Neeraj Chopra: கனவாக இருந்த 90 மீ இலக்கு; இந்தியா - பாகிஸ்தான் சர்ச்சை; எப்படிச் சாதித்தார் நீரஜ்?

7 months ago 8
ARTICLE AD BOX
'நீரஜ் சோப்ரா - 90 மீ மார்க்!'

நீரஜ் சோப்ரா தனது கரியரில் இதுவரை எட்டாத இலக்கை எட்டியிருக்கிறார். தோஹாவில் நடந்த டைமண்ட் லீக் தொடரில் 90.23 மீட்டருக்கு ஈட்டியை வீசி இரண்டாம் இடம் பிடித்திருக்கிறார்.

90 மீட்டர் இலக்கை தாண்ட வேண்டும் என்பது நீரஜின் நீண்ட நாள் கனவு. அதை இப்போதுதான் சாதித்திருக்கிறார்.

Neeraj Chopra - நீரஜ் சோப்ராNeeraj Chopra - நீரஜ் சோப்ரா

'பின்னணி!'

நீரஜ் சோப்ரா டோக்கியோ ஒலிம்பிக்ஸில் தங்கம் வென்றிருந்தார். அப்போது கூட 87.58 மீட்டருக்குத்தான் ஈட்டியை வீசியிருந்தார்.

அதேமாதிரி, பாரிஸ் ஒலிம்பிக்ஸிலுமே 89.45 மீட்டருக்குத்தான் ஈட்டியை வீசியிருந்தார். வெள்ளியைத்தான் வென்றிருந்தார்.

பாகிஸ்தானைச் சேர்ந்த அர்ஷத் நதீம் 92.97 மீட்டருக்கு ஈட்டியை வீசி தங்கத்தைத் தட்டிச் சென்றிருந்தார்.

நீரஜ் சோப்ரா ஒவ்வொரு தொடருக்குள் செல்லும் போதும் அவரிடம் இந்த 90 மீ மார்க் பற்றிதான் அதிகமாக கேள்வி கேட்கப்படும்.

நீரஜூக்கும் அந்த 90 மீட்டரை எப்படியாவது தாண்டிவிட வேண்டும் என்பதுதான் லட்சியமாக இருந்தது.

Neeraj Chopra - நீரஜ் சோப்ராNeeraj Chopra - நீரஜ் சோப்ரா

நீரஜ் சோப்ராவுக்கு முன் உலகளவில் 24 வீரர்கள் இந்த 90 மீட்டர் மார்க்கை தாண்டியிருக்கின்றனர்.

இப்போது ஆடிக்கொண்டிருக்கும் வீரர்களிலும் ஆண்டர்சன் பீட்டர்ஸ், அர்ஷத் நதீம், ஜூலியன் வெபர் என நிறைய பேர் 90 மீட்டரைத் தாண்டியிருக்கின்றனர்.

நீரஜ் சோப்ரா 90 மீட்டர் இலக்கை தாண்டாவிட்டாலும் அவரிடம் இருக்கும் சீரான தன்மை வேறு யாரிடமும் இருக்காது.

Neeraj Chopra - நீரஜ் சோப்ராNeeraj Chopra - நீரஜ் சோப்ரா

டோக்கியோ ஒலிம்பிக்ஸூக்குப் பிறகு 14 முறை 88-90 மீட்டர் தூரத்துக்குள் வீசியிருக்கிறார். இந்தளவுக்குச் சீராக வேறு எந்த வீரரும் வீசவில்லை.

ஆனால், அவர்களிடம் 90 மீட்டருக்கு மேலான வீச்சுகள் இருக்கும். நீரஜிடம் அது இருக்காது. அது ஒரு குறையாகவே இருந்தது.

'எட்ட முடியாத இலக்கு!'

நீரஜூம் எவ்வளவோ முயன்று பார்த்தார் 89-90 க்கு இடையே மட்டும் 6 வீச்சுகளை வீசியிருக்கிறார். சில செ.மீ இடைவெளியில் அவையெல்லாம் 90 மீ இலக்கை எட்ட தவறியிருந்தன.

Neeraj Chopra - நீரஜ் சோப்ராNeeraj Chopra - நீரஜ் சோப்ரா

2022 இல் ஸ்வீடனின் ஸ்டாக்ஹோமில் நடந்த டைமண்ட் லீக் தொடரில் 89.94 மீட்டருக்கு வீசியிருந்தார். வெறும் 6 செ.மீட்டரில் அப்போது 90 மீ மிஸ் ஆனது.

பாரிஸ் ஒலிம்பிக்ஸில் நீரஜின் சக போட்டியாளர்கள் ஏற்கனவே 90 மீட்டருக்கு மேல் வீசியவர்கள் என்கிற ஒரு சின்ன ஐயம் இருந்துகொண்டேதான் இருந்தது.

ஆனால், அதெல்லாம் எப்போதாவதுதான் வரும். மேலும், அவர்களால் நீரஜ் அளவுக்கு அழுத்தமான சூழலைக் கையாள முடியாது என்கிற நம்பிக்கை இருந்தது.

Neeraj Chopra : 'பாகிஸ்தான் வீரருடன் நெருங்கிய நட்பில் இல்லை!' - நீரஜ் சோப்ரா விளக்கம்!

