ARTICLE AD BOX
ஆமீர் கான் நடித்திருக்கும் 'சித்தாரே ஜமீன் பர்' திரைப்படம் இம்மாதம் 20-ம் தேதி திரையரங்குகளில் வெளியாகவிருக்கிறது.
ரிலீஸையொட்டி படத்தைப் புரொமோட் செய்ய பிஸியாக இயங்கி வருகிறார் ஆமீர் கான்.
Coolie - Lokesh Kanagarajஇவருடைய பிறந்தநாளை முன்னிட்டு லோகேஷ் கனகராஜ் ஆமீர் கானுடன் இருக்கும் புகைப்படத்தைத் தன்னுடைய சமூக வலைதளப் பக்கத்தில் வெளியிட்டிருந்தார்.
அப்போதிருந்து ஆமீர் கான் 'கூலி' படத்தில் கேமியோ செய்திருக்கிறாரா என்ற எதிர்பார்ப்பும் ஒருபுறம் எழுந்திருக்கிறது.
'சித்தாரே ஜமீன் பர்' படத்திற்காக அளித்த சமீபத்திய பேட்டியில், லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் நடிக்கவிருக்கும் திரைப்படம் தொடர்பாக அவர் பேசியிருக்கிறார்.
அவர், "லோகேஷும் நானும் இணைந்து ஒரு திரைப்படம் செய்யவிருக்கிறோம். அது ஒரு சூப்பர் ஹீரோ திரைப்படம்.
ஆக்ஷன் படமாகப் பெரிய ஸ்கேலில் படம் உருவாகவிருக்கிறது. லோகேஷ் இயக்கத்தில் நான் நடிக்கும் திரைப்படம் 2026-ம் ஆண்டின் இரண்டாம் பாதியில் தொடங்கும்.
ஆமீர் கான்நாங்கள் இருவரும் அப்படத்தை ஒப்பந்தம் செய்துவிட்டோம். இவ்வளவுதான் இப்போது அந்தத் திரைப்படம் பற்றிப் பேச முடியும்," எனக் கூறியிருக்கிறார்.
'கூலி' படத்தின் ரிலீஸுக்குப் பிறகு லோகேஷ் கனகராஜ் 'கைதி 2' படத்தை எடுக்கவிருக்கிறார். சமீபத்திய பேட்டிகளிலும் இதை அவரே அறிவித்திருந்தார்.
'சித்தாரே ஜமீன் பர்' படத்தைத் தாண்டி, பாலிவுட் இயக்குநர் ராஜ்குமார் சந்தோஷி இயக்கத்தில் 'லாஹூர் 1947' படத்தில் நடித்திருக்கிறார் ஆமீர் கான். இப்படமும் ரிலீஸுக்கு தயாராகி வருகிறது.

6 months ago
8





English (US) ·