ARTICLE AD BOX
ஐபிஎல் தொடரின் நேற்றையப் போட்டியில் லக்னோ அணியும், ஹைதராபாத் அணியும் மோதின.
இந்தப் போட்டியில் லக்னோ அணி தோல்வியுற்று பிளே ஆஃப் செல்லும் வாய்ப்பை இழந்திருக்கிறது.
இந்நிலையில் தோல்விக்கு பிறகு பேசிய லக்னோ அணியின் கேப்டன் ரிஷப் பண்ட், “இந்தத் தொடர் எங்களுக்கு சிறப்பானத் தொடராக இருந்திருக்க வேண்டும்.
lsg vs srhஆனால் ஒரு சில காரணங்களால் அது முடியாமல் போய்விட்டது. நாங்கள் நிறைய இடங்களில் சறுக்கினோம்.
நிறைய வீரர்கள் காயங்களால் பாதிக்கப்பட்டனர். நாங்கள் அதைப்பற்றி பேசக்கூடாது என்றுதான் நினைத்தோம்.
ஏலத்தில் திட்டமிட்டதைப் போல எங்களின் பௌலிங் லைன் அப் இருந்திருந்தால் நிலைமை வேறாக இருந்திருக்கும்.
சில சமயங்களில் விஷயங்கள் உங்களுக்கு சாதகமாக அமையும். சில சமயங்களில் அமையாது.
நாங்கள் விளையாடியதைப் பெருமையாகத்தான் நினைக்கிறோம். எதிர்மறை விமர்சனங்களைத் தவிர்த்து பாஸிட்டிவான விமர்சனங்களை ஏற்றுக்கொள்கிறோம்.
rishabh pantஎங்களிடம் பலமான பேட்டிங் அணி இருந்தது. ஆனால் பவுலிங்கில் சறுக்கி விட்டோம்.
தொடர் தொடக்கத்தில் சரியாகத்தான் விளையாடினோம். இரண்டாம் பாதியில் நன்றாக விளையாடிய அணிகளை எதிர்த்து எங்களால் முன்னோக்கி செல்ல முடியவில்லை” என்று கூறியிருக்கிறார்.
LSG vs SRH : 'லக்னோவை ப்ளே ஆஃப் ரேஸிலிருந்து வெளியேற்றிய அந்த 5 ஓவர்கள்!' - என்ன நடந்தது?சினிமா விகடனின் பிரத்யேக Whatsapp க்ரூப்
https://chat.whatsapp.com/KzgH8aPb2MI9PVttY53JpX
சினிமா தொடர்பான எக்ஸ்க்ளூசிவ் அப்டேட், அசத்தல் பேட்டிகள், டி.வி அப்டேட்கள் என எதையும் மிஸ் செய்யாமல் தெரிந்து கொள்ள...
உங்கள் வாட்ஸ் அப் மூலமே இணைந்திருங்கள் சினிமா விகடனுடன்...

7 months ago
8







English (US) ·