ARTICLE AD BOX
'ஸ்டெய்னின் வைரல் ட்வீட்!'
'ஏப்ரல் 17 ஆம் தேதி வான்கடேவில் நடக்கும் மும்பை இந்தியன்ஸ் மற்றும் சன்ரைசர்ஸ் அணிகளுக்கிடையேயான போட்டியில் 300 ரன்கள் எட்டப்படும்.' என முன்னாள் வீரர் டேல் ஸ்டெய்ன் செய்திருந்த ட்வீட்தான் இன்றைக்கு வைரல். போட்டி செல்லும் நிலைமையை பார்த்த ஸ்டெய்ன், 'ஆம், நாம் இன்று 300 ரன்களை பார்க்கப் போகிறோம். ஆனால், இரண்டு அணிகளும் சேர்ந்து 300 ரன்களை அடிப்பார்கள்.' என ஜாலியாக ட்வீட் செய்திருந்தார்.
Hardik Pandya & Pat Cumminsஸ்டெய்னை தப்பு சொல்ல முடியாது. எல்லாருமே இந்தப் போட்டி கொஞ்சம் அதிக ரன்களை எட்டக்கூடிய போட்டியாக இருக்கும் என்றே கணித்திருந்தனர். ஆனால், ட்விஸ்ட் நடந்திருக்கிறது. மும்பை vs ஹைதராபாத் போட்டி நடந்த வான்கடே மைதானத்தின் பிட்ச் சர்ப்ரைஸ் கொடுத்தது.
'சர்ப்ரைஸ் பிட்ச்!'
கொஞ்சம் மந்தமாக 'Two Pace' பிட்ச்சாக பேட்டர்களை குழப்பும் வகையில் இருந்தது. சன்ரைசர்ஸ் அணிக்கு முதலில் பேட் செய்வதுதான் எப்போதுமே பலம். கடந்தப் போட்டியில் 240+ ஸ்கோரை செய்திருந்தாலும் ரெக்கார்ட்படி அவர்கள் முதலில் பேட்டிங் செய்ய ஏதுவான அணிதான். அப்படியிருந்தும் ஹர்திக் பாண்ட்யா டாஸை வென்று சன்ரைசர்ஸூக்கே பேட்டிங்கை கொடுத்தார். பிட்ச்சை மனதில் வைத்து மும்பையால் கம்மின்ஸ் & கோவுக்கு விரிக்கப்பட்ட வலை இது.
Abhishek Sharmaபிட்ச் மெதுவாக இருக்கிறது, பந்து நின்று வருகிறது என்பதையெல்லாம் சன்ரைசர்ஸ் அணி கொஞ்சம் தாமதமாகத்தான் உணர்ந்தது. இந்த மாதிரியான பிட்ச்களில் ஹார்ட் ஹிட்டிங்கான ஷாட்களை மட்டுமே அதிகம் நம்பியிருக்க முடியாது. பந்தை நன்றாக பார்த்து டைமிங் ஷாட்களை ஆட வேண்டும். இதை சன்ரைசர்ஸ் உணர்வதற்குள்ளேயே முக்கால்வாசி போட்டி முடிந்துவிட்டது. ஆரம்பத்திலேயே ஹெட்டும் அபிஷேக்கும் கொஞ்சம் திணறவே செய்தார்கள்.
அபிஷேக்காவது தீபக் சஹாரின் ஒரே ஓவரில் 3 பவுண்டரிக்களை அடித்து கொஞ்சம் சமாளித்துவிட்டார். ஆனால், ஹெட் அய்யோ பாவம். அவருக்கு கனெக்ட்டே ஆகவில்லை. தட்டி தட்டி ஆடிக்கொண்டிருந்தார்.
Rohit Sharma : 'நீங்க 100 அடிச்சு டீம் தோற்றா எந்த பயனும் இல்ல!' - கேப்டன்சி குறித்து ரோஹித் சர்மா'மிடில் ஓவர்தான் வித்தியாசம்!'
போட்டியில் இரண்டு அணிகளுக்கும் வித்தியாசமாக அமைந்தது மிடில் ஓவர்கள்தான். 7-15 இந்த மிடில் ஓவர்களில் சன்ரைசர்ஸ் அணி 59 ரன்களை மட்டுமே எடுத்திருந்தது. மும்பை அணியின் சார்பில் இந்தக் கட்டத்தில் வேகப்பந்து வீச்சாளர்கள் ஹர்திக் பாண்ட்யா, ட்ரெண்ட் போல்ட் வீசியிருந்தனர்.
