LSG vs GT: சவாலளித்த குஜராத்; Unstoppable நிக்கோலஸ் பூரன்! - எப்படி வென்றது லக்னோ?

8 months ago 8
ARTICLE AD BOX

இன்றைய ஐபிஎல் போட்டியில் குஜராத் டைட்டன்ஸ் மற்றும் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் ஆகிய அணிகள் மோதின. லக்னோ மைதானத்தில் நடைபெற்ற இந்த போட்டியில் டாஸ் வென்ற லக்னோ அணி பந்து வீச்சை தேர்வு செய்தது. முதல் இன்னிங்ஸில் குஜராத் 6 விக்கெட் இழப்பிற்கு 180 ரன்கள் எடுத்திருந்தது. 181 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய லக்னோ அணி 19.3 ஓவரில் 186 ரன்கள் எடுத்து குஜராத் அணியை வீழ்த்தி வெற்றி பெற்றுள்ளது.

இன்றைய போட்டியில் குஜராத் அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக களமிறங்கிய சாய் சுதர்சன் மற்றும் சுப்மன் கில் ஆகியோர் பொறுமையாக ஆடத் தொடங்கினர். லக்னோவின் பவுலர்கள் கில் மற்றும் சுதர்சனின் விக்கெட்டை எடுக்க முடியாமல் திணறினர். பத்து ஓவர்கள் முடிவில் 103 ரன்கள் எடுத்திருந்தது குஜராத். பவர்பிளே முடிவில் சாய் சுதர்சன் மற்றும் கில் இருவரும் சேர்ந்து 54 ரன்கள் எடுத்திருந்தனர்.

LSG vs GT

இதுவரை குஜராத் அணியின் தொடக்க ஆட்டக்காரர்கள் கில் மற்றும் சுதர்சன் இருவரும் இணைந்து மிகச்சிறந்த ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகின்றனர். இவர்கள் சென்ற போட்டிகளில் பெரும்பாலும் 61, 64, 78 ரன்கள் அடித்து தங்களது பார்ட்னர்ஷிப்பை கொடுத்து வருகின்றனர். முதல் பத்து ஓவரில் லக்னோவிற்கு எந்த விக்கெட்டும் கிடைக்கவில்லை. 13வது ஓவரில் ஆவேஷ்கான் பந்துவீச வந்தார். 38 பந்துகளில் 60 ரன்கள் எடுத்திருந்த சுப்மன் கில் ஆவேஷின் முதல் புல் ஸ்லாட் பந்திலேயே பவுண்டரி அருகே நின்று கொண்டு இருந்த மார்கரமிடம் கேட்ச் ஆனார். பின்னர் 14 வது ஓவரில் ரவி பிஷ்னோயின் முதல் பந்தில் கேட்ச் ஆனார் சுதர்சன். அவர் 37 பந்தில் 56 ரன்களுடன் வெளியேறினார்.

14 வது ஓவரின் கடைசி பந்தில் வாஷிங்டன் சுந்தர் போல்ட் ஆனார். இப்படி அடுத்தடுத்த ஓவர்களில் சுப்மன் கில், சாய் சுதர்சன், வாஷிங்டன் சுந்தர் ஆகியோர்களின் விக்கெட்டுகளை இழந்து இருந்தது குஜராத் அணி. இதனால் அவர்களின் விக்கெட்டிற்கு பிறகு குஜராத் அணியின் ரன் குவிப்பு வெகுவாக குறைய தொடங்கியது. அதிரடியாக ஆட்டத்தை வெளிப்படுத்தும் பட்லரை 11 பந்துகளில் 11 ரன்கள் மட்டுமே எடுக்க வைத்து சுருட்டியது லக்னோ. 17வது ஓவரில் திக்வேஷ் வீசிய கூக்ளியை ரூதர்போர்டு அடித்தவுடன் பந்தை பிடிக்க பண்ட் பயங்கர வேகமாக ஓடி கேட்சைத் தவறவிட்டார்.

ஏலத்தில் விற்கப்படாமல் இருந்த லக்னோவின் சிறந்த பந்து வீச்சாளராக இருக்கும் ஷர்துல் தாகூர் கடைசி ஓவரில் பந்து வீச வந்தார். அவர் பந்து வீசிய முதல் பந்தில் சிக்ஸர் கொடுத்தாலும், மூன்றாவது மற்றும் நான்காவது பந்துகளில் ரூதர்போர்டு மற்றும் ராகுல் டெவாடியா ஆகியோர் அடுத்தடுத்து ஆட்டம் இழக்க தாகூரின் ஹாட்ரிக் விக்கெட் ஆன் ஆனது. ஸ்ட்ரைக்கில் இருந்த ரஷீத் கான் பந்தை மிட்ஆஃப் மீது பறக்க விட, பறந்து பறந்து கேட்ச் பிடிக்கும் மார்க்ரம் தலைக்கு மேல் சென்றது. இதனால் கடைசி பந்தில் அவர் இரண்டு ரன்கள் மட்டுமே எடுத்தார். இப்படி கடைசி ஓவரில் குஜராத்தைப் பதறவிட்ட ஷர்துல் தாகூர் 11 ரன்கள் மட்டுமே விட்டுகொடுத்து 2 விக்கெட்டுகளை எடுத்து பேட்டர்களை அலரவிட்டார். முதல் இன்னிங்சில் குஜராத் 6 விக்கெட் இழப்பிற்கு 180 ரன்கள் மட்டுமே எடுதத்திருந்தது.

