MI vs SRH : 'ஸ்டம்புக்கு முன்னே கையை விட்ட கீப்பர் க்ளாசென்' - வினோத `No Ball' கொடுத்த நடுவர்

8 months ago 8
ARTICLE AD BOX

'மும்பை இந்தியன்ஸ் vs சன்ரைசர்ஸ்!'

மும்பை இந்தியன்ஸ் மற்றும் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிகளுக்கிடையேயான போட்டி வான்கடே மைதானத்தில் நடந்து வருகிறது. இந்தப் போட்டியில் நடுவர் கொஞ்சம் வித்தியாசமான பிழைக்காக நோ - பாலை அறிவித்திருந்தார்.

Sunrisers Hyderabad Sunrisers Hyderabad

சன்ரைசர்ஸ் அணிதான் இந்தப் போட்டியில் முதலில் பேட்டிங் செய்திருந்தது. மந்தமான இந்த பிட்ச்சில் சன்ரைசர்ஸ் அணி 162 ரன்களை மட்டுமே எடுத்திருந்தது. மும்பை அணி சேஸிங்கைத் தொடங்கியது. அந்த அணியின் சார்பில் ஓப்பனர் ரிக்கல்டன் நன்றாக ஆடியிருந்தார்.

'வித்தியாசமான நோ - பால்'

6.5 வது ஓவரில் ஸ்பின்னரான ஷீசன், ரிக்கல்டனின் விக்கெட்டை எடுத்திருந்தார். கம்மின்ஸ்தான் அந்த கேட்ச்சை பிடித்தார். ஆனால், நடுவர் அதற்கு நோ - பாலை கொடுத்து ப்ரீ ஹிட்டையும் வழங்கினார். இத்தனைக்கும் ஷீசன் லைனை விட்டு தாண்டியெல்லாம் பந்துவீசவில்லை. விக்கெட் கீப்பர் க்ளாசென் இருக்கிறார் அல்லவா, அவர் ஸ்டம்புகளுக்கு முன்னால் கையை நீட்டி கீப்பிங் செய்து கொண்டிருந்தார்.

KlassenKlassen

கிரிக்கெட்டின் விதிமுறைகளின்படி, இப்படி ஸ்டம்புகளுக்கு முன்னால் கையை நீட்டி கீப்பிங் செய்யக்கூடாது. ஆனால், அதற்காக நோ - பால் கொடுப்பது அரிதினும் அரிதே. அது இந்தப் போட்டியில் நடந்தது.

IPL 2025 : 'ஐ.பி.எல் தளத்தில் தமிழுக்கு அனுமதியில்லை'- பிராந்திய மொழிகளைப் புறக்கணிக்கிறதா ஐ.பி.எல்?

இதில் பௌலரின் தவறு என்ன இருக்கிறது? விக்கெட் கீப்பர் செய்த தவறுக்காக பௌலரை எதற்கு தண்டிக்கிறீர்கள்? என்று சமூக வலைதளங்களில் ரசிகர்கள் கருத்துகளைப் பகிர்ந்து வருகின்றனர்.

Read Entire Article