ARTICLE AD BOX
71-வது தேசிய விருதின் வெற்றியாளர்கள் சமீபத்தில் அறிவிக்கப்பட்டிருந்தனர். அந்த வெற்றியாளர்கள் பட்டியல் வெளியானது முதல், வெற்றியாளர்களுக்கு சமூக வலைத்தளங்களில் ரசிகர்கள் பாராட்டுகளைத் தெரிவித்து வருகின்றனர்.
71st National Film Awards Full Listபல்வேறு பிரிவுகளில் தேசிய விருதை வென்றிருக்கும் திரைப்படங்களை எந்தெந்த ஓடிடி தளங்களில் பார்க்கலாம் என இங்கே பார்ப்போமா
பார்க்கிங்:
ஹரிஷ் கல்யாண், எம்.எஸ். பாஸ்கர் நடிப்பில் வெளிவந்த 'பார்க்கிங்' திரைப்படம், சிறந்த திரைக்கதை, சிறந்த தமிழ் திரைப்படம், சிறந்த துணை நடிகர் என மூன்று பிரிவுகளில் விருதைத் தன் வசப்படுத்தியுள்ளது. இத்திரைப்படத்தை 'ஜியோ ஹாட்ஸ்டார்' ஓ.டி.டி தளத்தில் பார்க்கலாம்.
வாத்தி:
தனுஷின் 'வாத்தி' திரைப்படத்திற்கு சிறந்த பாடல்களுக்கான தேசிய விருது இசையமைப்பாளர் ஜி.வி. பிரகாஷுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது. இப்படத்தை 'நெட்ஃபிளிக்ஸ்' தளத்தில் காணலாம்.
Parking Movieபூகாலம் (Pookaalam):
நடிகர் விஜயராகவன், பசில் ஜோசஃப் நடிப்பில் உருவான இந்த மலையாளத் திரைப்படத்திற்கு சிறந்த துணை நடிகருக்கான விருது விஜயராகவனுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது. இந்தப் படத்தை 'ஜியோ ஹாட்ஸ்டார்' தளத்தில் காணலாம்.
Mrs சாட்டர்ஜி vs நார்வே:
இந்தத் திரைப்படத்திற்காக சிறந்த நடிகைக்கான தேசிய விருது நடிகை ராணி முகர்ஜிக்கு அறிவிக்கப்பட்டுள்ளது. இந்தப் படத்தை 'நெட்ஃபிளிக்ஸ்' தளத்தில் பார்க்கலாம்.
71st National Film Awards: 3 தேசிய விருதுகளை வென்ற 'பார்க்கிங்'; சிறந்த பாடல் இசையமைப்பாளர் ஜி.வி!உள்ளொழுக்கு (Ullozhukku):
நடிகைகள் ஊர்வசி, பார்வதி நடிப்பில் இந்த 'உள்ளொழுக்கு' திரைப்படம் வெளிவந்திருந்தது. இப்படத்திற்காக சிறந்த துணை நடிகைக்கான தேசிய விருது நடிகை ஊர்வசிக்கு அறிவிக்கப்பட்டுள்ளது. இப்படத்தை 'அமேசான் ப்ரைம் வீடியோ' தளத்தில் பார்க்கலாம்.
நாள் 2 (Naal 2):
இந்த மராத்திய திரைப்படத்தில் நடித்திருந்த மூன்று குழந்தை நட்சத்திரங்களுக்கு சிறந்த குழந்தை நட்சத்திரத்திற்கான தேசிய விருது அறிவிக்கப்பட்டுள்ளது. இப்படத்தை 'அமேசான் ப்ரைம் வீடியோ' தளத்தில் பார்க்கலாம்.
Ullozhukku Movieஹனு - மேன் (Hanu - Man):
டோலிவுட் இயக்குநர் பிரசாந்த் வர்மா இயக்கத்தில் வெளியான இத்திரைப்படத்திற்கு சிறந்த அனிமேஷன் & விஷுவல் எஃபெக்ட்ஸ், சிறந்த சண்டைப் பயிற்சி என இரண்டு பிரிவுகளில் தேசிய விருதை வென்றுள்ளது. இத்திரைப்படத்தை 'ஜியோ ஹாட்ஸ்டார்' தளத்தில் பார்க்கலாம்.
காந்தி தாத்தா சேட்டு (Gandhi Tatha Chettu):
தெலுங்கு திரைப்படமான இதற்கு சிறந்த குழந்தை நட்சத்திரத்திற்கான தேசிய விருது அறிவிக்கப்பட்டுள்ளது. இப்படத்தை 'அமேசான் ப்ரைம் வீடியோ' தளத்தில் காணலாம்.
