LA Lakers: ரூ.86,000 கோடிக்கு விலைபோன கூடை பந்து அணி - முடிவடையும் 46 ஆண்டு லெகஸி!

6 months ago 7
ARTICLE AD BOX

அமெரிக்காவின் உள்நாட்டு கூடைப்பந்து அணியான லாஸ் ஏஞ்சல்ஸ் லேக்கர்ஸ், 10 பில்லியன் டாலர்களுக்கு விற்கப்படுவதன் மூலம் அமெரிக்க வரலாற்றில் அதிக மதிப்புள்ள விளையாட்டு அணியாக உருவாகியிருக்கிறது என ESPN  அறிக்கையில் கூறப்படுகிறது.

தற்போது லேக்கர்ஸ் அணியின் உரிமையாளராக இருக்கும் பஸ் குடும்பம், மார்க் வால்டர் எனும் பில்லியனருக்கு அணியின் உரிமையை விற்கலாம் எனத் தகவல்கள் கூறுகின்றன. ஏற்கெனவே அணியின் கணிசமன அளவு பங்குகளை வைத்திருக்கிறார் மார்க்.

Words out! I liked that LAX rhymed with DAX pic.twitter.com/RRyqgHvMJz

— Mark Walter ‍ (@markwaltercpa) June 18, 2025

இந்த ஒப்பந்தம் நிறைவடைந்தாலும் ஜீனி பஸ் தொடர்ந்து அணியின் கவர்னராக (நிர்வாகி) தொடர்வார் எனக் கூறப்படுகிறது. எனினும் NBA-வின் ஜாம்பவான்களான லாஸ் ஏஞ்சல்ஸ் லேக்கர்ஸின் மீதான பஸ் குடும்பத்தின் 46 ஆண்டுகால ஆட்சி முடிவுக்கு வரும்.

LA Lakers - Jerry Buss

1979ம் ஆண்டு ஜெர்ரி பஸ் லேக்கர்ஸ் அணியை வாங்கினார். அவர் மிக விரைவாக அந்த அணியை உலகப் புகழ்பெற செய்தார்.

80களில் எல்.ஏ லேக்கர்ஸ் அணி கட்டியெழுப்பப்பட்ட கதையை மையமாகக் கொண்டு ஹெச்.பி.ஓ Winning Time: The Rise of the Lakers Dynasty என்ற தொடரை உருவாக்கியிருக்கிறது. அதில் ஜெர்ரி பஸ்ஸாக ஜான் சி.ரெய்லி நடித்திருப்பார்.

Jerry BussJerry Buss

ஜெர்ரி பஸ் லாஸ் ஏஞ்சல்ஸ் லேக்கர்ஸின் உரிமையாளராக ஆனதிலிருந்து அவரது மரணம் வரை, அவரது சாகசங்களைச் சொல்லும் ஆவணப்படம் Legacy: The True Story of the LA Lakers 2022ம் ஆண்டு வெளியாகியிருக்கிறது.

இன்று வரை பேசுபொருளாக இருப்பதைக் கொண்டே அவரது இடத்தை நாம் புரிந்துகொள்ள முடியும். அவர் 2000 - 2002 வரை கோப்பையை வெல்வதில் ஹாட்ரிக் அடைய வைத்தார். கடைசியாக அந்த அணி 2020ம் ஆண்டு வெற்றிபெற்றது.

தற்போது விற்கப்படும் லேக்கர்ஸ் அணி, முன்னதாக பாஸ்டன் செல்டிக்ஸ் அதிக விலைக்கு விற்கப்பட்ட சாதனையை முறியடிக்கிறது.

வரும் அக்டோபர் 21, 2025ல் அடுத்த NBA 2025-26 சீசன் தொடங்கவிருப்பது குறிப்பிடத்தக்கது.

RCB அணி விற்கப்படுகிறதா? - பிரமிக்க வைக்கும் மதிப்பு; டியாஜியோ பிஎல்சி நிறுவனம் சொல்வதென்ன?
Read Entire Article