Mohammed Shami: "எனக்கு ஒரேயொரு நிறைவேறாத கனவு இருக்கு" - மனம் திறந்த முகமது ஷமி

4 months ago 6
ARTICLE AD BOX

இந்தியாவில் 2023-ல் நடைபெற்ற ஒருநாள் உலகக் கோப்பையில் வெறும் 7 போட்டிகளில் 24 விக்கெட்டுகள் வீழ்த்தி, அதிக விக்கெட் வீழ்த்தியவர்கள் பட்டியலில் முதலிடம் பிடித்த முகமது ஷமி, அந்தத் தொடருக்குப் பிறகு காயம் காரணமாக ஒன்றரை ஆண்டு கழித்துத்தான் சர்வதேச போட்டியில் ஆடினார்.

கடைசியாக சாம்ப்பின்ஸ் டிராபியில் ஆடிய ஷமி, இங்கிலாந்துக்கெதிரான டெஸ்ட் தொடரிலும் தேர்வாகவில்லை, தொடங்கவிருக்கும் ஆசியக் கோப்பை தொடருக்கான இந்திய அணியிலும் இப்போது தேர்வாகவில்லை.

முகமது ஷமிமுகமது ஷமி

இந்த நிலையில், தனக்கு நிறைவேறாத கனவு ஒன்று இருப்பதாக ஷமி கூறியிருக்கிறார்.

தனியார் ஊடகம் ஒன்றிடம் பேசிய ஷமி, "எனக்கு ஒரேயொரு கனவு மிச்சமிருக்கிறது.

அது ஒருநாள் உலகக் கோப்பையை வெல்வது. அணியின் ஒரு அங்கமாக இருந்து உலகக் கோப்பையை வென்று நாட்டுக்குக் கொண்டுவர விரும்புகிறேன்.

2023-ல் நாங்கள் அதற்கு மிக நெருக்கமாக இருந்தோம். தொடர்ச்சியாக வெற்றிபெறுவதால் ஒருவித பயமும் இருந்தது.

அந்தப் பயம் நாக்அவுட் சுற்றிலும் கொஞ்சம் இருந்தது. ஆனால் ரசிகர்களின் உற்சாகமும் நம்பிக்கையும் எங்களைத் தூண்டின.

இது நிறைவேறியிருக்கக்கூடிய ஒரு கனவுதான். ஒருவேளை அது என் அதிர்ஷ்டத்தில் இல்லாமல் போயிருக்கலாம்" என்று கூறினார்.

முகமது ஷமிமுகமது ஷமி

மேலும், ஓய்வு குறித்து எழும் பேச்சு குறித்து பேசிய ஷமி, "யாருக்காச்சும் இதுல பிரச்னை இருக்கா? இப்போது நான் ஓய்வுபெற்றால் யாருடைய வாழ்கையாச்சு நல்லாகுதா சொல்லுங்க.

யாரோட வாழ்க்கைல நான் தடைக்கல்லா இருக்கேன். நான் ஓய்வுபெறணும்னு நீங்க ஏன் நினைக்றீங்க... எனக்கு சளிப்பு வர அன்னைக்கு நான் கிளம்பிடுவேன்" என்று கூறினார்.

"விக்கெட் எடுத்த பிறகும் தோனி என்னைத் திட்டிக் கொண்டே இருந்தார்" - அனுபவம் பகிரும் மோஹித் சர்மா

சினிமா விகடனின் பிரத்யேக Whatsapp க்ரூப்

https://chat.whatsapp.com/JSk78H7siYK4aL2qO1RglR

சினிமா தொடர்பான எக்ஸ்க்ளூசிவ் அப்டேட், அசத்தல் பேட்டிகள், டி.வி அப்டேட்கள் என எதையும் மிஸ் செய்யாமல் தெரிந்து கொள்ள...

உங்கள் வாட்ஸ் அப் மூலமே இணைந்திருங்கள் சினிமா விகடனுடன்...

https://chat.whatsapp.com/JSk78H7siYK4aL2qO1RglR

Read Entire Article