LSG vs GT
Sachin: ‘இவர்தான் ரியல் ஹீரோ’ -அமீரின் மாபெரும் கிரிக்கெட் கனவைக் கண்டு வியந்த சச்சின்

180 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கியது லக்னோ அணி. இந்த 2025 ஐபிஎல் போட்டிகளில் லக்னோ அணியின் கேப்டன் ரிஷப் ஃபண்ட் மீது மிகுந்த எதிர்பார்ப்பு இருந்தது. ஆனால் அவர் இன்றைய போட்டியில் 18 பந்துகளில் 21 ரன்கள் மட்டுமே எடுத்து கேட்ச் ஆனார். இன்றைய போட்டியில் தொடக்கத்தில் இருந்து நிதானமான ஆட்டத்தை வெளிப்படுத்திய லக்னோ அணி, பவர்பிளேயின் முடிவில் 61 ரன்கள் எடுத்து விக்கெட் ஏதும் இழக்காமல் இருந்தது. மூன்றாவது ஓவரில் சிராஜ் பந்து வீசினார், ரிஷப் ஃபண்ட் ஸ்ட்ரைக்கில் இருந்த போது இரண்டு பந்துகளை விக்கெட் கீப்பர் பட்லர் கேட்ச் பிடிக்க தவறவிட்டார்.

ஒருவேளைப் அவர் அந்த பந்தை பிடித்திருந்தால் ஒரு விக்கெட் கிடைத்து இருக்கும். பந்து பவுண்டரி சென்றிருக்காது. அந்த கேட்ச் பிடிக்க தவறவிட்ட ஏமாற்றத்தை சிராஜ் முகத்தில் பார்க்க முடிந்தது. தொடக்கத்தில் இருந்து அதிரடியாக ஆடி வந்த மார்க்ரம் 9 பவுண்டரிகள் 1 சிக்ஸ் அடித்து 31 பந்துகளில் 58 ரன்கள் எடுத்து ஆட்டம் இழந்தார். இந்த 2025 ஐபிஎல் போட்டிகளில் தனது அபாரமான பேட்டிங்கை சிக்ஸர்ஸ் பவுண்டரிகளால் பவுலர்களை பதம் பார்க்கும் நிகோலஸ் பூரன் 7வது ஓவரில் பேட்டிங் செய்ய களம் இறங்கினார்.

LSG vs GT
CSK: ``ஒரு சர்க்கஸுக்குச் செல்வது போல.. விளையாட்டை விட யாரும் பெரியவன் அல்ல" -விஷ்ணு விஷால் காட்டம்

இவர் 10வது ஓவரில் சாய் கிஷோரின் பந்தை குறி வைத்து மூன்று சிக்ஸ் அடித்தார். நிகோலஸ் பூரன் இந்த ஐபிஎல் தொடரின் சென்ற போட்டிகளில் 75(30), 70(26), 87(36) என்று தனது மிகச் சிறந்த ஆட்டத்தை வெளிப்படுத்தி உள்ளார். இன்று பூரன் 34 பந்துகளில் 61 எடுத்து 16 வது ஓவரில் ரசீத் கானின் பந்தில் கேட்ச் ஆனார். இன்று ஒரு பவுண்டரி, 7 சிக்ஸர்ஸ் அடித்த பூரன், லக்னோவை வீழ்த்த நினைத்தால் பூரனின் விக்கெட்டை தான் விரைவாக எடுக்க வேண்டும் என்று நிரூபித்துள்ளார். 19 ஓவர்கள் முடிவில் 175 ரன்கள் எடுத்து இருந்தது லக்னோ அணி. கடைசி ஓவரில் 6 ரன்கள் தேவைப்பட்ட நிலையில், ஒரு ரன் எடுத்தார் சமத், பின் ஆயுஷ் பதோனி ஒரு பவுண்டரி, ஒரு சிக்ஸ் என விளாசினார். இதனால் லக்னோ அணி 4 விக்கெட் இழப்பிற்கு 186 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது

Read Entire Article