ARTICLE AD BOX
'கூலி' படத்தின் வெளியீடு நெருங்கி வருவதால் படத்தின் இறுதிகட்டப் பணிகளில் இயங்கி வருகிறார் லோகேஷ் கனகராஜ்.
படத்தின் ப்ரோமோஷனுக்காக சில நேர்காணல்களும் அவர் கொடுத்து வருகிறார்.
Coolie - Chikitu Songலோகேஷ் கனகராஜ், பேட்டிகளிலும், நிகழ்வுகளிலும் எப்போதுமே தன்னுடைய குடும்பத்தினரைப் பற்றி பகிர்ந்துக் கொள்ள விரும்பமாட்டார்.
அதற்கான காரணத்தையும் தொகுப்பாளர் கோபிநாத்துக்கு அளித்த சமீபத்திய பேட்டியில் பேசியிருக்கிறார்.
Lokesh Kanagaraj: "லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் சூப்பர் ஹீரோ படம்"- ஆமீர் கான் கொடுத்த அப்டேட்லோகேஷ் கனகராஜ் பேசுகையில், "என்னுடைய முதல் படமான 'மாநகரம்' படத்தின் வெளியீடு சமயத்தில் என்னுடைய குடும்பத்தைப் பற்றி நான் பேசியிருப்பேன்.
அதன் பிறகு என்னுடைய குடும்பத்தைப் பற்றி நான் எங்கும் பேச விரும்பவில்லை. அவர்களுடைய சுதந்திரத்தை ஏன் கெடுக்க வேண்டும், என்பதுதான் என்னுடைய எண்ணம்.
சமூக வலைதளப் பக்கங்களில் அவரை டேக் செய்து பதிவிடப்படும் பதிவுகள், அவர்களை எவ்வளவு பாதிக்கும் என்பதை சிந்தித்துதான் இதை செய்கிறேன்.
இன்றைய தேதியில், சமூக வலைதளப் பக்கங்களில் மிகவும் கவனமாக இருக்க வேண்டியதாகவுள்ளது. சமீபத்தில் கூட, நான் அறியாமல் ஒரு பதிவை லைக் செய்துவிட்டேன்.
Lokesh Kanagaraj with Nagarjunaஅதனைத் தொடர்ந்து, என்னை பல பக்கங்களில் இருந்து தொடர்பு கொண்டு, ஏன் அப்படி செய்தீர்கள் என கேட்டார்கள். இப்படியான விஷயங்களால்தான், வளர்ந்து வரும் குழந்தைகள் நிம்மதியாக வளரட்டும் என சிந்திக்கிறேன்.
ஒரு பஸ் நடத்துனரின் மகனாக இருந்தபோது எனக்கு எவ்வளவு மகிழ்ச்சி இருந்ததோ, அதுபோல என் குடும்பத்தினரும் மகிழ்ச்சியாக இருக்கட்டும். மற்றபடி என் குடும்பத்தினர் பற்றிய தகவல்களை மறைப்பதில் வேறொன்றும் இல்லை.
ஷூட்டிங் சமயத்தில் மாதத்திற்கு இரண்டு முறை வீட்டிற்குச் சென்றாலே பெரிய விஷயமாக இருக்கும். இதை நான் பெரிய தியாகமாகப் பார்க்கவில்லை.
இந்த துறை இப்படிதான் இருக்கும் என நாம் தெரிந்துதான் வந்திருக்கிறோம். எல்லோருமே, என்னைப் புரிந்துக் கொள்கிறார்கள்." எனப் பகிர்ந்திருக்கிறார்.
சினிமா விகடனின் பிரத்யேக Whatsapp க்ரூப்
https://chat.whatsapp.com/JSk78H7siYK4aL2qO1RglR
சினிமா தொடர்பான எக்ஸ்க்ளூசிவ் அப்டேட், அசத்தல் பேட்டிகள், டி.வி அப்டேட்கள் என எதையும் மிஸ் செய்யாமல் தெரிந்து கொள்ள...
உங்கள் வாட்ஸ் அப் மூலமே இணைந்திருங்கள் சினிமா விகடனுடன்...

4 months ago
6





English (US) ·