Manidhargal Review: அசத்தல் மேக்கிங்; ஆனால் அதீத எமோஷன்; மனதிற்கு நெருக்கமாகிறார்களா இந்த மனிதர்கள்?

7 months ago 8
ARTICLE AD BOX

திண்டுக்கல்லைச் சேர்ந்த கர்லி (கபில் வேலவன்), சதீஸ் (தக்‌ஷா), மனோ (குணவந்தன் தனபால்), தீபன் (அர்ஜுன் தேவ்), சந்திரன் (சம்பா சிவம்), பிரேம் ஆகிய ஆறு நண்பர்களும், நடு இரவில் குடிபோதையில் சண்டை போட்டுக்கொள்கிறார்கள்.

இதில் எதிர்பாராதவிதமாக, மது பாட்டில் குத்தி ரத்த வெள்ளத்தில் சரிந்து விழுகிறார் பிரேம். இந்தக் கொலைக்கு யார் காரணம் என நண்பர்களுக்குள் வாக்குவாதமும் சண்டையும் வருகின்றன.

மனிதர்கள் விமர்சனம் | Manidhargal Reviewமனிதர்கள் விமர்சனம் | Manidhargal Review

என்ன செய்வதென்று தெரியாமல், பிதற்றத் தொடங்கும் நண்பர்களை ஆசுவாசப்படுத்தி, பிரேமின் உடலைத் தங்களுடைய கார் டிக்கியில் மறைக்கிறார் கர்லி.

நடு இரவில் அங்கிருந்து கிளம்பும் நண்பர்கள், பிரேமின் உடலை என்ன செய்தார்கள், போலீஸிடம் மாட்டினார்களா போன்ற கேள்விகளுக்குப் பதில் சொல்லியிருக்கிறது அறிமுக இயக்குநர் இராம் இந்திரா இயக்கியிருக்கும் 'மனிதர்கள்'.

Woven City: 175 ஏக்கர், ரூ.80,000 கோடி, 2,000 பேர்... நாளைய நகரில் `சோதனை எலி' மனிதர்கள்?!

அத்தனைப் பதற்றத்திலும், பக்குவமான முடிவுகளையும், நண்பர்களிடம் கண்டிப்பையும் காட்டும் கர்லி கதாபாத்திரத்திற்கு, கபில் வேலவனின் தேர்வு கச்சிதம்.

சிறிது மர்மத்தையும் சிறிது வில்லத்தனத்தையும் ஆங்காங்கே, துறுத்தலின்றி கொண்டு வந்திருக்கிறார்.

தன் அழுகை, ஆக்ரோஷத்திற்கு இடையே தெக்கத்தி வட்டார வழக்கு பேச்சில் சில இடங்களில் சிரிப்பை வரவழைக்கின்றார் தக்‌ஷா.

மனிதர்கள் விமர்சனம் | Manidhargal Reviewமனிதர்கள் விமர்சனம் | Manidhargal Review

பதற்ற உணர்விற்கு ஒரே மாதிரியான நடிப்பையே திரும்பத்திரும்ப வழங்கியிருக்கிறார் குணவந்தன் தனபால்.

அவை சில இடங்களில் மட்டுமே க்ளிக் ஆகியிருக்கின்றன.

அதீத போதையில், குற்றவுணர்வு, அழுகை என இரண்டு மீட்டரில் மாறிமாறி நகரும் சந்திரன் கதாபாத்திரத்தில், சில காட்சிகளில் மட்டும் அழுத்தம் கூட்டியிருக்கிறார் சம்பா சிவம்.

அர்ஜுன் தேவ் கொடுத்த வேலையைச் செய்திருக்கிறார்.

ஒட்டுமொத்தமாக, கபில் வேலவனைத் தவிர்த்து ஏனையவர்களிடம் ஓவர் டோஸான அதீத எமோஷனல் நடிப்பு பல இடங்களில் எட்டிப்பார்க்கிறது.

Lilo & Stitch Review: மழலை அன்புடன் சேரும் ஏலியன்! கோடைக் கால எண்டர்டெயினராக குழந்தைகளை ஈர்க்கிறதா?

முழுக்க ஓர் இரவில், பெரும்பாலும் காருக்குள்ளேயே நகரும் படத்திற்கு, ஒளி அமைப்பால் அட்டகாசமான ஒளிப்பதிவைக் கொடுத்திருக்கிறார் அஜய் ஆபிரகாம் ஜார்ஜ்.

முக்கியமாக, கார் ஹெட்லைட்டை மட்டும் பயன்படுத்திய காட்சிகளில் தன் பெயரைப் பதிக்கிறார் அஜய்!

இயக்குநரின் திரைமொழிக்கு இயைந்து, விறுவிறுப்பையும் பதற்றத்தையும் குறைய விடாமல் கடத்தியிருக்கிறார் படத்தொகுப்பாளர் தின்சா.

கச்சிதமான கட்-கள் பல காட்சிகளைக் கூர்மையாக்கியிருக்கின்றன.

ஆற்றாமை, அழுகை, பயம், குற்றவுணர்வு என அடுத்தடுத்து அணிவகுக்கும் உணர்வுகளுக்குக் குரலாக ஒலித்திருக்கிறது அனிலேஷ் எல் மாத்யூவின் பின்னணி இசை.

அதே சமயம் வசனங்களுக்கான ஒலி வடிவமைப்பில் தெளிவும், துல்லியமும் மிஸ்ஸானது பெரிய மைனஸ்!

