Lawrence: ``அண்ணனை மாதிரி மக்கள் சேவை செய்யணும்!'' - ராகவா லாரன்ஸின் தம்பி எல்வின் பேட்டி

4 months ago 6
ARTICLE AD BOX

நடிகர் ராகவா லாரன்ஸின் சகோதரரான எல்வின் தமிழ் சினிமாவில் நாயகனாக அறிமுகமாகிறார்.

'டைரி' பட இயக்குநர் இன்னாசி பாண்டியன் இயக்கியிருக்கும் 'புல்லட்' திரைப்படத்தில்தான் தற்போது கதாநாயகனாக எல்வின் நடித்திருக்கிறார்.

ராகவா லாரன்ஸின் 'காஞ்சனா 2' திரைப்படத்தின் பாடலில் எல்வின் நடனமாடியிருப்பார்.

Elvin - LawrenceElvin - Lawrence

அப்படத்தைத் தொடர்ந்து கூடிய விரைவில் தமிழ் சினிமாவில் அறிமுகமாவார் என எதிர்பார்க்கப்பட்டபோது 10 வருடங்களுக்குப் பிறகு, சினிமாவிற்கு தன்னை முழுமையாகத் தயார்படுத்திக் கொண்டு இப்போது என்ட்ரி கொடுத்திருக்கிறார்.

ராகவா லாரன்ஸும் இந்த 'புல்லட்' படத்தில் ஒரு முக்கியமான போலீஸ் கேரக்டரில் நடித்திருக்கிறார். திரைப்படத்திற்கும் அவருடைய சினிமா அறிமுகத்திற்கும் வாழ்த்துகள் தெரிவித்து அவரிடம் பேசினேன்.

`தம்பி பாலா ஹீரோவாக அறிமுகமாகும் படம் விரைவில் திரையில்...' - ராகவா லாரன்ஸ் நெகிழ்ச்சி!

நம்மிடையே பேசிய எல்வின், "வணக்கம்ங்க! 'புல்லட்' படத்தோட டீசர் சமீபத்தில் வந்திருந்தது. திரைப்படமும் ரொம்ப நல்லா வந்திருக்கு.

இயக்குநர் இன்னாசி பாண்டியனோட முந்தைய திரைப்படம் மாதிரி இதுவும் சூப்பர் த்ரில்லர் படமாக இருக்கும். நாங்களும் ரிலீஸுக்கு ஆவலாகக் காத்திருக்கோம்.

இந்த திரைப்படம் எனக்கு தமிழ் சினிமாவுல நல்ல அறிமுகமாக இருக்கும். இதற்கு முன்னாடி அண்ணனோட 'காஞ்சனா 2' படத்துல வர்ற 'சில்லாட்டா பில்லாட்டா' பாடல்ல நான் நடனமாடியிருந்தேன்.

இந்த 10 வருடங்கள்ல நிறைய கதைகள் கேட்டேன். சரியாக அமையும் நேரத்திற்கு நான் காத்திருந்தேன்.

Bullet BTSBullet BTS

அப்போ அண்ணன் ஃபைவ் ஸ்டார் கதிரேசன் சார்கூட 'ருத்ரன்' திரைப்படம் செய்திருந்தார். இப்போ என்னுடைய அறிமுகம் கதிரேசன் சார் மூலமாக நடந்திருக்கு.

கதிரேசன் சாரோட மகனுக்காக வந்திருந்த கதைதான் இது. பிறகு, கதிரேசன் சாருடன் நான் நெருக்கமான பிறகு எனக்கு அந்தக் கதை வந்தது.

'காஞ்சனா' படத்துல இடம்பெற்ற என்னுடைய அந்த நடனத்திற்குப் பிறகு நான் கூடிய விரைவுல நடிகனாக களமிறங்குவேன்னு எதிர்பார்க்கப்பட்டது.

ஆனால், அதற்கிடைப்பட்ட வருடங்கள்ல நான் முழுமையாக சினிமாவுக்குத் தயாரானேன். அதே சமயம் தொடர்ந்து நானும் அண்ணனும் என்னுடைய டெபுட்டுக்கான கதைகளைக் கேட்டுட்டுதான் இருந்தோம்.

என்னுடைய அறிமுகத்திற்குத் தேவையான அத்தனை விஷயங்களும் படத்துல இருக்கணும்னு யோசிச்சோம்.

