ARTICLE AD BOX
காளிவெங்கட் நடிப்பில் கார்த்திகேயன் மணி இயக்கியுள்ள மெட்ராஸ் மேட்னி திரைப்படம் திரையரங்குகளில் வெளியாகியுள்ளது.
கலவையான விமர்சனங்களைப் பெற்றிருந்தாலும், மிடில் கிளாஸ் மக்களின் வாழ்க்கையை காட்சிபடுத்தியதிலும், feel good கதை சொல்லலாலும் ரசிகர்களை ஈர்த்துவருகிறது மெட்ராஸ் மேட்னி.
‘மெட்ராஸ் மேட்னி.' சத்தியராஜ், ரோஷினி ஹரிபிரியன், ஷெல்லி நபு குமார், ராமர், ஜியார்ஜ் மரியன், சுனில், கீதா கைலாசம் எனப் பலர் நடித்துள்ள இந்த படத்துக்கு ஆதரவு திரட்டும் வகையில் காணொளி வெளியிட்டுள்ளார் இயக்குநர் லோகேஷ் கனகராஜ்.
"மெட்ராஸ் மேட்னி படம் பார்த்தேன். மிகச் சிறப்பாக இருந்தது. எனக்கு ரொம்ப பிடித்திருந்தது.
முன்னாடி இருந்தே காளி வெங்கட் அண்ணனின் படங்கள் பிடிக்கும். கூலி மூலமா தான் அவருடன் இணைந்து வேலைசெய்ய வாய்ப்பு கிடைத்தது. இந்த படத்தை அருமையாக நடித்திருக்கிறார். சத்தியராஜ் சாரும் உடன் இருந்த எல்லோரும் சிறப்பாக நடித்திருந்தனர்.
Coolie - Lokesh Kanagarajமிடில் கிளாஸ் வாழ்க்கை வாழ்ந்த எல்லோரும் இந்த படத்தை எளிதாக கனக்ட் பண்ணிக்க முடியும்னு தோணுது. எனக்கு அப்படித்தான் இருந்தது.
கடைசி காட்சி, எல்லோரும் எப்போது ஒன்றாக அமர்ந்து சாப்பிட்டோம் எனக் கேட்கும் காட்சி என ஆங்காங்கே நமக்கு கனக்ட் ஆகும் விஷயங்கள் இருந்தன
படத்தின் இயக்குநர் கார்த்திகேயன், தயாரிப்பாளர், வெளியிட்ட ட்ரீம் வாரியர்ஸ் எல்லோருக்கும் வாழ்த்துகள் தெரிவிக்கிறேன்." எனக் குறிப்பிட்டு இருக்கிறார்.
Amitabh Bachchan: அமிதாப் பச்சன் வாங்கிய புதிய BMW i7 கார் - விலை எவ்வளவு... சிறப்பம்சம் என்ன?
6 months ago
7





English (US) ·