பேபி (Baby):
நடிகர்கள் ஆனந்த் தேவரகொண்டா, விராஜ் அஷ்வின், மற்றும் வைஷ்ணவி சைதன்யா நடிப்பில் வெளிவந்த இந்த தெலுங்கு திரைப்படத்திற்கு சிறந்த திரைக்கதைக்கான தேசிய விருது அறிவிக்கப்பட்டுள்ளது. இப்படத்தில் வரும் 'பிரேமிஸ்துனா' என்ற பாடலைப் பாடிய ரோகித்துக்கு சிறந்த பின்னணி பாடகருக்கான தேசிய விருது அறிவிக்கப்பட்டுள்ளது. இப்படத்தை 'ஆஹா' ஓ.டி.டி தளத்தில் பார்க்கலாம்.
ஜவான் (Jawan):
நடிகர்கள் ஷாருக்கான், நயன்தாரா, தீபிகா படுகோனே ஆகியோரின் நடிப்பில் வெளிவந்த திரைப்படம் 'ஜவான்'. இத்திரைப்படத்திற்காக நடிகர் ஷாருக்கானுக்கு சிறந்த நடிகருக்கான தேசிய விருது அறிவிக்கப்பட்டுள்ளது. 'நெட்ஃபிளிக்ஸ்' தளத்தில் இத்திரைப்படத்தை காணலாம்.
Jawan Movieதி கேரளா ஸ்டோரி (The Kerala Story):
அடா ஷர்மா, யோகிதா பிஹானி, சோனியா பலானி, சித்தி இத்னானி ஆகியோரின் நடிப்பில் வெளிவந்த இத்திரைப்படத்திற்காக இயக்குநர் சுதிப்தோ சென்னிற்கு சிறந்த இயக்குநருக்கான பிரிவிலும், ஒளிப்பதிவாளர் பிரசந்தனு மொகபத்ராவிற்கு சிறந்த ஒளிப்பதிவிற்கான தேசிய விருது அறிவிக்கப்பட்டுள்ளது. 'ஜீ5' தளத்தில் இத்திரைப்படத்தை காணலாம்.
அனிமல் (Animal):
ரன்பிர் கபூர், ராஷ்மிகா மந்தனா, அனில் கபூர், பாபி தியோல் ஆகியோரின் நடிப்பில் வெளிவந்த திரைப்படத்திற்கு சிறந்த ஒலி வடிவமைப்பு, சிறந்த பின்னணி இசை என இரண்டு தேசிய விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. இந்தத் திரைப்படத்தை 'நெட்ஃபிளிக்ஸ்' தளத்தில் பார்க்கலாம்.
12th ஃபெயில் (12th Fail):
விக்ராந்த் மாசி, மேதா ஷங்கர் ஆகியோரின் நடிப்பில் வெளிவந்த இத்திரைப்படத்திற்கு சிறந்த திரைப்படத்திற்கான தேசிய விருது கிடைத்துள்ளது. அதனைத் தொடர்ந்து, சிறந்த நடிகருக்கான பிரிவில் இப்படத்தின் கதாநாயகன் விக்ராந்த் மாசிக்கு விருது அறிவிக்கப்பட்டுள்ளது. 'ஜியோ ஹாட்ஸ்டார்' தளத்தில் இத்திரைப்படத்தை பார்க்கலாம்.
சாம் பகதூர் (Sam Bahadur):
விக்கி கௌஷல், சான்யா மல்ஹோத்ரா நடிப்பில் வெளிவந்த இந்தத் திரைப்படத்திற்கு தேசிய, சமூக மற்றும் சுற்றுச்சூழல் மதிப்புகளை ஊக்குவிக்கும் சிறந்த திரைப்படத்திற்கான விருது அறிவிக்கப்பட்டுள்ளது. அதுபோல, சிறந்த ஆடை வடிவமைப்பு, சிறந்த ஒப்பனை என மொத்தமாக மூன்று பிரிவுகளில் இப்படம் தேசிய விருதை வென்றுள்ளது. 'ஜீ5' தளத்தில் இத்திரைப்படத்தை பார்க்கலாம்.
12th Fail படத்தில்...ராக்கி அவுர் ராணி கி பிரேம் கஹானி (Rocky Aur Rani Kii Prem Kahaani):
ரன்வீர் சிங், ஆலியா பட் நடிப்பில் வெளிவந்த இந்தத் திரைப்படம் சிறந்த பொழுதுபோக்கு திரைப்படம், சிறந்த நடன இயக்கம் ஆகிய இரண்டு பிரிவுகளில் தேசிய விருதை வென்றுள்ளது. இத்திரைப்படத்தை 'அமேசான் ப்ரைம் வீடியோ' தளத்தில் பார்க்கலாம்.
ஆத்மா பாம்ப்ளேட் (Aatma Pamphlet):
இந்த மராத்திய திரைப்படத்தை இயக்கிய ஆஷிஷ் அவினாஷுக்கு சிறந்த அறிமுக இயக்குநருக்கான தேசிய விருது அறிவிக்கப்பட்டுள்ளது. இப்படத்தை 'ஜீ5' தளத்தில் பார்க்கலாம்.