`திரைப்படங்களில் சாதியைத் திணிப்பது தவறு...' - நடிகர் ராகவா லாரன்ஸ்

அது சரியாக அமையலை. கொரோனாவுக்குப் பிறகு சினிமாவுல நிறைய விஷயங்கள் மெருகேறிவிட்டன. புதிய கன்டென்ட் கொடுக்கணும்னு அதற்காகக் கதைகள் கேட்டுட்டு வந்தேன்.

அது இப்போ 'புல்லட்' திரைப்படத்துலதான் அமைஞ்சிருக்கு. என்னுடைய திறமைகளை மெருகேற்றுவதற்கு இத்தனை வருடங்கள் எனக்குப் பயனுள்ளதாக இருந்துச்சு.

என்னுடைய உடலைத் தயார்படுத்தினேன். ஃபைட், டான்ஸ்னு பல விஷயங்களை இன்னும் ஆழமாகக் கத்துக்கிட்டேன்.

இதுதான் சரியான நேரம்னு நினைக்கும்போது கதையும் சரியாக அமைந்து வந்தது.

Elvin - LawrenceElvin - Lawrence

நடிப்பைப் பொறுத்தவரைக்கும் நம்மகிட்ட இருக்கிறதைதான் வெளிப்படுத்தணும். மற்றவங்களைப் பார்த்துக் கத்துக்கிட்டால் அவங்க ஸ்டைல்ஸ்தான் வரும்.

நமக்கு வர்றதை முயற்சி பண்ணு, அதை மக்களுக்கு பிடிச்சா உன்னை ஏத்துக்குவாங்கனு அண்ணன் சொல்லியிருக்கார்." என்றவரிடம், "ராகவேந்திரா புரொடக்‌ஷன்ஸ் மூலமாக 2020-ல் நீங்கள் அறிமுகமாவதாக ஒரு அறிவிப்பு வந்திருந்தது. அந்தத் திரைப்படம் என்னாச்சு?" எனக் கேட்டோம்.

பதில் கொடுத்த எல்வின், "பேசிட்டுதான் இருக்கோம். தயாரிப்பு நிறுவனம் அதை முறையாக அறிவிக்கும்." என்றார்.

மேலும் பேசிய அவர், "எனக்குத் தொடக்கத்துல நடிக்கணும்னு ஆர்வமில்லை. டான்சர் ஆகணும்ங்கிறதுதான் ஆசையாக இருந்தது. யூனியன்ல கார்ட் வாங்கி டான்சராகவும் இருந்தேன்.

பிறகு, அண்ணனோட உதவி இயக்குநராக 'மாஸ்', 'டான்' படங்கள்ல நான் பணியாற்றியிருக்கேன். துணை கோரியோகிராஃபராகவும் இருந்திருக்கேன்.

பிறகு, அண்ணன் நடிக்கக் கூப்பிட்டார். சொல்லப்போனால், அண்ணனை மாதிரி எனக்கும் சேவைகள் செய்யணும்னு ஆசையாக இருக்கு.

நான் இப்போ அதைச் செய்தால் அவருடைய பணத்தை வைத்துதான் அதைச் செய்கிற மாதிரி இருக்கும்.

Bullet BTSBullet BTS

நானாகச் சம்பாதிச்சு என்னுடைய கையால அந்த சேவைகளைச் செய்யணும்னு எனக்கு ஆசையாக இருக்கு. 'புல்லட்' திரைப்படத்துல வர்ற போலீஸ் கதாபாத்திரத்திற்கு பல நடிகர்களின் பெயர்களும் எழுந்தன.

ஆனால், அண்ணன் கதைக் கேட்டு அவருக்கு அந்த கேரக்டர் பிடிச்சு அவராகவேதான் இந்தப் படத்துல நடிக்கிறதுக்கு கேட்டார்.

தம்பிக்காக எதாவது விஷயம் செய்யணும்னு அவராகவே படத்தில் வரும் போலீஸ் கேரக்டரைக் கேட்டு செய்திருப்பது ரொம்ப பெரிய விஷயம்!" எனப் பேசினார்.

சினிமா விகடனின் பிரத்யேக Whatsapp க்ரூப்

https://chat.whatsapp.com/JSk78H7siYK4aL2qO1RglR

சினிமா தொடர்பான எக்ஸ்க்ளூசிவ் அப்டேட், அசத்தல் பேட்டிகள், டி.வி அப்டேட்கள் என எதையும் மிஸ் செய்யாமல் தெரிந்து கொள்ள...

உங்கள் வாட்ஸ் அப் மூலமே இணைந்திருங்கள் சினிமா விகடனுடன்...

https://chat.whatsapp.com/JSk78H7siYK4aL2qO1RglR

Read Entire Article