ARTICLE AD BOX
நேற்று(ஏப்ரல் 14) நடைபெற்ற சென்னை மற்றும் லக்னோ அணிகளுக்கிடையிலான போட்டியில் சென்னை அணி 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்று தொடர் தோல்விக்கு முற்றுப்புள்ளி வைத்திருக்கிறது.
இந்நிலையில் தோல்வி குறித்து லக்னோ கேப்டன் ரிஷப் பன்ட் பேசியிருக்கிறார். இதுதொடர்பாக பேசியிருக்கும் அவர், "நாங்கள் நேற்றையப் போட்டியில் ஒரு 10, 15 ரன்கள் குறைவாக அடித்து விட்டோம் என்று நினைக்கின்றேன்.
lsg vs csk`பவர் பிளேவில் சரியாக பந்து வீசுவது இல்லை’
எப்போது எல்லாம் எங்கள் பக்கம் காற்று வீசியதோ, அப்போதெல்லாம் நாங்கள் விக்கெட்டுகளை இழந்தோம். இதனால் ஒவ்வொரு முறையும் பார்ட்னர்ஷிப் அமைக்க வேண்டிய கட்டாயத்தில் நாங்கள் தள்ளப்பட்டோம்.
ஆடுகளம் பேட்டிங்கிற்கு சாதகமாக இருந்தாலும், பந்து கொஞ்சம் நின்று வந்தது. இதனால் நாங்கள் கூடுதலாக ஒரு 15 ரன்களை நிச்சயமாக அடித்திருக்க வேண்டும். என்னுடைய ஆட்டம் திருப்தி அளிக்கிறது. என்னுடைய பேட்டிங்கில் கொஞ்சம் முன்னேற்றம் தெரிவதை நான் உணர்கின்றேன்.
சில சமயம் என்னால் ரன்கள் சேர்க்க முடியவில்லை. ஆனால் ஒவ்வொரு போட்டியிலும் நான் கவனம் செலுத்தி வருகிறேன். ரவி பிஷ்னோய்க்கு ஒரு ஓவரை கடைசி கட்டத்தில் வழங்கலாமா வேண்டாமா என்பது குறித்து பல வீரர்களுடன் விவாதித்தேன்.
ஆனால் இன்று எங்களால் ரவி பிஷ்னோய்க்கு கடைசி கட்டத்தில் ஓவர் வழங்க முடியவில்லை. பவர் பிளேவில் நாங்கள் சரியாக பந்து வீசுவது கிடையாது.
csk vs lsgசில விஷயங்களைக் கொஞ்சம் சரி செய்து விளையாடினால், நிச்சயம் வெற்றி பெறுவோம். ஒவ்வொரு போட்டியிலும் நாங்கள் நிறைய பாசிட்டிவான விஷயங்களை எடுத்துக் கொள்கிறோம். இன்னும் சில விஷயங்களில் முன்னேற்றம் அடைய வேண்டும் என நினைக்கிறோம்" என்று ரிஷப் பன்ட் கூறியிருக்கிறார்.
சினிமா விகடனின் பிரத்யேக Whatsapp க்ரூப்
https://chat.whatsapp.com/E0QlpeNbGHnF9W5rFKCVSU
சினிமா தொடர்பான எக்ஸ்க்ளூசிவ் அப்டேட், அசத்தல் பேட்டிகள், டி.வி அப்டேட்கள் என எதையும் மிஸ் செய்யாமல் தெரிந்து கொள்ள...
உங்கள் வாட்ஸ் அப் மூலமே இணைந்திருங்கள் சினிமா விகடனுடன்...

8 months ago
8







English (US) ·