ARTICLE AD BOX
ஐ.பி.எல் தொடரின் நேற்றையைப் போட்டியில் மும்பை அணியும், லக்னோ அணியும் மோதின. இதில் மும்பை அணியை 12 ரன்கள் வித்தியாசத்தில் லக்னோ அணி வீழ்த்தியது.
மும்பை இந்தியன்ஸ் அணி வெற்றியின் அருகே வந்த நிலையில் லக்னோ அணியின் சார்பாக ஷர்துல் தாக்கூர் வீசிய ஒரு ஓவர், ஆட்டத்தைத் தலைகீழாக மாற்றியது.
ஷர்துல் தாக்கூர் இந்நிலையில் போட்டிக்குப் பிறகு செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசிய ஷர்துல் தாக்கூர், "வெற்றி பெற்ற அணியாக இருப்பதில் மகிழ்ச்சி அளிக்கிறது.
கடைசி ஓவர் வீசும் போது எப்போதுமே பவுலர்களுக்கு கடும் நெருக்கடி ஏற்படும். ஆவேஸ் கானும் சரியான முறையில் பவுலிங் செய்தார். இதனைச் சரியாகச் செய்வதற்காகத்தான் நாங்கள் சம்பளம் வாங்குகின்றோம்.
எங்களுடைய திட்டத்தை நாங்கள் சரியாகக் களத்தில் செயல்படுத்தினோம். இந்த ஆடுகளம் கொஞ்சம் நெருக்கடியைக் கொடுத்தது.
நாங்கள் முதல் பாதியில் மும்பை அணிக்குப் பந்து வீசும் போது ஆடுகளம் எப்படிச் செயல்பட்டது என்பதைக் கண்காணித்தோம். எனினும் நாங்கள் பந்து வீசும் போது ஆடுகளம் கொஞ்சம் மாறி பேட்டர்ஸ்க்கு சாதகமாக இருந்தது" என்றிருக்கிறார்.
திக்வேஸ் தொடர்ந்து ஆட்டநாயகன் விருது வென்ற திக்வேஸ் குறித்துப் பேசிய அவர், "திக்வேஸ் அபாரமாகச் செயல்பட்டு வருகிறார். இது போன்ற வீரர்கள் எப்போதுமே தங்களுடைய இயல்பான ஆட்டத்தை வெளிப்படுத்தப் பயப்பட மாட்டார்கள். இது திக்வேஸுக்கு மிகப்பெரிய பலமாக இருக்கின்றது.
பயிற்சி ஆட்டத்தில் அவர் எப்படிப் பந்து வீசினார், அவருடைய பலம் என்ன என்பதை எல்லாம் நாங்கள் பார்த்தோம். நிச்சயமாக ஐ.பி.எல் தொடரில் ஒரு ஆச்சரியத்தைக் கொடுக்கக் கூடிய வீரராக திக்வேஸ் இருக்கின்றார்" என்று பாராட்டிப் பேசியிருக்கிறார்.
CSK vs DC: கேப்டனாகும் தோனி? மைக் ஹஸ்ஸி சூசகம்; Chepauk BreakingJunior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group...
இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும் https://bit.ly/3OITqxs
வணக்கம்,
BIG BREAKINGS முதல்... அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.
ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்... https://bit.ly/3OITqxs

8 months ago
8







English (US) ·