ARTICLE AD BOX
லியோ ஜான் பால் இயக்கத்தில், விஜய் ஆண்டனி, பிரிகிடா, சமுத்திரக் கனி போன்றோர் நடிப்பில் கடந்த ஜூன் 27 ஆம் தேதி வெளியான படம் 'மார்கன்'.
இப்படத்தின் நன்றி தெரிவிக்கும் விழா சென்னையில் இன்று (ஜூலை 1) நடைபெற்றது.
இதில் இயக்குநர் சுசீந்திரன் கலந்துகொண்டு பட விமர்சனங்கள் குறித்து பேசியிருக்கிறார்.
மார்கன்இதுதொடர்பாக பேசியிருக்கும் அவர், “எதைப் பார்க்க வேண்டும், வேண்டாம் என்பதை மக்கள்தான் தீர்மானிக்க வேண்டும். தயவு செய்து ஒரு படத்தை கொல்கின்ற மாதிரி விமர்சனம் செய்துவிடாதீர்கள்.
சமீபத்தில் வெளியான ‘கண்ணப்பா’ திரைப்படத்தை யூடியூபர்கள் யாரும் விமர்சிக்கக்கூடாது என்று நீதிமன்றத்தில் படக்குழுவினர் தடை உத்தரவு வாங்கி இருக்கின்றனர். அந்த அளவிற்கு தற்போது நிலைமை இருக்கிறது.
ஆனால் விமர்சனங்கள் இல்லையென்றாலும் சின்ன படங்கள் மக்கள் மத்தியில் சென்றடையாது. அதனால் தயாரிப்பாளர்கள் பாதிக்கப்படாத அளவிற்கு விமர்சனம் செய்யுங்கள்” என்று கேட்டுக்கொண்டிருக்கிறார்.
சினிமா விகடனின் பிரத்யேக Whatsapp க்ரூப்
https://chat.whatsapp.com/JSk78H7siYK4aL2qO1RglR
சினிமா தொடர்பான எக்ஸ்க்ளூசிவ் அப்டேட், அசத்தல் பேட்டிகள், டி.வி அப்டேட்கள் என எதையும் மிஸ் செய்யாமல் தெரிந்து கொள்ள...
உங்கள் வாட்ஸ் அப் மூலமே இணைந்திருங்கள் சினிமா விகடனுடன்...

5 months ago
7





English (US) ·