ARTICLE AD BOX
இயக்குநர் பா. ரஞ்சித்தின் நீலம் பண்பாட்டு மையம் நடத்தும் 'மார்கழியில் மக்களிசை' நிகழ்வு நேற்றைய தினம் தொடங்கியது.
6வது முறையாகத் தொடர்ந்து நடைபெறும் இந்த நிகழ்வை கனிமொழி எம்.பி., இயக்குநர்கள் வெற்றி மாறன், லோகேஷ் கனகராஜ், இசையமைப்பாளர் ஜி.வி. பிரகாஷ் குமார் ஆகியோர் பறையடித்துத் தொடங்கி வைத்தனர்.
Margazhiyil Makkalisai 2025இந்த நிகழ்வைத் தொடங்கி வைத்த பிறகு இயக்குநர் லோகேஷ் கனகராஜும் இசையமைப்பாளர் ஜி.வி. பிரகாஷும் இந்த நிகழ்வு குறித்து மேடையில் பேசினார்கள்.
Kanimozhi: "நம்முடைய கலை வடிவங்களையும் மொழியையும் பிடுங்கிக் கொண்டு சென்றுவிட்டார்கள்" - கனிமொழிமேடையில் லோகேஷ் கனகராஜ், "எனக்கு இந்த மேடை மூலமாகத்தான் பாடலாசிரியர் அறிவு யார் என்பதே எனக்குத் தெரியவந்தது.
இத்தனை ஆண்டுகளாகத் தொடர்ந்து இதனை நடத்திக் கொண்டிருக்கும் ரஞ்சித் அண்ணாவுக்குப் பாராட்டுகள். இனி இந்த முன்னெடுப்புக்கு என்னுடைய பங்களிப்பும் இருக்கும்" எனப் பேசினார்.
Lokesh Kanagaraj - Coolieஜி.வி. பிரகாஷ் குமார் பேசுகையில், "ஒவ்வொரு மேடையிலும் இது வளர்ந்துகொண்டே இருக்கிறது. இசை அனைவருக்கும் பொதுவானது.
இன்னும் இது அடுத்த கட்டங்களை நோக்கி முன்னேற வேண்டும். இங்கிருந்து நிறைய இசைக் கலைஞர்கள் வருகிறார்கள்.
இந்த மேடையை நன்றாகப் பயன்படுத்திக் கொள்ளுங்கள். இங்கிருந்து நிறைய சுயாதீன கலைஞர்கள் வளர்ந்து வருகிறார்கள்" எனக் கூறினார்.
Lokesh: "கூலி ரிலீஸுக்குப் பிறகு நான் எந்தப் பேட்டியும் கொடுக்காததுக்குக் காரணம்" - லோகேஷ் கனகராஜ்
18 hours ago
2







English (US) ·