ஆனாலும் சர்ப்ரைஸாக அர்ஷத் நதீம் 92.97 மீட்டருக்கு வீசினார். இதுவே நீரஜூக்குப் பெரிய அழுத்தமாகி விட்டது. 6 வாய்ப்புகளில் ஒன்றே ஒன்றை மட்டும்தான் சரியாக வீசினார்.

அது 89.45 மீட்டரில் விழுந்து வெள்ளியை மட்டுமே வாங்கிக் கொடுத்தது. அந்த 90 மீ மார்க் என்கிற எட்ட முடியாத கனவு நீரஜின் ஒலிம்பிக்ஸ் சாம்பியன் என்கிற பெருமையையே பறித்துக் கொண்டது.

பாரிஸ் ஒலிம்பிக்ஸூக்குப் பிறகு நீரஜின் ஏக்கம் இன்னும் அதிகம் ஆனது. சுவிட்சர்லாந்தின் லாசானேவில் நடந்த இதே டைமண்ட் லீகின் முதல் சுற்றில் 89.49 மீட்டருக்கு வீசினார். இந்த முறை 51 செ.மீ இல் கோட்டைவிட்டார்.

Neeraj Chopra - ZelencyNeeraj Chopra - Zelency

'புதிய பயிற்சியாளர்!'

90 மீட்டர் இலக்கைத் தொடர்ந்து எட்ட முடியாத சூழலில்தான் இந்த ஆண்டின் தொடக்கத்தில், தனக்கு 5 ஆண்டுகளாகப் பயிற்றுவித்து வந்த க்ளாஸ் பர்தோனியஷிடமிருந்து விடைபெற்றார்.

செக் குடியரசைச் சேர்ந்த ஜேன் ஜெலன்ஷி என்கிற பயிற்சியாளருடன் புதிதாக இணைந்தார். ஜெலன்ஷி தன்னுடைய கரியரில் 52 முறை 90 மீ தூரத்துக்கு மேல் ஈட்டியை வீசியவர். அவருடனான பயிற்சி நீரஜூக்கு நல்ல பலனைக் கொடுத்தது.

Neeraj Chopra - நீரஜ் சோப்ராNeeraj Chopra - நீரஜ் சோப்ரா

நீரஜின் டெக்னிக்கில் சில பயனுள்ள மாற்றங்களைச் செய்தார். நீரஜ் நீண்ட நாட்களாக இடுப்பு வலியாலும் அவதிப்பட்டு வந்தார்.

அதிலிருந்தும் இப்போது முழுமையாக மீண்டு வந்திருக்கிறார். இதன் விளைவாகத்தான் அவரால் முதல் முறையாக அந்த எட்ட முடியாத 90 மீ இலக்கை எட்ட முடிந்தது.

'இந்தியா - பாகிஸ்தான் சர்ச்சை!'

இந்தத் தொடருக்கு முன்பாக நீரஜ் மீது நிறைய அழுத்தங்கள் இருந்தது. ஈட்டி எறிதலைப் பிரபலப்படுத்தும் விதமாக Neeraj Chopra Classic என்ற தொடரை பெங்களூருவில் நடத்த திட்டமிருந்தார். அதில் உலகளவில் சிறந்த நிறைய வீரர்களுக்கு அழைப்பு விடுத்தார்.

Neeraj Chopra : 'என்னுடைய தேசப்பற்றை கேள்வி கேட்பது வேதனையாக இருக்கிறது!' - நீரஜ் சோப்ரா

பாகிஸ்தானைச் சேர்ந்த அர்ஷத் நதீமுக்கும் அழைப்பு சென்றது. இதன்பிறகுதான் இரு நாடுகளுக்கு இடையேயையும் பதற்றமான சூழல் ஏற்பட்டது.

உடனே சமூக வலைத்தளங்களில் ஏகப்பட்ட விமர்சனங்கள். 'என்னுடைய தேசப்பற்றைக் கேள்வி கேட்கிறார்கள்' என மனம் நொந்துபோய் அறிக்கைவிட்டிருந்தார்.

இந்தத் தொடருக்கு முந்தைய பத்திரிகையாளர் சந்திப்பிலும் இதைப் பற்றிதான் அவரிடம் அதிகமாக கேட்கப்பட்டது. இந்த சர்ச்சைக்கும் அழுத்தத்துக்கும் நடுவில்தான் நீரஜ் சாதித்திருக்கிறார்.

'இது ஆரம்பம்தான். இன்னும் நிறைய 90 மீ வீச்சுகள் வரும்' என நீரஜ் பேசியிருக்கிறார். அசத்துங்க நீரஜ்!

சினிமா விகடனின் பிரத்யேக Whatsapp க்ரூப்

https://chat.whatsapp.com/KzgH8aPb2MI9PVttY53JpX

சினிமா தொடர்பான எக்ஸ்க்ளூசிவ் அப்டேட், அசத்தல் பேட்டிகள், டி.வி அப்டேட்கள் என எதையும் மிஸ் செய்யாமல் தெரிந்து கொள்ள...

உங்கள் வாட்ஸ் அப் மூலமே இணைந்திருங்கள் சினிமா விகடனுடன்...

https://chat.whatsapp.com/KzgH8aPb2MI9PVttY53JpX

Read Entire Article