ARTICLE AD BOX
18 வது ஐ.பி.எல் சீசன் வருகிற 22 ஆம் தேதி முதல் தொடங்கவிருக்கிறது. மும்பை அணி தனது முதல் போட்டியில் சென்னை அணியை சேப்பாக்கத்தில் எதிர்கொள்கிறது. இந்தப் போட்டியில் மும்பை அணியின் கேப்டனாக ஹர்திக் பாண்ட்யா செயல்படாத முடியாத சூழல் ஏற்பட்டிருக்கிறது. இந்நிலையில், சென்னைக்கு எதிரான போட்டியில் சூர்யகுமார் யாதவ் கேப்டனாக செயல்படுவார் என ஹர்திக்கே அறிவித்திருக்கிறார்.
MIகடந்த சீசனில் ரோஹித் சர்மாவை கேப்டன் பதவியிலிருந்து நீக்கிவிட்டு ஹர்திக் பாண்ட்யாவை மும்பை அணியின் நிர்வாகம் புதிய கேப்டனாக நியமித்திருந்தது. ஐ.பி.எல் இல் 'Slow Over Rate' என்கிற விதிமுறை கடைபிடிக்கப்படுகிறது. அதன்படி, பந்துவீசும் அணி அவர்களுக்கு கொடுக்கப்பட்ட நேரத்துக்குள் பந்துவீசி முடிக்க வேண்டும். கடந்த சீசனில் மும்பை அணி மூன்று போட்டிகளில் குறிப்பிட்ட நேரத்தை விட அதிகமாக பந்துவீச எடுத்துக் கொண்டது. குறிப்பாக, லக்னோவுடன் மோதிய கடைசி லீக் போட்டியில் மூன்றாவது முறையாக தாமதமாக பந்துவீசியிருந்தது. இதனால் மும்பை அணியின் கேப்டனான ஹர்திக் பாண்ட்யாவுக்கு 30 லட்ச ரூபாய் அபராதமும் ஒரு போட்டியில் ஆடுவதற்கான தடையும் விதிக்கப்பட்டது. கடந்த சீசனில் மும்பை அணி ப்ளே ஆப்ஸூக்கு செல்லவில்லை. அதனால் அந்த ஒரு போட்டி தடையை ஹர்திக் இந்த சீசனில் ஏற்றாக வேண்டும். அதனால்தான் சென்னைக்கு எதிரான முதல் போட்டியில் ஹர்திக் பாண்ட்யா ஆட முடியாத சூழல் ஏற்பட்டிருக்கிறது.
சீசனுக்கு முன்பான பத்திரிகையாளர் சந்திப்பில் இன்று ஹர்திக் பாண்ட்யா பேசியிருந்தார். அப்போது, 'Slow Over Rate விஷயம் என் கைக்குள் இல்லாத விவகாரம். போன சீசனின் கடைசிப் போட்டியில் கடைசி ஓவரை ஒன்றரையிலிருந்து இரண்டு நிமிடம் வரைக்கும் நாங்கள் தாமதமாக வீசியிருந்தோம். இதனால் ஏற்படப்போகும் பாதிப்பைப் பற்றி நான் அப்போது யோசிக்கவில்லை. அது துரதிஷ்டவசமான விஷயம். ஆனால், அதுதான் விதிமுறை. அதன்படியே நானும் செல்ல விரும்புகிறேன்.
Hardikஅடுத்தடுத்த சீசன்களில் இந்த விதிமுறைகள் தேவையா என்பதை உயர் பொறுப்பில் இருப்பவர்கள்தான் முடிவு செய்ய வேண்டும். சூர்யகுமார் யாதவ் டி20 போட்டிகளில் இந்திய அணியை வழிநடத்தி வருகிறார். கேப்டன்சி செய்ய நான் இல்லையேல் எனக்கு அடுத்து சிறந்த தேர்வாக சூர்யாதான் இருப்பார்.' என ஹர்திக் பேசியிருக்கிறார்.
Vikatan WhatsApp Channel
இணைந்திருங்கள் விகடனோடு வாட்ஸ்அப்பிலும்... CLICK BELOW LINK
https://bit.ly/VikatanWAChannel


9 months ago
9







English (US) ·