ARTICLE AD BOX
விக்ரம் பிரபு நடிப்பில் உருவாகியிருக்கிற 'லவ் மேரேஜ்' திரைப்படம் இம்மாதம் 27-ம் தேதி திரையரங்குகளில் வெளியாகவிருக்கிறது. அறிமுக இயக்குநர் ஷண்முக ப்ரியன் இப்படத்தை இயக்கியிருக்கிறார்.
இன்று இப்படத்தின் டிரெய்லர் வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது. விக்ரம் பிரபு, ஷான் ரோல்டன் உள்ளிட்ட படக்குழுவினர் அனைவரும் இந்த நிகழ்வில் கலந்துகொண்டனர். இயக்குநர் ஆதிக் ரவிச்சந்திரனும் இந்த விழாவில் சிறப்பு விருந்தினராகப் பங்கேற்றிருந்தார்.
Vikram Prabhu - Love Marriageவிக்ரம் பிரபு பேசும்போது, "இந்தப் படத்தை ஹாப்பியாக ஷூட் பண்ணினோம். இந்த மாதிரியான ஒரு அனுபவம் வேற எந்தப் படத்துக்கும் எனக்கு கிடைச்சது இல்ல. இந்தப் படத்தோட படப்பிடிப்பிற்காக நான் கோபிச்செட்டிப்பாளையம் போறேன்னு சொன்னதும் அப்பா ரொம்பவே சந்தோஷப்பட்டாரு.
அவருடைய 'சின்ன தம்பி' உள்ளிட்ட பல படங்களோட படப்பிடிப்பு அங்கதான் நடந்திருக்கு. 'அங்க போனதும் அவங்களைப் பாரு, இவங்களைப் போய் பாரு'னு அப்பா சொல்லி அனுப்பினாரு.
அங்கப் பல குடும்பங்களையும் நான் போய் மீட் பண்ணினேன். கோபிச்செட்டிப்பாளையம் வரைக்கும் போயிட்டோம், நல்ல படமாக வரணும்னு எனக்கு பிரஷர் வந்திருச்சு.
Kaali Venkat: "நான் அழுதிடவே கூடாதுன்னு நினைச்சேன்" - பட விழாவில் கலங்கிய காளி வெங்கட்
Vikram Prabhu - Love Marriageஷான் ரோல்டனை எனக்கு ரொம்ப பிடிக்கும். மியூசிக் ஒரு லைஃப் மாதிரி. அதை அழகாக இந்தப் படத்துக்கு ஷான் கொடுத்திருக்காரு.
இந்தப் படத்தோட ஷூட்டிங் முடிச்சிட்டு கிளம்பும்போது கஷ்டமாகதான் இருந்தது. ஆனா, நல்ல படத்தை எடுத்திருக்கோம்னு திருப்தி இருந்தது." என்றார்.
சினிமா விகடனின் பிரத்யேக Whatsapp க்ரூப்
https://chat.whatsapp.com/JSk78H7siYK4aL2qO1RglR
சினிமா தொடர்பான எக்ஸ்க்ளூசிவ் அப்டேட், அசத்தல் பேட்டிகள், டி.வி அப்டேட்கள் என எதையும் மிஸ் செய்யாமல் தெரிந்து கொள்ள...
உங்கள் வாட்ஸ் அப் மூலமே இணைந்திருங்கள் சினிமா விகடனுடன்...

6 months ago
8





English (US) ·