ARTICLE AD BOX
மனிஷா கொய்ரலா 'பாம்பே', 'இந்தியன்', 'முதல்வன்', 'ஆளவந்தான்', 'பாபா' ஆகிய முக்கியமான படங்களில் நடித்து தமிழ் ரசிகர்களுக்கு பரிச்சயமானவர்.
இவர் தமிழில் கடைசியாக தனுஷின் 'மாப்பிள்ளை' திரைப்படத்தில் நடித்திருந்தார். இவர் கடந்த ஆண்டு நெட்ஃபிளிக்ஸில் வெளியான 'ஹீராமண்டி' வெப் சீரிஸில் நடித்திருந்தார்.
Baba- Manisha Koiralaஅந்த சீரிஸ் வெளியான சமயத்தில் மனிஷா கொய்ரலா அளித்த நேர்காணலில் 'பாபா' திரைப்படம் அவருடைய தென்னிந்திய சினிமா கரியருக்கு முட்டுக்கட்டையாக அமைந்ததாக பேசியிருந்தார்.
அந்த நேர்காணல் காணொளி தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.
மனிஷா கொய்ரலா அந்தப் பேட்டியில், "'பாபா' என்னுடைய கடைசி பெரிய தமிழ் திரைப்படம். அத்திரைப்படம் அப்போது பெரும் தோல்வியைச் சந்தித்தது.
ஆனால், அப்படத்திற்கு மிக அதிகப்படியான எதிர்பார்ப்பு இருந்தது. இருப்பினும், அத்திரைப்படம் தோல்வியைச் சந்தித்தது.
அதனால், தென்னிந்திய சினிமாவில் என்னுடைய கரியர் முழுமையாக முடிந்துவிட்டதாக நான் நினைத்தேன்.
மனிஷா கொய்ராலா'பாபா' திரைப்படத்திற்கு முன்பு நான் பல நல்ல தமிழ் திரைப்படங்களில் நடித்து வந்தேன்.
ஆனால், 'பாபா' படத்தின் ரிலீஸுக்குப் பிறகு எனக்கு தென்னிந்திய படங்களில் நடிப்பதற்கான வாய்ப்புகள் கிடைக்காமல் போயின.
தென்னிந்தியப் படங்களில் நான் மகிழ்ச்சியுடன் நடித்து வந்தேன். அங்கு பல திறமையான நடிகர்களுடனும், இயக்குநர்களுடனும் இணைந்து திரைப்படங்களில் நடித்திருக்கிறேன்," எனப் பேசியிருக்கிறார்.
சினிமா விகடனின் பிரத்யேக Whatsapp க்ரூப்
https://chat.whatsapp.com/JSk78H7siYK4aL2qO1RglR
சினிமா தொடர்பான எக்ஸ்க்ளூசிவ் அப்டேட், அசத்தல் பேட்டிகள், டி.வி அப்டேட்கள் என எதையும் மிஸ் செய்யாமல் தெரிந்து கொள்ள...
உங்கள் வாட்ஸ் அப் மூலமே இணைந்திருங்கள் சினிமா விகடனுடன்...

6 months ago
7





English (US) ·