மனிதர்கள் விமர்சனம் | Manidhargal Reviewமனிதர்கள் விமர்சனம் | Manidhargal Review

ஓர் இரவு, ஐந்து நண்பர்கள், ஒற்றைச் சம்பவம், அதைத் தொடர்ந்து நடக்கும் பதைபதைப்பு நிறைந்த சம்பவங்கள் போன்றவற்றை த்ரில்லர் மோடில் 'ராவாக' சொல்ல முயன்றிருக்கிறார் அறிமுக இயக்குநர் இராம் இந்திரா.

Narivetta Review: உணர்வுபூர்வமான வேடத்தில் டொவினோ தாமஸ்; காவல் அதிகாரியாக சேரன்; இந்த வேட்டை எப்படி?

சம்பவங்களை நேர்க்கோட்டிலும், மொத்தமே ஐந்து கதாபாத்திரங்களைக் கொண்டும் தொடங்குகிறது திரைக்கதை.

விறுவிறுப்பான சம்பவங்கள் அடுத்தடுத்து வருவது, அவை நிதானமாக நகர்ந்தாலும், நேர்த்தியான ப்ரேம்கள், கட்-களால் பின்னப்பட்டிருப்பது சுவாரஸ்யத்தோடு, பரபரப்பையும் கடத்தியிருக்கிறது.

போதையிலும், பதற்றத்திலும் தெறிக்கும் வசனங்களாலேயே ஆறு நண்பர்களின் தனிப்பட்ட வாழ்க்கை, அவர்களின் பிரச்னைகள், அவர்களுக்கிடையிலான பாசம் போன்றவற்றைக் காட்ட முயன்றது தொடக்கத்தில் கவனிக்க வைக்கிறது.

மனிதர்கள் விமர்சனம் | Manidhargal Reviewமனிதர்கள் விமர்சனம் | Manidhargal Review

ஆனால், சிறிது நேரத்திலேயே வசனங்கள் தெளிவில்லாமல் இருப்பதும், அதீத கத்தல்களுக்கு இடையே வசனங்கள் காணாமல் போவதும், எமோஷனலாக பார்வையாளர்களை ஒன்றவிடாமல் செய்கின்றன.

அதனால், எமோஷனுக்காக வைக்கப்பட்ட இரண்டு பாடல்களும் அதன் தேவையைப் பூர்த்தி செய்யாமல், திரை நேரத்தை மட்டுமே நீட்டியிருக்கின்றன.

லெவன் விமர்சனம்: சீரியல் கில்லர் கதையில் சில சறுக்கல்கள்; ஆனாலும் கவனம் ஈர்க்கிறதா இந்த த்ரில்லர்?

இடைவேளை காட்சி மற்றும் இரண்டாம் பாதியில் கோயில் திருவிழாவைத் தொடர்ந்து வரும் பரபரப்பும், அதைக் காட்சிப்படுத்திய விதமும் மீண்டும் திரைக்கதையைச் சூடுபிடிக்க வைத்தாலும், ஒரு பிரச்னை, அதிலிருந்து தப்பிப்பது, மீண்டும் பிரச்னை... என விறுவிறுப்பை மட்டும் நம்பியே திரைக்கதை நகர்வது அயற்சியைத் தருகிறது.

அதனால், கதாபாத்திரங்களின் பதற்றத்தோடு எமோஷனலாக நம்மால் இணைய முடியவில்லை.

இப்பிரச்னைகளைக் களைய இரண்டாம் பாதியில் திரைக்கதையின் வெவ்வேறு லேயர்கள், எமோஷனைக் கடத்தும் கிளைக்கதைகள் இல்லாமல் போனது மைனஸ்.

அதனால், மனதைக் கனக்கச் செய்திருக்க வேண்டிய இறுதிக்காட்சி, கனமில்லாமல் நகர்ந்துவிடுகிறது.

மனிதர்கள் விமர்சனம் | Manidhargal Reviewமனிதர்கள் விமர்சனம் | Manidhargal Review

இவ்வளவு பிரச்னைகளுக்கு மத்தியில் சில அவல நகைச்சுவைகளும், வசனங்களும் மட்டும் சிரிப்பைத் தருகின்றன.

தொழில்நுட்பக் குழுவின் அட்டகாசமான உழைப்பு கவர்ந்தாலும், திரைக்கதையில் போதுமான மெனக்கெடலையும், எமோஷனில் போதுமான ஆழத்தையும் சேர்த்திருந்தால், இந்த 'மனிதர்கள்' இன்னும் நெருக்கமாகியிருப்பார்கள்.

மாமன் விமர்சனம்: உறவுச் சிக்கலைப் பேசும் மெலோடிராமா; ஆனால் வலிந்து திணிக்கப்பட்ட அந்த எமோஷன்கள்?!

சினிமா விகடனின் பிரத்யேக Whatsapp க்ரூப்

https://chat.whatsapp.com/JSk78H7siYK4aL2qO1RglR

சினிமா தொடர்பான எக்ஸ்க்ளூசிவ் அப்டேட், அசத்தல் பேட்டிகள், டி.வி அப்டேட்கள் என எதையும் மிஸ் செய்யாமல் தெரிந்து கொள்ள...

உங்கள் வாட்ஸ் அப் மூலமே இணைந்திருங்கள் சினிமா விகடனுடன்...

https://chat.whatsapp.com/JSk78H7siYK4aL2qO1RglR

Read Entire Article