ARTICLE AD BOX
5 வருட இடைவெளிக்குப் பிறகு இயக்குநர் ஏ. ஆர். முருகதாஸ் தமிழில் இயக்கியிருக்கும் 'மதராஸி' திரைப்படம் செப்டம்பர் 5-ம் தேதி வெளியாகவிருக்கிறது.
சிவகார்த்திகேயன், ருக்மினி வசந்த், பிஜூ மேனன், விக்ராந்த் ஆகியோர் நடித்திருக்கும் இத்திரைப்படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார்.
'கத்தி', 'தர்பார்' ஆகிய திரைப்படங்களைத் தொடர்ந்து முருகதாஸின் இப்படத்திற்கும் அனிருத் இசையமைக்கிறார்.

சமீபத்தில் நடைபெற்ற விகடன் மாணவப் பத்திரிகையாளர் பயிற்சித் திட்டத்தின் முகாமிற்கு இயக்குநர் முருகதாஸ் வருகை தந்து மாணவர்களுடன் கலந்துரையாடினார்.
அப்போது 'மதராஸி' திரைப்படம் தொடர்பாக அவர், "'கஜினி' திரைப்படம் போன்ற திரைக்கதையையும், 'துப்பாக்கி' திரைப்படம் போன்ற ஆக்ஷன் காட்சிகளையும் இதற்குக் கொண்டு வர முயற்சித்தேன். நினைத்தபடியே படமும் வந்திருக்கிறது." என அப்டேட் கொடுத்திருந்தார்.
தற்போது திரைப்படத்தின் முதல் சிங்கிள் தொடர்பான அறிவிப்பை வெளியிட்டிருக்கிறார்கள்.
நெல்சன் - சிவகார்த்திகேயன் எப்போதும் அவர்களின் ஸ்டைலில் ஒரு ப்ரோமோவைத் தயார் செய்து வெளியிடுவார்கள்.
அப்படியானதொரு பாணியில் 'மதராஸி' திரைப்படத்திற்கு இயக்குநர் முருகதாஸுடன் களமிறங்கியிருக்கிறார் எஸ்.கே.

இத்திரைப்படத்தின் முதல் பாடலான 'சலம்பல்' பாடல் ஜூலை 31-ம் தேதி வெளியாகிறது. இப்பாடலை 'ஹுக்கும்' பாடல் புகழ் சூப்பர் சுப்பு எழுத, சாய் அபயங்கர் இந்தப் பாடலைப் பாடியிருக்கிறார்.
அடுத்தடுத்து பெரிய திரைப்படங்களில் இசையமைப்பாளராக சாய் அபயங்கர் கமிட்டாகி வரும் நேரத்தில், இப்போது மற்ற படங்களுக்கு பின்னணிப் பாடல்களைப் பாடும் பணிகளையும் தொடங்கிவிட்டார்.
சினிமா விகடனின் பிரத்யேக Whatsapp க்ரூப்
https://chat.whatsapp.com/JSk78H7siYK4aL2qO1RglR
சினிமா தொடர்பான எக்ஸ்க்ளூசிவ் அப்டேட், அசத்தல் பேட்டிகள், டி.வி அப்டேட்கள் என எதையும் மிஸ் செய்யாமல் தெரிந்து கொள்ள...
உங்கள் வாட்ஸ் அப் மூலமே இணைந்திருங்கள் சினிமா விகடனுடன்...

5 months ago
6





English (US) ·