Madhan Bob: பன்முக கலைஞர் மதன் பாப் காலமானார்; திரையுலகினர் இரங்கல்

4 months ago 6
ARTICLE AD BOX

நடிகர் மதன் பாப் இயற்கை எய்தினார். உடல்நலக் குறைவு காரணமாக இன்று மாலை நடிகர் மதன் பாப் காலமானார்.

மதன் பாபின் உண்மையான பெயர் கிருஷ்ணமூர்த்தி. இவருடைய சிரித்த முகபாவனைதான் இவருக்கான அடையாளம்.

Madhan BobMadhan Bob

71 வயதான இவர் 100-க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் காமெடியனாகவும் குணச்சித்திர கதாபாத்திரங்களில் நடித்திருக்கிறார்.

இசைக் கலைஞனாக தன்னுடைய பயணத்தைத் தொடங்கியவர் மதன் பாப்.

அப்படியான இசை மேடைகளில்தான் கிருஷ்ண மூர்த்தியை மதன் பாப் என அழைக்கத் தொடங்கியிருக்கிறார்கள்.

நடிப்பைத் தாண்டி தொலைக்காட்சி நிகழ்ச்சிகளிலும் நடுவராக இவர் பங்கேற்றிருக்கிறார்.

சன் டி.வி-யின் பிரபல நிகழ்ச்சியான 'கலக்கப் போவது யாரு' நிகழ்ச்சியின் நடுவராகவும் இவர் இருந்திருக்கிறார்.

Madhan BobMadhan Bob

இவருக்குத் திருமணமாகி இரண்டு மகள்கள் இருக்கிறார்கள்.

உடல்நலக் குறைவால் சிகிச்சை பெற்று வந்த இவர் சிகிச்சை பலனின்றி இன்று மாலை காலமானார்.

இவருடைய உடல் சென்னையிலுள்ள அவருடைய இல்லத்தில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டிருக்கிறது.

திரைத்துறையினர் பலரும் இவருடைய மறைவுக்கு இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

சினிமா விகடனின் பிரத்யேக Whatsapp க்ரூப்

https://chat.whatsapp.com/JSk78H7siYK4aL2qO1RglR

சினிமா தொடர்பான எக்ஸ்க்ளூசிவ் அப்டேட், அசத்தல் பேட்டிகள், டி.வி அப்டேட்கள் என எதையும் மிஸ் செய்யாமல் தெரிந்து கொள்ள...

உங்கள் வாட்ஸ் அப் மூலமே இணைந்திருங்கள் சினிமா விகடனுடன்...

https://chat.whatsapp.com/JSk78H7siYK4aL2qO1RglR

Read Entire Article