Krishna: நடிகர் கிருஷ்ணாவுக்குத் திருமணம் - வாழ்த்தும் பிரபலங்கள்!

6 months ago 8
ARTICLE AD BOX

நடிகர் 'கழுகு' கிருஷ்ணா நடிப்பில் கடந்த ஆண்டு 'பாராசூட்' வெப் சீரிஸ் வெளியாகியிருந்தது.

இதைத்தாண்டி, கெளதம் மேனன் இயக்கத்தில் இவர் நடித்திருந்த 'ஜோஸுவா' திரைப்படமும் கடந்த ஆண்டு வெளியாகியிருந்தது.

இதைத் தாண்டி, இன்னும் சில படங்களிலும் தற்போது நடிகர் கிருஷ்ணா நடித்து வருகிறார். இயக்குநர் விஷ்ணுவர்தன் இவருடைய உடன் பிறந்த சகோதரர் என்ற தகவல் பலரும் அறிந்ததுதான்.

Krishna with his brother Vishnu Vardhan Krishna with his brother Vishnu Vardhan

'அலிபாபா' திரைப்படத்தின் மூலம் சினிமாவில் அறிமுகமான கிருஷ்ணா, கடந்த 2014-ம் ஆண்டு ஹேமலதா என்பவருடன் திருமணம் நடைபெற்றது.

ஆனால், அந்தத் திருமணம் அடுத்த ஒரு ஆண்டிற்குள்ளாகவே விவாகரத்தில் முடிந்தது.

இன்று நடிகர் கிருஷ்ணாவுக்கு எளிமையான முறையில் இரண்டாவது திருமணம் நடைபெற்றிருக்கிறது.

இந்த மகிழ்ச்சியான செய்தியை தனது சமூக வலைதளப் பக்கத்தின் மூலம் அறிவித்திருக்கிறார் நடிகர் கிருஷ்ணா.

தன்னுடைய திருமணத் தகவலைப் பகிர்ந்து, 'புது பயணம்' எனக் குறிப்பிட்டு பதிவிட்டிருக்கிறார்.

திருமணமானதை ஒரு புகைப்படத்தின் வாயிலாக அறிவித்த கிருஷ்ணா, மணப்பெண் குறித்த விவரம் எதையும் அறிவிக்கவில்லை.

திரைத் துறையினர், கிருஷ்ணாவின் சினிமா நண்பர்கள் எனப் பலரும் அவருக்கு வாழ்த்துகளைத் தெரிவித்து வருகின்றனர்.

Read Entire Article