Hardik Pandyaஇருவரும் ஸ்லோயர் ஒன்களை மட்டுமே வீசினர். இதனால் சன்ரைசர்ஸ் பேட்டர்களால் சரியாக டைம் செய்து வலுவான ஆட்டத்தை ஆட முடியவில்லை. மும்பையின் வேகப்பந்து வீச்சாளர்கள் வீசிய ஸ்லோயர் டெலிவரிக்களின் சன்ரைசர்ஸ் பேட்டர்களின் ஸ்ட்ரைக் ரேட் 100 க்கும் கீழாகத்தான் இருந்தது. ஹெட் இந்த மிடில் ஓவர்களில் க்ரீஸில் நின்றார். ஆனால், அடிக்க முடியவில்லை, திணறிக்கொண்டிருந்தார்.
இந்த சமயத்தில் இடதுகை ஸ்பின்னரான சாண்டனருக்கு ஓவரை கொடுத்து ஹெட்டுக்கு ஒரு வாய்ப்பை ஏற்படுத்தி கொடுத்துவிடக்கூடாது என்பதில் ஹர்திக் தெளிவாக இருந்தார். இதனால் ஆப் ஸ்பின்னரான வில் ஜாக்ஸூக்குதான் ஹர்திக் ஓவரை கொடுத்தார். வில் ஜாக்ஸூம் தன்னுடைய பங்குக்கு இஷன் கிஷன் மற்றும் ஹெட்டின் விக்கெட்டையும் எடுத்துக் கொடுத்துவிட்டார்.
Travis Headகடைசியில் க்ளாஸன் கொஞ்சம் அதிரடியாக ஆடியதால்தான் 160 ரன்களையாவது சன்ரைசர்ஸ் அணி எட்டியது. சேஸிங்கில் இந்த மிடில் ஓவர்களில்தான் மும்பை அணி மிகச்சிறப்பாக செயல்பட்டது. 7-15 மிடில் ஓவர்களில் மும்பை அணி 82 ரன்களை சேர்த்திருந்தது. சூர்யகுமார் யாதவ்வும் வில் ஜாக்ஸூம் நன்றாக ரிஸ்க் எடுத்து ஆடினர்.
IPL 2025 : 'ஐ.பி.எல் தளத்தில் தமிழுக்கு அனுமதியில்லை'- பிராந்திய மொழிகளைப் புறக்கணிக்கிறதா ஐ.பி.எல்?'மும்பையின் ஸ்மார்ட் ஆட்டம்!'
வேகப்பந்து வீச்சாளர்கள் ஸ்லோயர் ஒன்களாக வீசி கடுப்பேற்றுவதால் அவர்களுக்கு எதிராக வராத ரன்களை ஸ்பின்னர்களுக்கு எதிராக அடித்தனர். மும்பை அணி பௌலிங்கின் போது வில் ஜாக்ஸூம் சாண்ட்னரும் இணைந்து 4 ஓவர்களில் 22 ரன்களை மட்டுமே கொடுத்திருந்தனர். அதே சன்ரைசர்ஸ் சார்பில் ஸ்பின்னர்களான ஷீசன், ராகுல் சஹார் இருவரும் இணைந்து 4 ஓவர்களை வீசி 44 ரன்களை கொடுத்திருந்தனர்.
7-15 மிடில் ஓவரில்தான் இருவரும் வீசினர். வில் ஜாக்ஸூம் சூர்யாவும் ரிஸ்க் எடுத்து க்ரீஸை நன்றாக பயன்படுத்தி இறங்கி வந்து பெரிய ஷாட்களை ஆடினர். மிடில் ஓவர்களில் சன்ரைசர்ஸை விட மும்பை அணி 23 ரன்களை அதிகமாக எடுத்திருந்தது. சன்ரைசர்ஸின் ஸ்பின்னர்கள் சோபிக்காதது பிரச்சனையாக இருந்தது.
Surya Kumar & Will Jacksமிடில் ஓவர்களில் மட்டும் சன்ரைசர்ஸ் அணி இன்னும் கட்டுக்கோப்பாக வீசியிருந்தால் போட்டி கடைசி ஓவர் வரை சென்றிருக்கும். அதை நடக்கவிடாமல் செய்தது சூர்யா - வில் ஜாக்ஸ் இணை அடித்த 52 ரன்கள்தான். இந்த இடத்தில் சன்ரைசர்ஸ் கொஞ்சம் ஜாக்கிரதையாக இருந்திருந்தால் போட்டியை ஒரு கை பார்த்திருக்கலாம்.
மும்பை இந்தியன்ஸ்சன்ரைசர்ஸ் பேட்டர்கள் ப்ளாட்டான பிட்ச்சில் அடித்து வெளுத்துவிடுவார்கள் என்பதை அறிந்தே இந்த மாதிரியான ஒரு பிட்ச்சை மும்பை அணி தயார் செய்திருந்தது. மற்ற அணிகள் 'Home Advantage' இல்லையென புலம்பிக் கொண்டிருக்கும் நிலையில் மும்பை தங்களின் சொந்த மைதானத்தை எவ்வளவு தந்திரமாக பயன்படுத்த முடியுமோ அவ்வளவு தந்திரமாக பயன்படுத்திக் கொண்டிருக்கிறது.

8 months ago
8







English (US) ·