ARTICLE AD BOX
சிவகார்த்திகேயன் நடிப்பில், ஏ.ஆர். முருகதாஸ் இயக்கத்தில் உருவாகியிருக்கும் `மதராஸி' படம் செப்டம்பர் 5-ம் தேதி திரையரங்குகளில் வெளியாகவிருக்கிறது.
இப்படத்துக்கு அனிருத் இசையமைத்திருக்கிறார். இந்த நிலையில், இப்படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையில் இன்று நடைபெற்றது.
முருகதாஸ் - சிவகார்த்திகேயன்இந்நிகழ்ச்சியில் சிவகார்த்திகேயன் குறித்து பேசிய முருகதாஸ், "இந்த படத்துக்கு தொடக்கப்புள்ளி எஸ்.கே தான். அவருடைய வளர்ச்சி எங்கயோ இருக்கு.
நாள்தோறும் பல கனவுகளோட வர்ற இளைஞர்களுக்கு எஸ்.கே நம்பிக்கையைக் கொடுத்திருக்கார். அவர் ரொம்ப கடினமான உழைப்பாளி.
மதராஸி இசை வெளியீட்டு விழா: "முருகதாஸ் சார்தான் அஜித் சாருக்கு தல-னு பெயர் வச்சாரு" - சூப்பர் சுப்புகுழந்தைகள் ஆடியன்ஸை பிடிப்பவர்கள் பெரிய ஆள்களாக வருவார்கள். அப்படி எஸ்.கே தொடக்கத்திலேயே குழ்ந்தைகளை பிடிச்சுட்டாரு.
இதைத் தாண்டி துப்பாக்கியை வேற அவர் கையில கொடுத்துட்டாங்க. அந்த துப்பாகியை ரொம்ப இறுக்கி பிடிச்சிருக்கார்.
எஸ்.கே-வோட டைமிங் எனக்கு அவர்கிட்ட ரொம்பவே பிடிச்ச விஷயம்.
அமிதாப், தலைவர், விஜய் சார்கிட்ட ஒரு sense of humour இருக்கும். அது எஸ். கே கிட்டையும் இருக்கு. அது எனக்கு ரொம்ப பிடிச்சது. அவருடைய சிரிப்பும் எனக்கு பிடிக்கும்." என்று கூறினார்.
முருகதாஸ்அதைத்தொடர்ந்து, ''பத்து வருஷத்துக்கு முன்னாடி ஒருவரை இப்படி பார்க்கணும்னு ஒரு ஆசையை சொல்லியிருந்தீங்க. அது இன்னைக்கு நடந்திட்டு இருக்கு. அப்படி எஸ்.கே-வை எந்த இடத்துல பார்க்கணும்?" என்று முருகதாஸிடம் கேள்வி கேட்கப்பட்டது.
அதற்கு முருகதாஸ், "எஸ்.கே ஃபேமிலி, காமெடி படங்கள் பண்ணிட்டாரு. அமிதாப் சார்தான் `Angry Young Man-னு' பெயர் வாங்கியவர். எனக்கு எஸ்.கே-வை அப்படி சொல்லணும்னு ஆசை" என்றார்.
Madharaasi: "முருகதாஸ் சார் படத்துல நடிக்கணும்னு சொன்னப்போ கலாய்ச்சாங்க" - சிவகார்த்திகேயன்
4 months ago
6





English (US) ·