MI vs KKR: `எங்கள் தோல்விக்கு இதுதான் காரணம்' - விளக்கும் கொல்கத்தா கேப்டன் ரஹானே

8 months ago 8
ARTICLE AD BOX

கொல்கத்தா அணிக்கும் மும்பை அணிக்கும் நேற்று (மார்ச் 31) நடைபெற்ற போட்டியில், மும்பை அணி 8 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிபெற்றது. முதலில் டாஸ் வென்று பவுலிங்கை தேர்வு செய்த மும்பை அணி, 16.2 ஓவர்களில் கொல்கத்தாவை 116 ரன்களுக்குச் சுருட்டியது. மும்பை அணியில் அறிமுக வீரர் அஸ்வனி குமார் 4 விக்கெட்டுகள் வீழ்த்தினார்.

அஸ்வனி குமார் - MI vs KKRஅஸ்வனி குமார் - MI vs KKR

பின்னர், 117 ரன்கள் என்ற எளிய இலக்கை நோக்கி களமிறங்கிய மும்பை அணி, வெறும் 2 விக்கெட்டுகளை மட்டும் இழந்து 12.5 ஓவர்களிலேயே இலக்கை எட்டி வெற்றி பெற்றது. அறிமுக வீரர் அஸ்வனி குமார் ஆட்டநாயகன் விருது வென்றார்.

தோல்விக்குப் பின்னர் பேசிய கொல்கத்தா கேப்டன் ரஹானே, ``பேட்டிங் யூனிட் ஒட்டுமொத்தமாக தோல்வியடைந்துவிட்டது. பேட்டிங்குக்கு உகந்த இந்த மைதானத்தில் 180 - 190 ரன்கள் அடித்திருந்தால் நன்றாக இருந்திருக்கும். இந்தப் போட்டியிலிருந்து மிக வேகமாக நாங்கள் பாடம் கற்றுக்கொள்ள வேண்டும்.

ரஹானேரஹானே

அதேபோல், பந்துவீச்சில் பவுலர்கள் தங்களால் முடிந்ததைச் செய்தார்கள். ஆனால், போதுமான அளவுக்கு ரன்கள் இல்லை. நாங்கள் தொடர்ந்து விக்கெட்டுகளை இழந்தோம். பவர்பிளேயில் நான்கு விக்கெட் போனது. இது, ரன்கள் சேர்ப்பதில் கடினமாக அமைந்தது. ஒரு பேட்ஸ்மேனாவது கடைசிவரை இருக்க வேண்டும்" என்று கூறினார்.

MI vs KKR: கொல்கத்தாவை வாரிச் சுருட்டிய 23 வயது அறிமுக பவுலர்; வெற்றிக் கணக்கைத் தொடங்கிய மும்பை

Vikatan WhatsApp Channel

இணைந்திருங்கள் விகடனோடு வாட்ஸ்அப்பிலும்... CLICK BELOW LINK

https://bit.ly/VikatanWAChannel

Read Entire Article