ARTICLE AD BOX
'லியோ' படத்திற்குப் பிறகு நடிகர் ரஜினிகாந்தை வைத்து லோகேஷ் கனகராஜ் இயக்கி இருக்கும் படம் 'கூலி'.
இப்படத்தில் நாகர்ஜூனா, சத்யராஜ், உபேந்திரா, செளபின் சாஹிர், ஸ்ருதி ஹாசன் ஆகியோர் முக்கியக் கதாபாத்திரங்களில் நடித்திருக்கிறார்கள்.
அனிருத் இந்தப் படத்திற்கு இசையமைத்திருக்கிறார். இப்படம் வரும் ஆகஸ்ட் 15 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாக இருக்கிறது.
ரஜினி - லோகேஷ் கனகராஜ் - கூலிஇந்நிலையில் லோகேஷ் கனகராஜ் ஹாலிவுட் ரிப்போர்டரின் இந்திய பதிப்பிற்கு பேட்டி ஒன்றை அளித்திருக்கிறார்.
அதில் பல்வேறு விஷயங்களைப் பகிர்ந்திருக்கிறார். தொகுப்பாளர் சம்பளம் குறித்து கேள்வி எழுப்பியதற்கு பதிலளித்த அவர், "ரஜினிகாந்த் சாரின் சம்பளம் பற்றி நான் எதுவும் சொல்ல முடியாது.
ஆனால் எனது சம்பளம் 50 கோடி ரூபாய் என நீங்கள் குறிப்பிட்டீர்கள். இது எனது முந்தையப் படமான 'லியோ' வெற்றியால் அதிகமானது. லியோ திரைப்படம் ரூ.600 கோடி வசூலித்தது. இதனால் எனது சம்பளமும் அந்தப் படத்தில் வாங்கியதை விட இரண்டு மடங்கு அதிகமானது.
இந்த பணத்தில் நான் வரி செலுத்துவதோடு எனது நண்பர்கள் உள்ளிட்டவர்களும் கொடுக்க வேண்டும். இந்த நிலையை அடைய நான் செய்த தியாகங்கள் குறித்து சொல்லப்போவதில்லை. கடைசி இரண்டு ஆண்டுகள் 'கூலி' படத்தை உருவாக்குவதில் கவனம் செலுத்தினேன். ஆனால், அது எனது பொறுப்பு.
கூலி'கூலி' திரைப்படம் ரூ.1000 கோடி வசூலிக்குமா எனக் கேட்கிறார்கள். அதை என்னால் உறுதியாகச் சொல்ல முடியாது. ஆனால், மக்கள் ரூ.150 கொடுத்து வாங்கிப் பார்க்கும் டிக்கெட்டிற்கு ஏற்ற படமாக கூலி அமையும். அதனை என்னால் உறுதியாக சொல்ல முடியும்" என்று கூறியிருக்கிறார்.
Lokesh Kanagaraj: 'சஞ்சய் தத் சாருடன் இன்னொரு படம் பண்ணுவேன்'- லோகேஷ் கனகராஜ் சொன்ன அப்டேட்சினிமா விகடனின் பிரத்யேக Whatsapp க்ரூப்
https://chat.whatsapp.com/JSk78H7siYK4aL2qO1RglR
சினிமா தொடர்பான எக்ஸ்க்ளூசிவ் அப்டேட், அசத்தல் பேட்டிகள், டி.வி அப்டேட்கள் என எதையும் மிஸ் செய்யாமல் தெரிந்து கொள்ள...
உங்கள் வாட்ஸ் அப் மூலமே இணைந்திருங்கள் சினிமா விகடனுடன்...

5 months ago
6





English (US) ·