பாலகம் (Balagam):
பிரியதர்ஷி புலிகொண்டா, காவ்யா கல்யாண்ராம் நடிப்பில் வெளிவந்த இந்த தெலுங்கு திரைப்படத்திற்கு சிறந்த பாடல் வரிகளுக்கான தேசிய விருது அறிவிக்கப்பட்டுள்ளது. இப்படத்தை 'அமேசான் ப்ரைம் வீடியோ' மற்றும் 'சன் நெக்ஸ்ட்' தளங்களில் பார்க்கலாம்.
2018:
டொவினோ தாமஸ், ஆசிஃப் அலி, வினித் ஸ்ரீனிவாசன் ஆகியோரின் நடிப்பில் வெளிவந்த இந்த மலையாளத் திரைப்படம் சிறந்த தயாரிப்பு வடிவமைப்பிற்கான தேசிய விருதை வென்றுள்ளது. இத்திரைப்படத்தை 'சோனி லைவ்' தளத்தில் பார்க்கலாம்.
2018சிர்ஃப் ஏக் பன்டா காஃபி ஹய் (Sirf Ek Bandaa Kaafi Hai):
மனோஜ் பாஜ்பாய் நடிப்பில் வெளியான இந்த இந்தித் திரைப்படத்திற்கு, சிறந்த வசனத்திற்கான தேசிய விருது கிடைத்துள்ளது. இத்திரைப்படத்தை 'ஜீ5' தளத்தில் பார்க்கலாம்.
பகவந்த் கேசரி (Bhagavanth Kesari):
பாலகிருஷ்ணா, ஸ்ரீலீலா, காஜல் அகர்வால் ஆகியோரின் நடிப்பில் வெளிவந்த இந்தத் திரைப்படத்திற்கு சிறந்த தெலுங்கு மொழி திரைப்படத்திற்கான தேசிய விருது அறிவிக்கப்பட்டுள்ளது. இத்திரைப்படத்தை 'ஜியோ ஹாட்ஸ்டார்' தளத்தில் காணலாம்.
கொடே கொடே சா (Godday Godday Chaa):
சோனம் பாஜ்வா, தானியா நடிப்பில் வெளிவந்த இந்த பஞ்சாபி மொழி திரைப்படத்திற்கு சிறந்த பஞ்சாபி மொழி திரைப்படத்திற்கான தேசிய விருது அறிவிக்கப்பட்டுள்ளது. இத்திரைப்படத்தை 'அமேசான் ப்ரைம் வீடியோ' தளத்தில் பார்க்கலாம்.
புஷ்கரா (Pushkara):
சப்யாசச்சி மிஷ்ரா, பின்டு நந்தா நடிப்பில் வெளியான இத்திரைப்படம், சிறந்த ஒடியா மொழி திரைப்படத்திற்கான பிரிவில் தேசிய விருதை வென்றுள்ளது. இத்திரைப்படத்தை 'டரங் ப்ளஸ்' ஓடிடி தளத்தில் காணலாம்.
Pushkara - Odiaஷ்யாம்சி யாய் (ShyamChi Aai):
ஓம் புத்கர், சந்தீப் பாதக் ஆகியோர் நடிப்பில் வெளியான இந்த மராத்திய திரைப்படத்திற்கு சிறந்த மராத்திய மொழி திரைப்படத்திற்கான தேசிய விருது அறிவிக்கப்பட்டுள்ளது. இத்திரைப்படத்தை 'அமேசான் ப்ரைம் வீடியோ' தளத்தில் பார்க்கலாம்.
கதல் (Kathal):
சான்யா மல்ஹோத்ரா, ஆனந்த் வி. ஜோஷி நடிப்பில் வெளியான இந்த இந்தி திரைப்படத்திற்கு சிறந்த இந்தி மொழி திரைப்படத்திற்கான தேசிய விருது அறிவிக்கப்பட்டுள்ளது. இத்திரைப்படத்தை 'நெட்ஃபிளிக்ஸ்' தளத்தில் பார்க்கலாம்.
வாஷ் (Vash):
ஹித்து கன்னோடியா, நீலம் பாஞ்சல் ஆகியோரின் நடிப்பில் வெளிவந்த இந்த குஜராத்தி திரைப்படம் சிறந்த குஜராத்தி மொழி திரைப்படத்திற்கான தேசிய விருதை வென்றுள்ளது. இத்திரைப்படத்தை 'ஷெமாரூமே' என்ற ஓடிடி தளத்தில் பார்க்கலாம்.
சினிமா விகடனின் பிரத்யேக Whatsapp க்ரூப்
https://chat.whatsapp.com/JSk78H7siYK4aL2qO1RglR
சினிமா தொடர்பான எக்ஸ்க்ளூசிவ் அப்டேட், அசத்தல் பேட்டிகள், டி.வி அப்டேட்கள் என எதையும் மிஸ் செய்யாமல் தெரிந்து கொள்ள...
உங்கள் வாட்ஸ் அப் மூலமே இணைந்திருங்கள் சினிமா விகடனுடன்...

4 months ago
6





English (US) ·