ARTICLE AD BOX
விக்ரம் பிரபு நடிப்பில் உருவாகியிருக்கிற 'லவ் மேரேஜ்' திரைப்படம் இம்மாதம் 27-ம் தேதி திரையரங்குகளில் வெளியாகவிருக்கிறது. அறிமுக இயக்குநர் ஷண்முக ப்ரியன் இப்படத்தை இயக்கியிருக்கிறார்.
இன்று இப்படத்தின் டிரெய்லர் வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது. விக்ரம் பிரபு, ஷான் ரோல்டன் உள்ளிட்ட படக்குழுவினர் அனைவரும் இந்த நிகழ்வில் கலந்துகொண்டனர். இயக்குநர் ஆதிக் ரவிச்சந்திரனும் இந்த விழாவில் சிறப்பு விருந்தினராகப் பங்கேற்றிருந்தார்.
Adhik Ravichandran - Love Marriage ஆதிக் ரவிச்சந்திரன் பேசுகையில், "இன்னைக்கு இந்த நிகழ்வுக்கு வந்ததுக்கு காரணம் விக்ரம் பிரபு சார்தான். 'லவ் மேரேஜ்' படத்தோட டிரெய்லர் பார்க்கும்போது எல்லா 90ஸ் கிட்ஸோட பிரதிபலிப்பாக இருந்தது.
இந்தப் படத்தோட பாடல்கள், டிரெய்லர்களெல்லாம் முன்னாடியே எனக்கு காட்டியிருந்தாங்க. மிஷ்கின் சாரோட பாடலைக் கேட்கும்போது 30 நொடிகள் முடிஞ்சதுமே இந்தப் பாடல் பெரிய ஹிட்டாகும்னு சொன்னேன்.
ஒரு படத்துக்கான நேர்மறையான விஷயங்கள் அந்தப் படத்தோட டைட்டிலில் இருந்தே தொடங்கும்னு நான் நம்புவேன். இந்தப் படத்தோட டைட்டிலே பெரிய சக்சஸ்னு நான் நினைக்கிறேன்.
Ajith: "இது என் நேரம், நான் பின்வாங்க மாட்டேன்... ஏன் என்னால் முடியாது?" - அஜித் ஓப்பன் டாக்
Adhik Ravichandran - Love Marriage புதுமுக இயக்குநராக இப்படியான ஒரு படத்தோட வர்ற இயக்குநர் ஷண்முக ப்ரியனுக்கு வாழ்த்துகள். 'கும்கி' படத்தோட முதல் நாள் முதல் காட்சியில் விக்ரம் பிரபு சாருக்கு பெரியளவிலான வரவேற்பு கிடைச்சது.
புதிய நடிகருக்கு அப்படியான ஒரு வரவேற்பு கிடைக்கிறது பெரிய விஷயம். 'Boy next door' கதாபாத்திரங்களிலும், எக்ஸ்பிரிமெண்டல் கதைகளிலும் விக்ரம் பிரபு சார் அதிகமாக நடிக்கிறாரு. இந்தப் படம் வெற்றிப் படமாக அமையறதுக்கு அவருக்கு வாழ்த்துகள்." எனப் பேசினார்.
சினிமா விகடனின் பிரத்யேக Whatsapp க்ரூப்
https://chat.whatsapp.com/JSk78H7siYK4aL2qO1RglR
சினிமா தொடர்பான எக்ஸ்க்ளூசிவ் அப்டேட், அசத்தல் பேட்டிகள், டி.வி அப்டேட்கள் என எதையும் மிஸ் செய்யாமல் தெரிந்து கொள்ள...
உங்கள் வாட்ஸ் அப் மூலமே இணைந்திருங்கள் சினிமா விகடனுடன்...

6 months ago
7





English (US) ·