடும் ஆட்டத்தைப் பார்ப்பதற்கு மக்கள் நேரில் வருகிறார்கள். அந்தளவிற்கு ரசிகர்கள் இவர் மீது அன்பு வைத்திருக்கிறார்கள்" என்று கூறியிருக்கிறார்.

Virat Kohli : 'புன்னகையுடன் விடைபெறுகிறேன்!' - ஓய்வை அறிவித்த விராட் கோலி!

Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group...

இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும் https://bit.ly/3OITqxs

வணக்கம்,

BIG BREAKINGS முதல்... அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.

ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்... https://bit.ly/3OITqxs

Read Entire Article