ARTICLE AD BOX
நெல்சன் தற்போது 'ஜெயிலர் 2' படப்பிடிப்பிலிருந்து வருகிறார். நேற்றைய தினம் (ஜூன் 21) அவருடைய பிறந்தநாளை 'ஜெயிலர் 2' படப்பிடிப்புத் தளத்தில் வைத்துக் கொண்டாடியிருந்தார்.
அந்தப் புகைப்படங்களையும் சன் பிக்சர்ஸ் நிறுவனம் பகிர்ந்திருந்தது.
Jana Nayagan: "விஜய் சார் 'ஜன நாயகன்' செட்டில் சூப்பர் கூல்!" - மமிதா பைஜூ ஷேரிங்சமீபத்தில், வெற்றிமாறன் இயக்கத்தில் சிம்பு நடிக்கவிருக்கிறார், அதற்கான ப்ரோமோவில் நெல்சனும் இடம்பெறுகிறார் எனத் தகவல்கள் பேசப்பட்டு, இணையத்தில் படப்பிடிப்புத் தளப் புகைப்படங்களும் கசிந்தன.
அந்தப் புகைப்படம் வெளியான பிறகு பலருக்கும் நெல்சன் நடிக்க வருகிறாரா என்ற எதிர்பார்ப்பு உருவாகியிருக்கிறது.
Ravi Mohan Line Up: யோகி பாபுவை இயக்கும் ரவி மோகன்; தயாரிப்பாளராக முதல் படம்- ஃபயர் மோடில் ரவி மோகன்சமீபத்தில் விகடன் பிரஸ் மீட்டில், யோகி பாபு, நெல்சன் நடிப்பின் பக்கம் வந்தால் நன்றாக இருக்கும் எனத் தெரிவித்திருந்தார். விகடன் பிரஸ் மீட்டில் அவர், "நான் நெல்சனை நடிக்கச் சொல்லி கேட்டுட்டு இருக்கேன்.
ஆனா, அவர் நடிக்க மாட்டேங்குறார். இப்போகூட நான் அவர்கிட்ட 'நெல்சன், நீ நடிக்க வா'ன்னு சொன்னேன். அவர் 'வேண்டாம்'னு சொல்லிட்டார். நெல்சன் நடிக்க வந்தா நல்லா இருக்கும். அவர் செம்ம சென்ஸிபிளான நபர்.
Yogi Babu About Nelsonயாருக்கு என்ன தெரியும், அடுத்து அவரே கதை எழுதி, அவரே நடிக்கலாம். 'டாக்டர்' படத்துல வர்ற ரெட்டின் கிங்ஸ்லி கதாபாத்திரத்துல நெல்சன் நடிக்கலாம். ஏன்னா, அந்தப் படத்துல வர்ற கிங்ஸ்லி கதாபாத்திரத்தோட தன்மை நெல்சன் கிட்ட இருக்கும் (சிரிக்கிறார்).
இந்த விஷயத்தை நான் நெல்சன் கிட்டயே சொல்லியிருக்கேன். எல்லோரும் இந்த விஷயத்தைச் சொல்லி சிரிச்சிருக்கோம்," எனக் கூறினார்.
STR 49: வெற்றிமாறன், சிலம்பரசன் படப்பிடிப்பில் இயக்குநர் நெல்சன்; மற்ற நடிகர்கள் யார், யார்?சினிமா விகடனின் பிரத்யேக Whatsapp க்ரூப்
https://chat.whatsapp.com/JSk78H7siYK4aL2qO1RglR
சினிமா தொடர்பான எக்ஸ்க்ளூசிவ் அப்டேட், அசத்தல் பேட்டிகள், டி.வி அப்டேட்கள் என எதையும் மிஸ் செய்யாமல் தெரிந்து கொள்ள...
உங்கள் வாட்ஸ் அப் மூலமே இணைந்திருங்கள் சினிமா விகடனுடன்...

6 months ago
7





English (US) ·