Kubera: "நான் நம்பர் 1 நடிகையா?'' - ராஷ்மிகா மந்தனா கொடுத்த பதில்!

6 months ago 7
ARTICLE AD BOX

சேகர் கமுலா இயக்கத்தில் தனுஷ் நடித்திருக்கும் 'குபேரா' திரைப்படம் இம்மாதம் 20-ம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது. தனுஷுடன் நாகர்ஜூனா, ராஷ்மிகா உட்பட பலரும் நடித்திருக்கிறார்கள்.

படத்தின் ரிலீஸையொட்டி ப்ரோமோட் செய்ய அடுத்தடுத்து நிகழ்வுகளை 'குபேரா' படக்குழுவினர் நடத்தி வருகின்றனர்.

Kubera Kubera

இன்று மும்பையில் படத்தின் மூன்றாவது பாடல் வெளியீட்டு விழா நடந்தது.

'தேரே இஷ்க் மெயின்' படத்தின் படப்பிடிப்பில் தற்போது பங்கேற்று வரும் தனுஷ் படப்பிடிப்பின் இடைவெளியில் வந்து இந்த நிகழ்வில் கலந்துக் கொண்டார்.

ராஷ்மிகா மந்தனா பேசுகையில், " இதுவரை நான் செய்த படங்களிலிருந்து 'குபேரா' படத்தின் இந்தக் கதாபாத்திரம் வேறுபட்டதாக இருக்கும்.

படங்களில் நடிக்கும்போது என்னை முழுமையாக இயக்குநர்களிடம் ஒப்படைத்துவிடுவேன். ஒவ்வொரு இயக்குநர்களுக்கு அந்தந்த கதாபாத்திரங்களை எப்படி கொண்டு வர வேண்டும் என யோசித்து வைத்திருப்பார்கள்.

Rashmika Mandana - KuberaRashmika Mandana - Kubera

அந்த வகையில் இந்தக் கதாபாத்திரம் மிகவும் வேறுபட்டதாக இருக்கும். எனக்கு நாகர்ஜூனா சாரை மிகவும் பிடிக்கும். இரண்டாவது முறையாக அவருடன் இணைந்து படத்தில் நடிக்கிறேன்.

ஒவ்வொரு படத்திற்கும் பெரும் சிரத்தைக் கொடுத்து உழைப்பார். அதுமட்டுமல்ல, அவர் அவராகவே இருப்பார். டப்பிங்கில் படத்தை பார்த்துவிட்டு என்னை அவர் பாராட்டியது முழுமையான மகிழ்ச்சியை தந்தது.

தனுஷ் சாரை போலவே நடிப்பதற்கு நாம் 100 சதவீதம் உழைப்பைக் கொடுக்க வேண்டும். அப்படியான எண்ணத்தை அவர் கொடுத்துவிடுவார்.

குப்பைகள் இருக்கும் இடத்தில் ஆறு மணி நேரம் படப்பிடிப்பு நடத்தியதுதான் இப்படத்தின் நடிகராக எனக்கு பெரிய விஷயமாக அமைந்தது." என்றவர், " நான் நம்பர் 1 நடிகை என நீங்கள் சொல்லும்போது எனக்கு கொஞ்சம் பிரஷராகதான் இருக்கிறது.

Rashmika Mandana - KuberaRashmika Mandana - Kubera

எப்படியான பதிலைக் கொடுக்க வேண்டும் என தெரியவில்லை!

நான் இதற்கு உத்வேகம் அளிக்கும் பதிலைக் கொடுக்க வேண்டுமா? அல்லது எப்படியான பதிலைக் கொடுக்க வேண்டும் என தெரியவில்லை.

ஆனால், நான் இப்போதுதான் தொடங்கியிருக்கிறேன். தென்னிந்திய படங்களிலும் நடிக்கிறேன். பாலிவுட்டிலும் நடிக்கிறேன்.

இந்த போட்டியைப் பற்றியெல்லாம் எனக்கு தெரியவில்லை. ஆனால், நான் இப்போதுதான் தொடங்கியிருக்கிறேன் என்பது மட்டும் எனக்கு உறுதியாக தெரியும்." எனப் பேசினார்.

Read Entire Article