ARTICLE AD BOX
கற்றது தமிழ், தங்க மீன்கள், தரமணி, பேரன்பு திரைப்படங்களின் இயக்குநர் ராம் இயக்கத்தில் சமீபத்தில் வெளிவந்து திரையரங்குகளில் சிறப்பாக ஓடிக்கொண்டிருக்கும் படம் பறந்து போ.
பெற்றோர் - குழந்தைகள் உறவை மையமாக வைத்து எடுக்கப்பட்டுள்ள இந்த திரைப்படத்தில் மிர்ச்சி சிவா, கிரேஸ் ஆன்டனி, அஞ்சலி, அஜு வர்கீஸ், மிதுல் ரயன் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.
மகன்களுடன் நயன்Nayanthara சொல்வதென்ன?
ரசிகர்களிடம் பாஸிடிவான ரியாக்ஷன்களைப் பெற்றுவரும் இந்த திரைப்படம் குறித்து முன்னணி நடிகை நயன்தாரா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
"இந்த குழப்பமான உலகில், நீங்கள் உண்மையாகவே வாழ்க்கையை உணர விரும்பினால், உங்கள் குழந்தைகளை மலைகளுக்குக் கூட்டிச் செல்லுங்கள், அவர்களுடன் மலையேறுங்கள், அல்லது நீங்கள் சோர்ந்துபோகும் வரை குளத்தின் அருகே அவர்களுடன் விளையாடுங்கள். அல்லது எளிதாக ராம்சாரின் பறந்துபோ படத்துக்கு அழைத்துச் செல்லுங்கள், அங்கே நாம் உண்மையாகவே எதை இழந்துவருகிறோம் என்பதைக் கண்டடையுங்கள்.
இந்தப் படம் உண்மையாகவே 'முக்கியமான விஷயம்' என்ன என்பதை அழகாக நினைவுபடுத்தியிருக்கிறது. நான் பார்த்ததிலேயே ஒரு ஸ்வீட்டான திரைப்படம்" எனக் கூறியுள்ளார்.
நயன்தாரா ஸ்டோரிமேலும் அவர் இயக்குநர் ராம் மற்றும் பறந்துபோ குழுவினரை வாழ்த்தியுள்ளார்.
பறந்து போ: "மிடில் கிளாஸ் பெற்றோர்தான் போராளிகள்" - ராமின் பாஸிட்டிவ் பதில்கள்!
5 months ago
7





English (US) ·