ARTICLE AD BOX
பிரபல வில்லன் நடிகர் கோட்டா சீனிவாச ராவ் உடல்நலக் குறைவால் காலமாகி இருக்கிறார். அவருக்கு வயது 83.
நடிகர், பாடகர், டப்பிங் கலைஞர் எனப் பன்முக திறமை கொண்ட இவர், மொத்தம் 750 படங்களுக்கும் மேல் நடித்துள்ளார். நாட்டின் உயரிய விருதான பத்மஸ்ரீ விருதைப் பெற்றிருக்கிறார்.
அவரின் மறைவிற்குத் திரையுலகினர் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
கோட்டா சீனிவாச ராவ்அந்த வகையில் நடிகர் கார்த்தி இரங்கல் தெரிவித்திருக்கிறார். கார்த்தி வெளியிட்டிருக்கும் எக்ஸ் தளப் பதிவில், "ஒரு லெஜண்டை இழந்திருக்கிறோம். கோட்டா சீனிவாச ராவின் மறைவு வருத்தமளிக்கிறது.
சினிமா மீதான அவரது அளப்பரிய காதல், படப்பிடிப்புத் தளத்தில் அவரது உற்சாக குணம், அவர் நடித்த மறக்க முடியாத கதாபாத்திரங்கள் என்றென்றும் நம் மனதில் நிலைத்திருக்கும்" என்று பதிவிட்டிருக்கிறார்.
'சகுனி', 'அழகுராஜா' உள்ளிட்ட படங்களில் கார்த்தியுடன் கோட்டா சீனிவாச ராவ் நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
கோட்டா சீனிவாச ராவ் மறைவு: "அவர் உடல் ஒத்துழைச்சிருந்தா..." - டப்பிங் ஆர்டிஸ்ட் ராஜேந்திரன் உருக்கம்சினிமா விகடனின் பிரத்யேக Whatsapp க்ரூப்
https://chat.whatsapp.com/JSk78H7siYK4aL2qO1RglR
சினிமா தொடர்பான எக்ஸ்க்ளூசிவ் அப்டேட், அசத்தல் பேட்டிகள், டி.வி அப்டேட்கள் என எதையும் மிஸ் செய்யாமல் தெரிந்து கொள்ள...
உங்கள் வாட்ஸ் அப் மூலமே இணைந்திருங்கள் சினிமா விகடனுடன்...

5 months ago
7





English (US) ·